நாம் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பற்றி நினைக்கும்போது, உடனடியாக அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ள ஒருவரின் படம் நம் மனதில் தோன்றும். அது சரியென்றே நமக்கு தோன்றும். அதிக உடல் கொழுப்பு என்றால் அதிக கல்லீரல் கொழுப்பு என்று அர்த்தம். ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானதுமட்டுமல்ல, அது நம்மை தவறாகக்கூட வழிநடத்தும். சாதாரண உடல் எடை உள்ள பலருக்கும் அவர்களின் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு இருப்பதை பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த கோளாறு இப்போது லீன் MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. இதில் வியப்பான ஒரு விஷயம் என்னவென்றால், ஒல்லியானவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால், உடல் பருமன் உள்ளவர்களை விட கல்லீரல் தொடர்பான காரணங்களால் இறக்கும் வாய்ப்பு அவர்களுக்கே அதிகம் ஆகும்.
லீன் ஃபேட்டி லிவர் என்றால் என்ன?
சாதாரண BMI உள்ளவர்களுக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு (steatosis) இருப்பது லீன் ஃபேட்டி லிவர் என்று அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் பெரும்பாலான இந்தியர்களுக்கு 23 கிலோ/மீ² க்கும் குறைவான BMI இருக்கிறது என்பதே ஆகும். உலகளவில், அனைத்து கொழுப்பு கல்லீரல் நிகழ்வுகளில் தோராயமாக 10-20% ஒல்லியான நபர்களில் ஏற்படுகின்றன. ஆனால் இந்திய மக்கள்தொகையில் இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இது அநேகமாக 22% வரை இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின் படி, உலகளவில் NAFLD உள்ளவர்களில் 19.2% பேர் ஒல்லியானவர்களாகவும், 40.8% பேர் உடல் பருமன் இல்லாதவர்களாகவும் இருந்தனர். இந்தியாவில், “தின்-ஃபேட் ஃபினோடைப்” (மெலிந்த உடல் ஆனால் அதிக உள்ளுறுப்பு கொழுப்பு) இந்த நிலையை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது.
இது ஏன் நிகழ்கிறது? மறைக்கப்பட்ட வழிமுறைகள்
மெலிந்த நபர்கள் கொழுப்பு கல்லீரல் நிலையை அடைய பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான காரணங்கள் அடிப்படை உடல் எடைக்கு அப்பால் செல்கின்றன:
- மரபியல் (Genetics): மரபணு வழி காரணம் என்பது மிக முக்கியமான ஒரு காரணியாகும். BMI ஐப் பொருட்படுத்தாமல், PNPLA3, TM6SF2 மற்றும் MBOAT7 போன்ற மரபணுக்களில் ஏற்படும் மாறுபாடுகள் கல்லீரல் கொழுப்பு உருவாவதற்கான வாய்ப்பினை பெரிதும் அதிகரிக்கின்றன. PNPLA3 GG மாறுபாடு உடல் பருமன் உள்ள நோயாளிகளை விட மெலிந்த MASLD நோயாளிகளில் அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral Fat): சாதாரண BMI இல் கூட, இந்தியர்களுக்கு தோலின் கீழ் கொழுப்பு சேர்வதற்கு மாறாக, உள் உறுப்புகளைச் சுற்றி கொழுப்பைக் குவிக்கும் போக்கு மரபு ரீதியாக இருக்கிறது. இந்த உள்ளுறுப்பு கொழுப்பு உடலியல் ரீதியாக செயல்படும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பு படிவதைத் தூண்டுகிறது.
- இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance): கொழுப்பு கல்லீரல் உள்ள பெரும்பாலான மெலிந்தவர்களுக்கு கடுமையான இன்சுலின் எதிர்ப்பு நிலை உள்ளது. இந்த நிலை அவர்கள் உடல் பருமன் இல்லாவிட்டாலும் கல்லீரலில் கொழுப்பு குவிந்து சேர்வதை ஊக்குவிக்கிறது.
- உணவு காரணிகள் (Dietary Factors): Saturated கொழுப்புகள் அதிகம் உள்ள மேற்கத்திய உணவுமுறை, அதிக fructose உட்கொள்ளல் (பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களிலிருந்து) புரதம் குறைபாடுள்ள உணவு, ஆகியவை ஒல்லியானவர்களில் NAFLD நிலை வருவதற்கான முக்கிய காரணிகளாகும்.
- குடல் நுண்ணுயிரியம் (Gut Microbiome): ஒல்லியான NAFLD நோயாளிகளோடு உடல் பருமன் உள்ள NAFLD நோயாளிகளை ஒப்பிடும்போது வேறுபட்ட குடல் நுண்ணுயிரி அமைப்பு அவர்களுக்கு இருப்பதை பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது குடல் டிஸ்பயோசிஸ் (gut dysbiosis) நிலைக்கு ஒரு பங்கு வகிக்கிறது என்பதை தெளிவாகக் குறிக்கிறது.
