Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

எந்த எடை குறைப்பு திட்டத்திலும் டயட்டிங் முறை ஏன் தோல்வியடைகிறது?

சிலர் தங்கள் உணவு முறையை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு, எந்த உணவுமுறையும் (டயட்டிங்) தோல்வியடைகிறது. பல காரணங்களால் அவர்களால் அதை தொடர முடிவதில்லை. அவர்கள் தங்கள் டயட்டிங் விதிகளுக்கு எதிராக சுவையான உணவுகளால் தூண்டப்படுகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது மிகவும் கடினமானதா? பொதுவாக, எடை குறைப்பு திட்டத்தில் டயட்டிங் முறைகள் ஏன் தோல்வியடைகின்றன?

உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

எந்த எடை குறைப்புக்கும் அடிப்படையானது குறைந்த கலோரி உட்கொள்ளலும், அதிக கலோரிகளை எரிப்பதும் ஆகும். எனவே உட்கொள்ளும் உணவும் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுப்பழக்கம் கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், உடற்பயிற்சியானது அதிகப்படியான கலோரிகளை எரிப்பதை உறுதி செய்கிறது. மேலும் எடையைக் குறைக்க உதவும் கலோரிக் குறைபாட்டையும் உருவாக்குகிறது. எந்தவொரு எடை குறைப்பு திட்டத்திலும் மிதமான உடற்பயிற்சி திட்டம் இல்லை என்றால், தோல்வி விகிதம் அதிகமாக இருக்கும்.

உடல் பருமனில் வயிற்றின் திறன் – பருமனான நபருக்கு வயிறு விரிவடைகிறதா?

உண்மையில் பருமனானவர்களுக்கு வயிற்றின் கொள்ளளவு அதிகரிக்கும். இதன் பொருள் வயிறு நிரம்பியிருப்பதற்கான சமிக்ஞையை மூளைக்கு வழங்க வயிற்றின் ஃபண்டஸ் (fundus) பகுதியை அடைய அதிக அளவு உணவு அவசியம். எனவே குறைந்த அளவு உணவைக் கொண்டு வயிறு மற்றும் மூளையை திருப்திப்படுத்துவது பருமனானவர்களுக்கு மிகவும் கடினமான செயல் ஆகும். அதனால்தான், யாராவது சில வாரங்கள் அல்லது மாதங்கள் தங்கள் டயட் முறையை தொடர முடிந்தாலும், அவர்கள் நாளடைவில் உணவுக் கட்டுப்பாட்டை நிறுத்தவே முனைகிறார்கள்.

உணவுக் கட்டுப்பாடு காரணமாக ஏற்படும் சில பிரச்சனைகள் என்ன? இந்த பிரச்சனைகள் உணவுமுறையை பாதிக்குமா?

எடை குறைப்பு திட்டங்களில் மன அழுத்தம்

எந்தவொரு எடை குறைப்பு திட்டத்திலும், உணவு முறைகளில் ஏற்படும் மாற்றத்தால் உடல் ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகிறது. எடை குறைப்பு திட்டம் முழுமையானது என்றாலோ, அதனுடன் உடல் செயல்பாடும் (உடற்பயிற்சிகளும்) இருந்தால், இதுவே சிறந்ததாகும். ஆனால் இதுவே ஆரம்ப மாதங்களில் உடலை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த (மன) அழுத்தம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது.

ஸ்டீராய்டு அளவுகளில் அதிகரிப்பு

மன அழுத்தம் அல்லது பிற காரணங்களால் மக்கள் அதிகமாக சாப்பிடத் தொடங்கும் போது, அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. சிலர் கிராஷ் டயட் எடுக்கும்போது உடலில் ஸ்டீராய்டு அளவை அதிகரிக்கிறது. இது அதிக பசியைத் தூண்டி, அதிக உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.

வளர்சிதை மாற்ற (Metobolism) விகிதம் குறைதல்

மக்கள் டயட் இருக்கும்போதும், அதனால் உடல் எடை குறையத் தொடங்கும்போதும், அவர்களின் வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது. இது எடை குறைப்பை நாளடைவில் மெதுவாக்குகிறது. இந்த மெதுவாக்கம் விரக்திக்கு வழிவகுக்கலாம். இதுவே உணவுக் கட்டுப்பாட்டில் ஆர்வத்தை இழக்கக் காரணமாக இருக்கலாம். டயட்டை விடும்பட்சத்தில், இதன் விளைவாக அவர்கள் தங்கள் உடல் எடையை மிக விரைவான விகிதத்தில் மீண்டும் அதிகரிக்கலாம். சிலர் அதிகம் சாப்பிட்டாலும் அவர்கள் மெலிதாக இருப்பதை நாம் பல சமயம் அவதானித்து இருப்போம். இது அவர்களின் உடல் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது என்பதையும், மற்றவர்களை விட சாதாரண தினசரி வேலைகளில் அதிக கலோரிகளை அவர்கள் செலவிடுகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

மலச்சிக்கல்

குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு காரணி என்னவென்றால், ஒருவர் டயட்டில் இருக்கும் போது, அவர்களின் மல அளவும் குறைகிறது. இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். இது ஆசனவாய் பிளவுகள் அல்லது மூல நோய் போன்ற பிற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது.

முடி உதிர்தல்

உணவுக் கட்டுப்பாட்டின் போது ஏற்படும் மற்றொரு விஷயம் இயற்கையாக ஏற்படும் முடி உதிர்தல் ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு, இது பிடிப்பதில்லை. இந்த முடி உதிர்தலின் விளைவாக அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை நிறுத்துகிறார்கள்.

அநேக மக்கள் உடல் எடையை குறைக்கவே விரும்புகிறார்கள். அதற்காக டயட் செய்யவே விரும்புகிறார்கள். ஆனால் கசப்பான ஒரு உண்மை என்னவென்றால், அவர்களால் டயட் முறையை தொடர்ந்து செய்ய முடியாது என்பதே ஆகும். ஆகவே தான் பெரும்பாலானவர்களுக்கு எடை குறைப்பு திட்டத்தில் உணவு கட்டுப்பாடு எனப்படும் டயட்டிங் முறை தோல்வியடைகிறது.

Exit mobile version