Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உடலில் உள்ள ஹெர்னியா மெஷ் காலப்போக்கில் என்னவாகிறது?

தற்போதுள்ள குடலிறக்கத்தை சரிசெய்வதற்காக உடலில் உள்ள ஹெர்னியா மெஷ் என்னும் குடலிறக்க மெஷ் காலப்போக்கில் என்னவாகிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். கேட்கப்படும் பல கேள்விகளில், பொதுவான கேள்வி என்னவென்றால், குடலிறக்க மெஷ் காலப்போக்கில் கரைந்துவிடுமா என்பதே. குடலிறக்க அறுவை சிகிச்சையின் போது குடலிறக்கக் மெஷ் ஹெர்னியா கண்ட உடலுக்குள் வைக்கப்பட்ட பிறகு அதற்கு என்ன ஆகும் என்பதை இந்தக் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்வோம்.

ஹெர்னியா மெஷ் பற்றிய சில சந்தேகங்கள்

ஹெர்னியா மெஷ் குடலிறக்கம் உருவாகிய பகுதியில் பலவீனமான பகுதியை வலுப்படுத்துகிறது. இது பொதுவாக உடலில் எப்போதுமே நிலையாக இருக்கும். ஹெர்னியா மெஷ் குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பதில்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

(1) ஹெர்னியா மெஷ் காலப்போக்கில் உடலில் கரைகிறதா?

(2) ஹெர்னியா மெஷ் கனமாக இருக்குமா?

(3) குடலிறக்க மெஷ் உடலுக்குள் இருக்கும் போது நோயாளிகள் கூடுதல் கவனம் எதையாவது எடுக்க வேண்டுமா?

(4) ஹெர்னியா மெஷ்கள் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா?

ஹெர்னியா மெஷ் உடலில் காலப்போக்கில் கரைந்து விடுகிறதா?

சந்தையில் பல்வேறு வகையான ஹெர்னியா மெஷ்கள் கிடைக்கின்றன. அவை கரையக்கூடிய (absorbable) மெஷ், கரைய முடியாத (non-absorbable) மெஷ் என்று பொதுவாக இரு வகைகளில் இருக்கும். பெயரில் உள்ளது போல, கரையக்கூடிய மெஷ்கள் கரைந்து, காலப்போக்கில் உடல் திசுக்களால் உறிஞ்சப்படுகின்றன. ஆனால் தற்போது நவீன அறுவை சிகிச்சைகளில் கரையக்கூடிய மெஷ்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் இந்த இரண்டு வகையினுள் எந்த வகையை பயன்படுத்துவது என்பதை பெரும்பாலும் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணரே தீர்மானிக்கிறார். அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த வகையை தற்போது பயன்படுத்துகின்றனர். இங்குவினல் கால்வாயில் மெஷ்களைப் பயன்படுத்தும்போது, பெரும்பாலும் புரோலைனால் (proline) செய்யப்பட்ட செயற்கை மெஷ்களே பயன்படுத்தப்படுகிறது. குடலிறக்க பகுதி அடிவயிற்றில் இருந்தாலோ, குடலிறக்க மெஷ் அடிவயிற்று உறுப்புகளுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலோ, பூச்சுகளுடன் (coatings) கூடிய சிறப்பு மெஷ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சு குடலிறக்க மெஷ் உட்புற உறுப்புகளுடன் தன்னை இணைத்துக்கொள்வதை தடுக்கிறது.

ஹெர்னியா மெஷ்கள் கனமாக இருக்கின்றனவா?

இல்லவே இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் ஹெர்னியா மெஷ்கள் மிகவும் எடை குறைந்தவை ஆகும். பொதுவாக, ஹெர்னியா மெஷ்களின் எடை சுமார் 10 முதல் 20 கிராம் வரை தான் இருக்கும்.

குடலிறக்க மெஷ்கள் உடலுக்குள் இருக்கும்போது நோயாளிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமா?

உண்மையில் அதற்கான தேவையே இல்லை என்று தான் சொல்லவேண்டும். குடலிறக்க மெஷ்களில் உள்ள  சிக்கல்களில் ஒன்றாக, குடலிறக்கம் ஏற்பட்ட இடத்தில் அது நழுவுவதற்கான வாய்ப்புகளை கூறலாம். இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தாலும், நோயாளி மிகவும் பருமனாக இருந்தால் இது சாத்தியப்படலாம். எனவே நோயாளி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்று இருந்தால், அது அவர்களின் உடல் எடை ஆகும். இது அரிதான நிகழ்வுகளில் மட்டுமே நிகழ்கிறது என்றாலும், நல்ல வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நமது உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது தானே.

ஹெர்னியா மெஷ்கள் ஏதேனும் சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்துமா?

தொற்று, உத்தேசிக்கப்பட்ட நிலையில் இருந்து நழுவுதல், உள் உறுப்புகளைத் தொடும்போது எரிச்சல் ஏற்படுதல், வலி போன்றவை குடலிறக்கக் மெஷ்களால் ஏற்படும் சில சிக்கல்கள் என்று கூறலாம். ஆனால் இந்தச் சிக்கல்கள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன என்பதையும், சிலருக்கு மட்டுமே இது ஏற்படலாம் என்பதையும் அழுத்திக் கூறவேண்டும். ஏனென்றால் இந்த நவீன யுகத்தில் மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சி காரணமாக, குடலிறக்க மெஷ்கள் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version