வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சில சமயம் சட்டென்று ஏறும்போதும், இன்னும் சில சமயங்களில் உணவுக்குழாயில் திரும்பி வரும்போதும் அது எதிர்வினையாற்றும். உணவுக்குழாயின் உட்புற சுவரை எரிச்சலூட்டும்போது ஏற்படும் நிலையை எருக்களிப்பு அல்லது GERD என்று சொல்கிறோம். இதனை ஆங்கிலத்தில் பொதுவாக Acid Reflux என்று கூறுவார்கள். நெஞ்செரிச்சலும், எருக்களிப்பு வாந்தியும் GERD-ன் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் சுவாச அமைப்பும் இதனால் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். உண்மையில், நீண்டகால சுவாசப் பிரச்சினைகள் உள்ள பலருக்கு எருக்களிப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது கூட தெரியாது.
GERD மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு இடையிலான தொடர்பு
நுரையீரல், சுவாசப்பாதை, இரண்டிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எருக்களிப்பானது அதன் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வயிற்றில் இருந்து வரும் அமிலம் சுவாசப்பாதைகளை எரிச்சலடையச் செய்து சுவாச அறிகுறிகளை ஏற்படுத்தும். இது உணவுக்குழாயில் மீண்டும் ஏறி நுரையீரலுக்குள் சுவாசிக்கப்படும்போது (உள்ளிழுக்கப்படும்போது) ஏற்கனவே இருக்கும் சுவாச பிரச்சனைகளையும் அதிகரிக்கும். இரவில் நீங்கள் சாய்ந்து படுத்திருக்கும்போது இது பெரும்பாலும் நிகழும்.
GERD உடன் தொடர்புடைய பொதுவான சுவாச அறிகுறிகள்
எருக்களிப்பு நிலை உள்ள நோயாளிகள் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்:
- நாள்பட்ட இருமல்
- மூச்சுத்திணறல்
- ஆஸ்துமா போன்ற அறிகுறிகள்
- மீண்டும் வரும் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் நெஞ்செரிச்சலின் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாமல் ஏற்படுகின்றன. இதனால் GERD தொடர்பான சுவாசப் பிரச்சினைகளைக் கண்டறிவதில் கடினம் உண்டாகும்.
GERD-ம் ஆஸ்துமாவும் இருவழி பாதைகள்
GERD மற்றும் ஆஸ்துமா இடையேயான தொடர்பு நன்கு நிறுவப்பட்டுள்ளது. எருக்களிப்பு சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதன் மூலமோ அல்லது நுரையீரலை சுருங்கச் செய்யும் நரம்புகளை செயல்படுத்துவதன் மூலமோ ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கும். ஆஸ்துமா மருந்துகள் கீழ் உணவுக்குழாய் சுழற்சியை தளர்த்துவதன் மூலமோ அல்லது வயிற்று அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமோ செயல்படுகின்றன. ஆனால் மறுபுறம், இந்த ஆஸ்துமா மற்றும் அது தொடர்புடைய மருந்துகள் (உள்ளிழுக்கும் ஸ்டீராய்டுகள் போன்றவை) அத்தகைய இதே செயல்பாடுகளை கொண்டுள்ளதால், எருக்களிப்பு நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும்.
இரவு நேர எருக்களிப்பு ஏன் பிரச்சனையானது?
நீங்கள் தலை சாய்த்து படுத்துக் கொள்ளும்போது எருக்களிப்பு மோசமடையக்கூடும். உடல் பருமனாக இருப்பவர்கள் மல்லாந்து படுக்கும்போது, அவர்களது தொப்பை பருமன் வயிற்றையும், உணவுக்குழாயையும் அழுத்துகிறது. இதுவும் எருக்களிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தான் நாம் தூங்கும்போதே எருக்களிப்பு பெரும்பாலும் நிகழ்கிறது.
அதுமட்டுமில்லாமல் வயிற்று அமிலமானது நுரையீரலுக்குள் இரவு நேரத்தில் இயல்பாக செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதன் விளைவாக இருமல், இரவில் ஆஸ்துமா தாக்குதல்கள் அல்லது நுரையீரல் அழற்சி, வடுக்கள் கூட காலப்போக்கில் ஏற்படலாம்.
மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்குத் தான் சாப்பிட்டவுடன் உடனே படுக்கக்கூடாது என்று சொல்வார்கள். சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் 2-3 மணிநேரம் கழித்தே படுக்க வேண்டும். படுக்கும்போது இடது புறமாக திரும்பிப் படுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்க GERD-ஐ நிர்வகித்தல்
சுவாசத்தில் GERD-யின் தாக்கத்தைக் குறைக்க, பின்வரும் விஷயங்களைச் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது:
- உங்கள் படுக்கையின் தலைப்பகுதியை 6 முதல் 8 அங்குலம் வரை உயர்த்தவும்.
- படுக்கை நேரத்தில் விருந்தையும், அமில உணவுகளையும் தவிர்க்கவும்.
- வயிற்றில் அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்.
- புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும் – இவை இரண்டும் உணவுக்குழாயில் உள்ள sphincter என்ற அமைப்பை தளர்த்தும்.
- ஆன்டாசிட்கள், H2 blockers அல்லது proton pump inhibitors போன்ற மருந்துகளை பரிந்துரைத்தபடி பயன்படுத்தவும்.
எப்போது சிகிச்சை பெற வேண்டும்?
விவரிக்க முடியாத சுவாசப் பிரச்சினைகள் இருந்தால், இரைப்பை குடல் நிபுணர் மற்றும் நுரையீரல் நிபுணரை சந்திப்பது முக்கியம் ஆகும். இரவு நேரத்திலோ அல்லது உணவுக்குப் பின்னரோ இந்த நிலை ஏற்படும்போது இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சுவாச அறிகுறிகள் GERD அறிகுறிகளுடன் தொடர்புடையதா என்பதைக் கண்டறிய ஒருங்கிணைந்த சிகிச்சை உங்களுக்கு உதவும். இரண்டு கோளாறுகளும் ஒருசேர இருக்கும்போது நீங்கள் சிறந்த சிகிச்சையைப் பெறுகிறீர்கள் என்பதை இது உறுதி செய்யும்.
எருக்களிப்பு என்பது வெறும் செரிமானப் பிரச்சனை மட்டுமே அல்ல. அதற்கு மேல் நிறைய இருக்கிறது. நீங்கள் அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால், அது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். GERD உங்கள் சுவாசப் பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டால் தான் சரியான நோயறிதல், சிகிச்சை மற்றும் பொதுவான சுகாதார விளைவுகளை உறுதி செய்ய முடியும்.
