Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உங்கள் ப்ரிட்ஜை கொஞ்சம் திறந்து எட்டிப்பாருங்கள்!

உடல் பருமனுக்கும் உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் உள்ளே இருக்கும் பொருட்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றதா? பொதுவாகவே உங்களுக்குப்பிடித்த உணவுப் பொருட்களைத் தான் உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைப்பீர்கள். ஒவ்வொரு உணவுப் பொருளும் உங்கள் உடம்புக்கு ஒவ்வொரு வகை ஊட்டத்தை தருகின்றது. சில வகை உணவுகள் தேவையான ஊட்டத்தையும் சில வகை உணவுகள் தேவையில்லாத ஊட்டத்தையும் உங்கள் உடம்புக்கு தருகின்றன. தேவைப்படாத ஊட்டங்கள் உங்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும் போது உடலுக்கு தீங்குகள் விளையலாம்.

ஒரு தவறான குளிர்சாதனப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கும்

  1. சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட கோலா மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள்
  2. உறைந்த நிலையில் மாதக்கணக்கில் வைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
  3. ஐஸ்கிரீம்கள்
  4. இனிப்பு அதிகம் உள்ள சாக்லேட் வகைகள்
  5. பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள்

ஒரு சரியான குளிர்சாதன பெட்டிக்குள் என்னென்ன இருக்கும்?

  1. பதப்படுத்தப்படாத, புதிய இறைச்சிகள். இவைகளை குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட இறைச்சிகளை பொதுவாக இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
  2. பால் வெண்ணை தயிர் மோர் பாலாடைக்கட்டிகள் போன்ற பாலினால் ஆன உணவுப் பொருட்கள்
  3. நார்ச்சத்து அதிகம் உள்ள பழ வகைகள்.
  4. அதேபோல் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி வகைகள்

உங்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் சரியான உணவுகளை மட்டுமே இயங்க வைக்க வேண்டும்

மன அழுத்தம் அதிகமாகும் போது கண்டதை தின்னும் போக்கு எல்லோருக்குமே உண்டு. அப்படி கண்டதையும் திண்ணும் ஒரு மனநிலையில் இருக்கும்போ தோ, இரவு நேரத்தில் ஏதாவது கொறித்துத் தின்ன வேண்டும்வேண்டும் என்ற மன நிலை ஏற்படும்போதோ, நாம் முதலில் திறந்து பார்ப்பது நமது குளிர்சாதன பெட்டியை தான். அப்படி இருக்கும்போது குளிர்சாதனப்பெட்டிக்குள் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நன்மையை மட்டுமே பயக்கக் கூடிய உணவு வகைகள் இருந்ததென்றால், நம் உடல் பருமன் ஆகாது. இப்படி நாம் சொல்வதால் ஏதாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்பதை நாம் ஆமோதிக்க வில்லை. எந்தப் பொருளையும் அளவோடு சாப்பிடுவதுதான் உடலுக்கு என்றுமே நல்லது. இதனை நாம் என்றும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் குளிர்சாதன பெட்டி எந்த அளவிற்கு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உடலுக்கு கேடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Exit mobile version