Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உடல் பருமனுக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பு

உயர் இரத்த அழுத்தம் உள்ளோருக்கு தமனிகள் வழியாக இரத்தம் சாதாரண அழுத்தத்தை விட அதிகமாக பாய நேரிடுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பது பல நோய்நிலைகளுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனுக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி இங்கே விரிவாக விவாதிப்போம்.

உயர் இரத்த அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய முடியும்?

இரத்த அழுத்தம் இயல்பான அளவில் இருக்க, சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 140 க்கு குறைவாகவும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 90 ஆகவும் இருக்க வேண்டும்.

உடல் பருமன் எவ்வாறு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது?

உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு உடல் பருமன் உயர் இரத்த அழுத்தத்தை வரவழைக்கும் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. பருமனான ஒருவருக்கு ஏற்கனவே இருக்கும் உயர் இரத்த அழுத்தத்தையும் இது மோசமாக்குகிறது.

கொழுப்பு திசுக்களின் இருப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு (visceral fat) உள்ளிட்டவை, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தூண்டுவதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் உயர் இரத்த அழுத்தத்தை மோசமாக்குவதற்கு ஒரு வினையூக்கியாக செயல்படும். தூண்டப்பட்ட மாற்றங்களையும், அவற்றின் விளைவுகளையும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் சுருக்கமாக விவாதிக்கிறது கீழே உள்ள பட்டியல்.

1. வழக்கத்தை விட அதிக வேலை செய்யும் இதயம்

பருமனான நபரின் இதயம் அதிக அழுத்தத்தில் கூடுதல் பம்ப் செய்ய போராட வேண்டும். இதனால் மட்டுமே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் சென்றடையும். இது நிச்சயமாக இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுவே பருமனானவர்களிடையே இதய நோய்களும் பொதுவானதாக இருப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதயத்தின் மீதான இந்த கூடுதல் அழுத்தம், கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் (Uncontrolled) உள்ள நிலையில், எதிர்ப்பு உயர் இரத்த அழுத்தம் (Resistant Hypertension) என்று இது அழைக்கப்படுகிறது.

2. Sympathetic நரம்பு மண்டலம் அதிகமாக தூண்டப்படுதல்

சண்டையிடு-அல்லது-தப்பிவிடு அமைப்பு என்று அழைக்கப்படும் அனுதாப நரம்பு மண்டலம் (sympathetic nervous system), உடலின் வளர்சிதை மாற்றத்திலும், இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தொப்பை பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பு, சில ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க காரணமாகிறது. இந்த ஹார்மோன்கள் அனுதாப நரம்பு மண்டலத்தை மிகையாகச் செயல்படச் செய்து, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில் இது உள்ளுறுப்பு சேதங்களையும் விளைவிக்கிறது.

3. Renin-angiotensin-aldosterone (RAAS) என்ற அமைப்பு தூண்டப்படுதல்

RAAS என்று கூறப்படும் ரெனின்-ஆஞ்சியோடென்சின்-ஆல்டோஸ்டிரோன் அமைப்பு (Renin-angiotensin-aldosterone system) முழு உடலிலும் இரத்த அளவையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. பருமனான நபர்களில், RAAS அமைப்பு சரியாக செயல்படாது. இதனால் இரத்த அழுத்தம் நீண்ட நேரம் அதிகமாக இருக்கும். உடல் பருமனால் RAAS அமைப்பின் மேல் ஏற்படும் மற்றொரு விளைவாக, RAAS அமைப்பில் உள்ள அனைத்து ஹார்மோன்களின் அளவையும் பாதிக்கும் திறனை கூறலாம். இந்த அளவுகள் சீர்குலைந்து, அதன் விளைவாக ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அது தானாகவே உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. 

4. சிறுநீரகம் அமுக்கப்படுத்தலும் அதனால் அதன் செயல்பாட்டிலும் ஏற்படும் மாற்றங்கள்

உடல் பருமன் உள்ளவர்கள் உள்ளுறுப்புக் கொழுப்பின் அதிக விகிதத்தை சுமக்கிறார்கள். இது அவர்களின் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பாகும். உள்ளுறுப்பு கொழுப்பின் இருப்பு உட்புற வயிற்று உறுப்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறது. இந்த அழுத்தத்திற்கு சிறுநீரகங்கள் விதிவிலக்கல்ல. அதனால் சிறுநீரகங்களின் மேலும் அழுத்தம் அதிகரிக்கிறது. சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு அதிகப்படியான நீரை வெளியேற்றுவதும், உடலில் உள்ள உப்பு அளவைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். சிறுநீரகங்களின் இந்த இரண்டு முதன்மை செயல்பாடுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் நீண்ட நேரம் அழுத்தப்பட்டு கிடந்தால், அவை நீரையும், உப்பையும் உறிஞ்சி வெளியேற்றும் முதன்மைச் செயல்பாட்டில் செயல்திறன் குறைபாட்டுக்கு உள்ளாகும். அதனால் அவைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டு, அதிக பிபி எனப்படும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

5. லெப்டின் எதிர்ப்பு திறன்

பருமனான நபர்கள் பெரும்பாலும் லெப்டின் எதிர்ப்பைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக நிறைய சாப்பிட்டும் இன்னும் பசியாக இருப்பதாக உணர்கிறார்கள். இது அதிக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அதிக கொழுப்பு செல்கள் அதிக லெப்டினை உருவாக்குகின்றன. இதன் விளைவாக உடல் பெருகி, லெப்டின் சகிப்புத்தன்மையை வளர்த்து, லெப்டின் எதிர்ப்பையும் உருவாக்கும் நிலைக்கு செல்கிறது. லெப்டின் அளவு இரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதிக லெப்டின் அளவு, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

உடல் பருமனின் விளைவாக ஒரு பருமனான நபர் உயர் இரத்த அழுத்தத்தை தேடிக்கொள்ளலாம். அல்லது மேலும் பருமனாகி முன்பேயுள்ள உயர் இரத்த அழுத்தத்தை மேலும் மோசமாக்கிக்கொள்ளலாம். அதனால்தான் மருத்துவர்கள் பருமனானவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர உடல் எடையைக் குறைக்கச் சொல்கிறார்கள்.



Exit mobile version