18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீண்ட கால எடை இழப்பை பராமரிக்கும் உத்திகள்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை இழப்பு பயணத்தைத் தொடங்குவது வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வாகும், ஆனால் காலப்போக்கில் அந்த எடை இழப்பு முடிவுகளை பராமரிப்பதற்கு அர்ப்பணிப்பும் கவனமாக திட்டமிடலும் தேவை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் எடையைக் குறைக்க உதவும் அத்தியாவசிய நுட்பங்களை இந்த கட்டுரையில்  பார்ப்போம்.

Read More

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையால் விளையும் உளவியல் நன்மைகள்

எடை இழப்பு அறுவை சிகிச்சை, அல்லது பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, அதன் உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக பாராட்டி மெச்சப்படுகிறது. மன நல்வாழ்வு, உணர்ச்சி நல்வாழ்வு, இவற்றில் அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இந்த வலைப்பதிவில், பெரியாட்ரிக் அறுவைசிகிச்சையின் உளவியல் நன்மைகள் மற்றும் அது எப்படி மொத்த மாற்றத்திற்கு உதவும் என்பதைப் பார்ப்போம்.

Read More

பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனுக்கும் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்புகள்

உலகளவில் பருமனான பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிக எடை அல்லது பருமனான பிரிவின் கீழ் வரும் இந்தியர்களின் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது, அதிகரித்தும் வருகிறது. உலக சுகாதார நிறுவனமானது உடல் பருமனை ஒரு நோயாகவே அங்கீகரித்துள்ளது. அதை ஒரு Slow Pandemic என்று அழைப்பதில் தவறில்லை. உடல் பருமனாக இருப்பதன் ஆபத்துகளில் ஒன்று கர்ப்பம் ஆகாமல் இருக்கும் அதிக சாதித்தியக்கூறுகள் ஆகும். இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது என்றாலும் கூட, இந்த கட்டுரை பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனுக்கும் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்புகளை மட்டும் விவாதிக்கிறது. தொடர்ந்து படிக்கவும்.

பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனுக்கும் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்புகள்

  • Polycystic ovary syndrome என்று சொல்லப்படும் PCOD பிரச்சனைகள் தான் உடல் பருமனான பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சம்பந்தப்பட்ட முதல் பிரச்சனை ஆகும்.
  • உடல் பருமனாகி இருப்பதால், அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களுக்கு பொதுவாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வம் குறைவதும் ஒரு காரணமாக அறியப்படுகிறது.
  • பருமனான பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் ஆணின் விந்தணுவானது பொதுவாக அந்த பெண்ணின் கருப்பையில் உருவாகும் கருமுட்டையின் அருகே செல்வதற்கே கூட பல சமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது. விந்தணு பெண்ணின் யோனிக்கு உள்ளே சென்று கருமுட்டையின் அருகே செல்வதற்கே பெரும்பாடாக இருப்பதால் பருமனான பெண்கள் கர்பம் ஆவதில் உள்ளபடியே சிக்கல் உள்ளது.
  • மாதவிடாய் சுழற்சி என்று சொல்லப்படும் Menstrual cycle ஒரு நல்ல ஹார்மோன் சமநிலையால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் லெப்டின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே, அதிக உடல் எடையையும், பருமனையும் கொண்டுள்ள பெண்களுக்கு அதிக அளவிலான லெப்டின் சுரக்கிறது. லெப்டின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, மாதவிடாய் சுழற்சியின் சீரான தன்மையை பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாதபோது, கர்ப்பம் தரிக்காமல் போவதில் உள்ள வாய்ப்பு அதிகமாகிறது.
  • அதிகப்படியான வயிற்று கொழுப்பு இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை இன்சுலின் மூலம் குறைக்க முடியாத போது இந்த நிலை ஏற்படுகிறது. பாலின ஹார்மோன்களின் அளவு குறைதல் (பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்) மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய இரண்டும் தொடர்புடையதாக அறியப்படுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பின் விளைவாக உருவாகும் நிலைமைகள் மருத்துவ ரீதியாக ஹைப்பர் ஈஸ்ட்ரோஜெனிசம் (hyperestrogenism) மற்றும் ஹைபராண்ட்ரோஜெனிசம் (hyperandrogenism) என்று அழைக்கிறார்கள். இந்த ஹைபராண்ட்ரோஜெனிசம் ஆண்களுக்கு ஏற்படும் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலைமைகள் எல்லாவற்றையும், எந்த சந்தேகமும் இல்லாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியே ஏற்படுத்துகிறது.
  • கொழுப்பு திசுவானது, கொழுப்பு அமிலங்கள் (FFA), சைட்டோகைன்கள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது. இவை லெப்டினுடன் சேர்ந்து கருப்பை மற்றும் எண்டோமெட்ரியம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கலாம்.
  • மேலே உள்ள அனைத்து காரணிகளும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு பங்களிக்கின்றன. பல நாடுகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பை தெளிவாக நிறுவியுள்ளன. பருமனான பெண்கள் கருத்தடை முறைகளை நிறுத்திய பிறகு ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்பதையும் இந்த ஆய்வுகள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.
  • Pcos 
  • ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பைகள் மூலம் முட்டை வெளியிடப்படாமல் இருக்கும் அனோவுலேஷன் (anovulation) என்ற நிலை ஏற்படுவதன் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, பிஎம்ஐ (BMI) அளவு 27க்கு மேல் இருக்கும் பெண்களில் இந்த non-ovulation என்று சொல்லப்படும் கருமுட்டை உருவாகாத நிலை குறிப்பாக அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
  • பல பருமனான பெண்கள் கருமுட்டையை வெளியேற்றினாலும், அவர்கள் வெளியேற்றும் கருமுட்டைகளின் தரம் கணிசமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புள்ளிவிவரப்படி சொல்லவேண்டும் என்றால், BMI அளவு 35 உள்ள ஒரு பெண் கருத்தடை செய்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 26% குறைவு. அதேபோல, BMI அளவு 40 உள்ள ஒரு பெண், கருத்தடை செய்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் 43% குறைவு ஆகும்.
  • IVF முறைகளைப் பயன்படுத்தி கருத்தரிக்க முயலும் பருமனான பெண்களுக்கு என்று வரும்போதும் இதுவே உண்மை ஆகும். அதிக எடை (overweight) கொண்ட பெண்களில் IVF செய்துக்கொண்டவர்களுக்கு குழந்தை பிறப்புக்கான வாய்ப்பு 9% குறைகிறது என்று தரவு கூறுகிறது. அதே பருமனான பெண்களில், இந்த வாய்ப்பு 20% ஆக மேலும் குறைகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எடை இழப்பு முறைகள் (Weight loss) அதிக எடை அல்லது பருமனான பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிக்க வாய்ப்பளிக்கிறது. அதிக எடை மற்றும் பருமனான பெண்கள் தாங்கள் செய்யும் உடற்பயிற்சிகளும், நல்ல உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பது உடல் எடை இழப்புக்கு உறுதியாக பங்களிக்கும். ஆனால் கடுமையான உடை பருமன் உள்ள, தாயாக விரும்பும் பெண்களுக்கு, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை இழப்பு என்பதே சிறந்த ஒரு தேர்வாக இருக்கும் என்று சொல்லவேண்டும்.

