Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

நெஞ்செரிச்சலையும், மாரடைப்பையும் எப்படி வித்தியாசப்படுத்துவது?

நெஞ்செரிச்சலும், அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண்ணும், தரக்கூடிய அறிகுறிகள் நெஞ்சுக்குள் ஏற்படுத்தும் வலி மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சு வலியோ என்று பலர் எண்ணுவர். நெஞ்செரிச்சலோ, மாரடைப்போ ஒருவருக்கு முதன்முதலில் ஏற்படுகிறது என்றால், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு நிறைய பேருக்கு தெரிவதில்லை. அது மட்டுமில்லை, திரும்ப திரும்ப அத்தகைய வலி ஏற்படும்போது, அது குறித்த தெளிவு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.

நெஞ்செரிச்சலுக்கும், மாரடைப்புக்கும் உள்ள ஒரே மாதிரியான அறிகுறிகள்

மாரடைப்புக்கு மட்டுமே உரிய அறிகுறிகள் 

யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்?

நெஞ்செரிச்சலுக்கு மட்டுமே உரிய அறிகுறிகள் 

மாரடைப்பையும், நெஞ்செரிச்சலையும் எப்படி உறுதி செய்வது?

உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?

சென்னையில் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மாறன் அவர்கள் நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே அது மாரடைப்பு இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். தாங்க முடியாத நெஞ்சு வலி ஏற்படும் பட்சத்தில், உடனே ஏதாவது மருத்துவமனையின் எமெர்ஜென்சியில் சேர்ந்து ECG எடுத்துக்கொள்ளவும். பாதுகாப்பிற்கு ஒரு ஆஸ்பிரின் (350 mg)  மாத்திரையை உங்கள் பையில் எப்போதும் வைத்திருங்கள்.

நெஞ்செரிச்சலைக் காட்டிலும் மாரடைப்பை கண்டுபிடிப்பதற்கே முக்கியத்துவம் தரவேண்டும். ஏனென்றால் நெஞ்செரிச்சல் உயிரை கொல்லாது ஆனால் வலிமையான மாரடைப்பு ஆளையே கொல்லும். இந்த கட்டுரையில் நெஞ்செரிச்சலையும், மாரடைப்பையும் வேறுபடுத்திப் பார்க்க சொல்லப்பட்டு இருந்தாலும், உங்கள் நெஞ்சு வலி அதிகமாக இருந்தால் உடனே ஆம்புலன்சை அழைத்து முதலுதவி எடுத்துக்கொள்வது நல்லது. நெஞ்சக நிபுணர் உங்களை பரிசோதித்து மாரடைப்பு இருக்கிறது, இல்லை என்று உங்களுக்கு அறிக்கை கொடுப்பதே முதன்மையானது. மாரடைப்பு இல்லை என்று உறுதியானால், பின்பு வயிறு சம்பந்தப்பட்ட நிபுணரிடம் எண்டோஸ்கோபி செய்துக்கொண்டு நெஞ்செரிச்சல் என்று சொல்லக்கூடிய GERD இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளலாம். அதனால் தான் இல்லாத மாரடைப்பை பரிசோதித்து பார்த்து இல்லை என்று ஆனாலும் அது ஒரு வகையில் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

Exit mobile version