Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் ஹெர்னியாவுக்கான சிகிச்சை

சுகப்பிரசவ முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது சிறந்தது என்றாலும், குழந்தையின் முறையற்ற நிலை, கருவிற்கு ஏற்படும் துன்பம், உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் போன்ற சில மருத்துவ நிலைமைகள் பெண்களை சாதாரண பிரசவத்திற்கு அனுமதிக்காது. இத்தகைய சமரச சூழ்நிலைகளில், நீங்கள் சிசேரியன் செய்துக் கொள்ளுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். சிசேரியன் அல்லது சி-செக்ஷன் (C-Section) என்று அழைக்கப்படுவது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இது தாயின் வயிறு மற்றும் கருப்பையில் சிறிய கிழிசல் ஏற்படுத்தப்பட்டு அந்த அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வைப்பதாகும். மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பிரசவத்துடன் தொடர்புடைய சிக்கல்கள், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறுவை சிகிச்சை முறை உதவி புரிந்துள்ளன என்றால் அது மிகை ஆகாது. சிசேரியன் செய்துக் கொண்டால் சிலருக்கு அரிதாக ஹெர்னியா ஏற்படலாம்.

ஹெர்னியா என்றால் என்ன?

வயிற்றுத் தசை சுவரில் பலவீனமான பகுதி வழியாக குடல் அல்லது வயிற்றில் உள்ள உறுப்புகளின் ஒரு பகுதி பிதுங்கி வெளியேறும்போது குடலிறக்கம் அல்லது ஹெர்னியா ஏற்படுகிறது. குடலிறக்கம் பொதுவாக தானாக சரியாவதில்லை. மருந்துகளால் கூட அதற்கு சிகிச்சையளிக்க முடியாது. குடலிறக்கங்களுக்கு சிகிச்சையளிக்க நிச்சயமாக அறுவை சிகிச்சை முறையே தேவைப்படும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் குடலிறக்கத்தை இன்சிஷனல் வகை குடலிறக்கம் என்று கூறுவார். எனவே சிசேரியன் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் எந்த குடலிறக்கமும் இன்சிஷனல் ஹெர்னியாவாக மட்டுமே இருக்க முடியும்.

சிசேரியனுக்குப் பிறகு இன்சிஷனல் ஹெர்னியா ஏற்பட காரணங்கள் யாவை?

சிசேரியனுக்குப் பிறகு ஏற்படும் இன்சிஷனல் ஹெர்னியாவுக்கான சிகிச்சை

வழக்கமாக, இன்சிஷனல் ஹெர்னியாவிற்கு கிடைக்கக்கூடிய ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சை மட்டுமே ஆகும். முன்னர் குறிப்பிட்டபடி, எந்த வகையான குடலிறக்கத்திற்கும் சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை, அவை அறுவை சிகிச்சை இல்லாமல் தானாகவே போவதுமில்லை.

பொதுவாக, சிசேரியன் செய்துக் கொண்ட பிறகு ஏற்படும் இந்த வகை ஹெர்னியா பிரசவத்திற்குப் பிறகு பல மாதங்கள் கழித்தே கண்டறியப்படுகிறது. எனவே, இன்சிஷனல் வகை குடலிறக்கம் இருப்பதை நோயறிதல் மூலம் உறுதிப்படுத்தினால், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹெர்னியா சிக்கலலான நிலையை அடையும் வாய்ப்பு இந்த வகை குடலிறக்கத்திற்கு அதிகம் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

அறுவைசிகிச்சை ஒரு முழுமையான திறந்த அறுவை சிகிச்சை அணுகுமுறையிலோ அல்லது லேபராஸ்கோபிக் அணுகுமுறையிலோ செய்யப்படுகிறது. எந்த வகையில் செய்தால் நன்மை என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.

Exit mobile version