கடுமையான விளைவுகளைக் கொண்ட மறைக்கப்பட்ட ஒரு ஆபத்து
முக்கியமான ஒரு விஷயம் பேசியாக வேண்டும். ஒல்லியானவர்களின் கொழுப்பு கல்லீரல் என்பது நோயின் சாதாரண வடிவம் என்று நினைக்கக்கூடாது. அதிக எடை/உடல் பருமன் உள்ள MASLD நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, மெலிந்த MASLD நோயாளிகளுக்கு கல்லீரல் தொடர்பான இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை பல ஆராய்ச்சிகள் குறிக்கின்றன. அவர்களுக்கு இதய நோய்கள், cirrhosis (சிரோசிஸ்), கல்லீரல் புற்றுநோய் முன்னேறுவது, போன்றவற்றிற்கும் அதே விதமான ஆபத்துகள் இருந்தன. மெலிந்த NAFLD நோயாளிகளில் 29.2% பேருக்கு குறிப்பிடத்தக்க fibrosis நிலை (ஸ்டேஜ் ≥2) இருந்ததை மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 39% பேர் நான்-ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் (NASH) நிலையை ஐ அடைந்தனர். உடல் பருமன் இல்லாததால் தாமதமான நோயறிதல் ஏற்படுகிறது. இந்த காரணி நோய் அமைதியாக மோசமடைய அனுமதிக்கிறது.
நோயறிதலும், கொழுப்பு கல்லீரல் மேலாண்மை: நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை அளவிட BMI ஐ மட்டுமே நீங்கள் நம்பக்கொண்டு இருக்க முடியாது. நீங்கள் அதிக உடல் எடை இல்லாவிட்டாலும், உங்களுக்கு சர்க்கரைநோய் அல்லது கொழுப்பு கல்லீரலின் குடும்ப வரலாறு இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு அதிக triglycerides அல்லது இன்சுலின் எதிர்ப்பு போன்ற வளர்சிதை மாற்ற ரிஸ்க் காரணிகள் இருந்தால் NAFLD இருக்கிறதா என்று பரிசோதித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இடுப்பு சுற்றளவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். அது தவறாக நம்மை வழி நடத்தலாம்.
Lean கொழுப்பு கல்லீரல் நிலை மேலாண்மை என்பது தீவிர உடல் எடை இழப்பை விட வளர்சிதை மாற்றத்தை சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறது:
- உணவுமுறை: மீன், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் ஆலிவ் / தேங்காய் எண்ணெய் நிறைந்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- உடல் செயல்பாடு: மெலிந்த NAFLD நோயாளிகளில் பொதுவாக காணப்படும் Sarcopenia (தசை இழப்பு) நிலையை எதிர்கொள்ள, வாரத்திற்கு 150-200 நிமிட மிதமான-தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியையோ, strength training உடற்பயிற்சியையோ செய்யுங்கள்.
- ஆல்கஹால் மற்றும் ஹெபடோடாக்ஸிக் சப்ளிமெண்ட்களை தவிர்க்கவும்: பல மூலிகை “கல்லீரல் டானிக்குகள்” ஆபத்தானவை என்பதை மறக்க வேண்டாம். மிதமான குடிப்பழக்கமும் கூட கல்லீரலில் கொழுப்பு படிவத்தை துரிதப்படுத்தும்.
- மருத்துவ மேலாண்மை: வாழ்க்கை முறை மாற்றங்கள் தொடர்ந்து சிகிச்சையின் முக்கிய அம்சமாக உள்ளன. இருந்தாலும் GLP-1 receptor agonists போன்ற புதிய மருந்துகள் நம்பிக்கையை தருகின்றன.
சென்னையில் கல்லீரல் ஆரோக்கிய பரிசோதனை – Liver Health Screening in Chennai
சென்னை மக்களுக்கு, கொழுப்பு கல்லீரலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 21-40 வயதுடைய பரிசோதிக்கப்பட்ட பெரியவர்களில் 61.5% பேருக்கு NAFLD இருப்பது கண்டறியப்பட்டது. தென்னிந்தியாவில் நாட்டில் MASLD இன் அதிகபட்ச பாதிப்பு (40.1%) இருப்பதால், சென்னையில் உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு அல்லை. உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், உங்களுக்கு உடல் பருமன் இருக்கிறதோ, இல்லையோ, இரைப்பை குடல் மருத்துவர் அல்லது ஹெபடாலஜிஸ்ட்டை அணுகி அவர் கூறும் மருத்துவ பரிந்துரையை ஏற்று நடந்துக்கொள்ளுங்கள். சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகள் மேம்பட்ட ஃபைப்ரோஸ்கேன் (FibroScan) உள்ளிட்ட விரிவான கல்லீரல் பரிசோதனையை வழங்குகின்றன. ஆரம்பகால கண்டறிதலே சிறந்த பாதுகாப்பு என்பதை மறக்க வேண்டாம்.
