Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

ஹெர்னியா அறுவை சிகிச்சைக்கு, திறந்த முறை, லேப்ராஸ்கோபிக் முறை – இதில் எது சிறந்தது?

குடலிறக்க அறுவை சிகிச்சை என்பது அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில், பலவீனமான அல்லது கிழிந்த தசைகளை சரிசெய்ய செய்யப்படுகிறது. குடலிறக்கத்தை சரிசெய்ய திறந்த அறுவை சிகிச்சை முறை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறை, என்று இரண்டு முக்கிய நுட்பங்கள் உள்ளன. இரண்டு அணுகுமுறைகளிலும், நன்மைகள், குறைகள் உள்ளன. இந்த பதிவில், திறந்த முறையிலும், லேப்ராஸ்கோபிக் முறையிலும், குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதை ஒப்பீடு செய்வோம். இதன் மூலம் உங்கள் ஹெர்னியா அறுவை சிகிச்சை தேவையில் எந்த அணுகுமுறை சிறந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

திறந்த முறை ஹெர்னியா அறுவை சிகிச்சையைப் புரிந்துகொள்வோம்

  1. செயல்முறை – ஒரு கண்ணோட்டம்

குடலிறக்கம் பழுதுபார்ப்பு பழைய முறை என்று இந்த முறை அறியப்படுகிறது. இந்த செயல்முறையில் குடலிறக்கம் இருக்கும் இடத்தில் நேரடியாக ஒரு பெரிய கீறலை ஏற்படுத்தி திறக்கப்படுகிறது. தையல்களை பயன்படுத்தியோ, செயற்கை ஹெர்னியா மெஷ்ஷை பயன்படுத்தியோ பாதிக்கப்பட்ட பகுதியை வலுப்படுத்துவதற்கு, பிதுங்கி தொங்கும் திசுக்களை மீண்டும் அதன் நிலைக்குத் தள்ளுவார் அறுவைசிகிச்சை நிபுணர்..

  1. நிறைகள்

  1. குறைகள்

லேப்ராஸ்கோபிக் ஹெர்னியா அறுவை சிகிச்சையைப் புரிந்துகொள்வோம்

  1. செயல்முறை – ஒரு கண்ணோட்டம்

லேப்ராஸ்கோபிக் குடலிறக்க அறுவை சிகிச்சையின் போது, ​​5 மிமீ முதல் 10 மிமீ வரை தடிமன் கொண்ட பல சிறிய ஓட்டைகளை வயிற்றுப்பகுதியில் ஏற்படுத்தி, ஒரு கேமரா மற்றும் சிறப்பு கருவிகள் அறுவை சிகிச்சை நிபுணரால் அதில் நுழைக்கப்படுகின்றன. இந்த செயல்முறையில் ஹெர்னியா மெஷ்ஷை குடலிறக்க பகுதியில் நிலையாக வைக்க லேப்ராஸ்கோபிக் உபகரணங்களையும், அதனோடு இருக்கும் கேமராவையும் பயன்படுத்தி, குடலிறக்கம் குணமாக்கப்படுகிறது.

  1. நிறைகள்

  1. குறைகள்

திறந்த மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு இடையே எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள்

  1. ஹெர்னியா வகையும் அளவும்

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை அணுகுமுறை குடலிறக்கத்தின் இடம், அளவு மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுது அமையும். சிறிய, குறைவான சிக்கல் வாய்ந்த குடலிறக்கங்களுக்கு, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் பெரிய, மிகவும் கடுமையான ஹெர்னியாக்களுக்கு திறந்த அறுவை சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.

  1. நோயாளியின் உடல்நல வரலாறு

நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலம், மருத்துவப் பின்னணி, முந்தைய அறுவை சிகிச்சை வரலாறு ஆகியவற்றால் அறுவை சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த காலத்தில் விரிவான அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நோயாளிகள், லேப்ராஸ்கோபிக் முறைக்கு பொருத்தமானவர்களாக இருக்க மாட்டார்கள்.

  1. அறுவை சிகிச்சை நிபுணத்துவம்

அறுவை சிகிச்சை நிபுணரின் பயிற்சி மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் அதிக நிபுணத்துவம் ஒரு அணுகுமுறையை விட மற்றொரு அணுகுமுறையில் இருந்தால் அறுவை சிகிச்சை முடிவு தீர்மானிக்கப்படலாம்.

குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான பயனுள்ள முறைகள், திறந்த மற்றும் லேபராஸ்கோபிக், ஆகிய இரண்டு செயல்முறைகளாலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் நிறைகளும், குறைகளும் உள்ளன. குடலிறக்கத்தின் விவரங்கள், நோயாளியின் மருத்துவ நிலை, அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவ நிலை உள்ளிட்ட பல காரணிகளுக்கு ஏற்ப உகந்த முறை தீர்மானிக்கப்படுகிறது. உங்களுடைய குறிப்பிட்ட ஹெர்னியா பிரச்னைக்கு எந்த முறை சிறப்பாக இருக்கும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசனையைப் பெறுவது முக்கியம். நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்வதன் மூலம் இது குறித்து மேலும் புரிதல் ஏற்படும்.

Exit mobile version