Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பெரியாட்ரிக்கு பிறகு உணவுக்கு அடிமை ஆகும் எண்ணம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உடல் பருமன் உள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு சிகிச்சை முறை ஆகும். இது விரைவான மற்றும் கணிசமான உடல் எடை இழப்பைத் தருகிறது. வயிற்றின் அளவைக் குறைப்பதன் மூலம் பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை உடல் ரீதியான பசியை மட்டுமே குறைக்கிறது. உணர்வு ரீதியாக ஏற்படும் உண்ணும் பழக்கத்தை இது மாற்றாது. சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உணவு அடிமை (Food Addiction) ஒரு பெரும் பிரச்சனையாகத் தொடர்கிறது. நீண்டகால வெற்றிக்கும், முழுமையான நல்வாழ்வுக்கும் இந்தப் பழக்கத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். மேலே வாசிப்போம்.

உணவு அடிமைத்தனம் என்றால் என்ன?

அதிகமாகச் சாப்பிடுவது மட்டுமீ உணவு அடிமைத்தனம் அல்ல. உணவுடன் ஒரு கட்டாய உறவு (compulsive relationship) கொண்டிருப்பதே உணவு அடிமைத்தனம் ஆகும். மன அழுத்தம், பதற்றம், போன்ற உணர்வுகளை அடக்குவதற்காகவே பலர் அதிகம் சாப்பிடுகிறார்கள், பசியினால் அல்ல. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடை குறைய ஆரம்பித்த மகிழ்ச்சி குறையும்போது இந்த உணர்வுபூர்வமான உணவு அடிமைத்தன பழக்கங்கள் மீண்டும் தலைதூக்கலாம்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உணவு அடிமைத்தனம் தொடரக் காரணம்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செரிமான முறையை மட்டுமே மாற்றுகிறது. வயிறு சுருங்கினாலும் மனதில் உள்ள உணர்வுபூர்வமான உண்ணும் பழக்கம் மாறுவதில்லை. இந்த அறுவை சிகிச்சைக்குப்பிறகு நோயாளிகள் பின்வருவனவற்றை அனுபவிக்கலாம்:

உணவு அடிமைத்தனத்தை எதிர்கொள்ளும் வழிகள்

சரியானவர்களிடம் உதவி தேடுங்கள்

உளவியலாளர், ஊட்டச்சத்து நிபுணர் அல்லது ஆதரவுக் குழுக்களுடன் பணியாற்றி உங்களுக்கு ஏற்படும் உணவு அடிமைத்தன எண்ணம் என்ன மாதிரியான காரணிகளின் அடிப்படையில் ஏற்படுகிறது என்பதை கண்டறியுங்கள். CBT (Cognitive Behavioral Therapy) போன்ற சிகிச்சைகள் ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கங்களை உடைக்க உதவும்.

மைண்ட்ஃபுல் உணவு உண்ணும் முறையைப் பயிற்சி செய்யுங்கள்

பசி, வயிறு நிரம்பிய உணர்வு ஆகியவற்றை மைண்ட்ஃபுல் உணவு முறையைப் பயிற்சி செய்பவர்களால் உடல் சொல்வதை உணர்ந்து சாப்பிட முடியும். மெதுவாகச் சாப்பிடுங்கள்; சாப்பிடும் ஒவ்வொரு கவளத்தையும் ரசியுங்கள்; தொலைக்காட்சி/மொபைலைத் தவிர்த்துவிட்டு சாப்பிடுங்கள்.

மாற்று வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்

மன அழுத்தம் வந்தால் உணவுக்கு பதிலாக, கீழ்கண்ட மாற்று முறைகளை கையாள முயற்சியுங்கள்:

நீண்டகால பின்தொடர்தலின் பங்கு

இது உணவு அடிமைத்தன பிரச்சனை தலை தூக்கினால் அதன் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுக்க உதவலாம். உணவியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆகியோரின் முடிவுகளைக் கண்காணிக்கவும், உணவுத் திட்டங்களை மாற்றியமைக்கவும், தேவைப்பட்டால், புதிய உணவுத்திட்டங்களை பரிந்துரைக்கவும் இது உதவும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிந்தைய பராமரிப்பு திட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்கும் நோயாளிகளால் நீண்டகால உடல் எடை இழப்பு பராமரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உணவு அடிமைத்தனத்தை நிர்வகிப்பது என்பது உடல் ரீதியான சரிசெய்தல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்பாட்டு உத்தியைக் நம்மிடம் அது கேட்கிறது. நோயாளிகள் உணர்ச்சித் தூண்டுதல்களை குணப்படுத்துவதன் மூலம் உணவுடன் நேர்மறையான உறவை வளர்த்துக் கொள்ளலாம். அவர்கள் மனநிறைவு (mindfulness), பயிற்சிகள் மற்றும் தேவைப்படும் போதெல்லாம் வேண்டிய மருத்துவ உதவியைப் பெறலாம். இந்த நேர்மறையான நடவடிக்கைகள் அனைத்தும் அறுவை சிகிச்சையின் வெற்றியை மட்டுமல்ல, நீடித்த ஆரோக்கியத்தையும், அதிலும் முக்கியமாக மிகவும் தேவையான வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்யும்.

Exit mobile version