எடை குறைப்புக்காக உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்யும் நபர்கள், அல்லது எடை இழப்பு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆசனவாய் பிரச்சனை பற்றி பொதுவாக புகார் செய்கிறார்கள். அவர்களால் எடை இழப்பு முறையை பொதுவாக தொடர முடிவதில்லை. அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்னென்ன. அதற்கான தீர்வுகள் என்னென்ன?
ஏராளமான மக்கள் தங்கள் எடை இழப்பு பயணத்தை தொடர முடியவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். உணவின் உட்கொள்ளல் குறைவாக இருக்கும்போது, மல வெளியேற்றமும் குறைகிறது. இது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். இது ஆரம்பத்தில் ஆசனவாய் பிளவுக்கு (Fissures) வழிவகுக்கும். மலச்சிக்கலை மிக நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாமல் விட்டுவிட்டால், அது மூலநோய்க்கு வழிவகுக்கிறது.
அடுத்த காரணம், உடல் எடை குறையும் போது, உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் போதுமான அளவு நீரை அருந்தவில்லை என்றால், குடலியக்கம் வறண்டு போகலாம், இது ஆசனவாய் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். உள்ளுக்குள் மலம் உலரும்போது அது இறுகும். இந்த இறுகிய மலம் வெளியே தள்ளப்படும்போது ஆசனவாய் பிளவை ஏற்படுத்தலாம். ஆசனவாய்ப் பகுதியின் மென்மையான திசுக்களைக் கிழித்து வெளியேறுவதால் பிளவை ஏற்படுத்துகிறது. அந்த நபருக்கு ஏற்கனவே மூலநோய் இருந்தால், அது மூலநோயின் நிலையை மோசமாக்கும். அதற்கு அடுத்த காரணம் எடையைக் குறைப்பது பிட்டத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இது ஒருவித குத்தும் உணர்வை ஆசனவாயில் ஏற்படுத்தும்.
ஆசனவாய் பிரச்சனையை தடுக்கவும், உணவு மற்றும் உடற்பயிற்சியை தொடரவும் உள்ள வழிகள்
– எப்போதும் படிப்படியாகவே எடை இழப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
– போதுமான அளவு நீர் அருந்துங்கள். உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். சர்க்கரை கலந்த பானங்களை தவிருங்கள். தண்ணீர் எப்போதுமே சிறந்த தேர்வு என்பதை மறக்காதீர்கள்.
– அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளின் பட்டியலை உருவாக்கி அவற்றை உங்கள் உணவில் தினமும் சேர்ப்பதை முக்கியமாக்குங்கள். கீரைகளும், காய்கறிகளும் மிகவும் நல்ல தேர்வாகும்.
– உங்கள் ஆசனவாய் பிரச்சனை நீடித்தால் அல்லது அது நிவாரணம் பெறவில்லை என்றால் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகவும். உங்கள் ஆசனவாய் பிரச்சனை அல்லது மலச்சிக்கலை எளிதாக்க ஒரு மலமிளக்கியை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
– ஆசனவாய் பகுதியில் உள்ள வலியைக் குறைக்க உங்கள் மருத்துவர் சிட்ஸ் குளியலை பரிந்துரைக்கலாம். வெதுவெதுப்பான நீர் நல்ல விளைவைக் கொண்டிருப்பதால், சிட்ஸ் குளியலில் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.