தைராய்டு பிரச்சனைகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை எவ்வளவு நல்லது?

உடல் பருமன் கிட்டத்தட்ட 40 வித்தியாசமான நோய்களை ஏற்படுத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை கொமொர்பிடிட்டி என்று அழைக்கப்படுகின்றன. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அந்த 40 நோய்களின் விளைவைக் குணப்படுத்துகிறது அல்லது குறைக்கிறது என்பதை ஆராய்ச்சிகளும் அனுபவமும் நிரூபித்துள்ளன. தைராய்டு பிரச்சினைகள் கூட இந்த 40 நோய்களில் அடக்கமா?

Read More

How good is Bariatric Surgery for Thyroid problems?

We all know that obesity is directly responsible for causing almost 40 odd diseases. They are termed comorbidity. Researches and experience have proved that Bariatric surgery either cures or reduces the effect of those 40-odd diseases very significantly. What about thyroid problems?

Read More

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய ஊட்டச்சத்து விளைவுகள்

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அல்லது எடை இழப்பு அறுவை சிகிச்சையானது  கடுமையான உடல் பருமனான நபரின் எடையை குறைக்க செய்யப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை பொதுவாக உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்லாமல், அவர்களின் உடல் பருமன் காரணமாக மோசமடைந்துள்ள நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் செய்யப்படுகிறது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அது ஏற்படுத்தும் ஊட்டச்சத்து விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. இந்த கட்டுரையின் வாயிலாக அது ஏற்படுத்தும் விளைவுகளை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

Read More

Post Bariatric Nutritional Effect

Bariatric Surgery or any type of weight-loss surgery is done to reduce the weight of a severely obese individual. The surgery is done typically not just to reduce the weight but also to enhance the health of the patient which has deteriorated drastically due to their severe obesity. The nutritional effect after undergoing bariatric surgery is significant. Let us try and understand the same from this article.

Read More

Points to plan when you are undergoing a Bariatric Surgery

Bariatric surgeries are never done as emergency procedures. All bariatric surgeries are purely elective procedures. Elective surgeries are surgeries that are scheduled in advance because it does not involve any medical emergencies. Since these procedures are scheduled in advance, it gives patients time to prepare for the surgery. During this preparation period, you will be asked to make some lifestyle changes prior to the surgery. Both physical and mental wellbeing is required for bariatric surgery. In this blog, we are going to discuss a few points which can help you plan for bariatric surgery.

Read More

Call Now