18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

தைராய்டு பிரச்சனைகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை எவ்வளவு நல்லது?

உடல் பருமன் கிட்டத்தட்ட 40 வித்தியாசமான நோய்களை ஏற்படுத்துவதற்கு நேரடியாகப் பொறுப்பாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை கொமொர்பிடிட்டி என்று அழைக்கப்படுகின்றன. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அந்த 40 நோய்களின் விளைவைக் குணப்படுத்துகிறது அல்லது குறைக்கிறது என்பதை ஆராய்ச்சிகளும் அனுபவமும் நிரூபித்துள்ளன. தைராய்டு பிரச்சினைகள் கூட இந்த 40 நோய்களில் அடக்கமா?

அதிக எடை அல்லது உடல் பருமனால் ஏற்படும் தைராய்டு பிரச்சனைகள்

முக்கியமாக தைராய்டு செயலிழப்புகள் மற்றும் தன்னுடல் தாக்க (autoimmune) தைராய்டு நோய்கள் (AITD கள்) உள்ளிட்ட தைராய்டு கோளாறுகளின் நிகழ்வுகள் அதிக எடை அல்லது உடல் பருமன் காரணிகளால் அதிகரித்து வருகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தைராய்டு செயலிழப்புகளில் ஹைப்பர் தைராய்டிசமும், ஹைப்போ தைராய்டிசமும் அடங்கும். உடலால் உற்பத்தி செய்யப்பட்ட  ஆன்டிபாடிகளால், TSH போன்ற தைராய்டு ஆன்டிஜென்களுக்கு எதிராக அவை வேலை செய்யும் போது, அது வகைப்படுத்தப்படும் பொதுவான தன்னுடல் தாக்க (autoimmune) நோய்களில் AITD-யும் ஒன்றாகும்.

தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன்களும் (TSH) தைராய்டு ஹார்மோன்களும், ஹார்மோன்களின் இந்த மாற்றங்களால் ஏற்படும் உடல் பருமனுடன் தொடர்புடையது என்று நம்மில் பலருக்கு தெரியும். அவை பல நாளமில்லா சுரப்பிகளாலும், வளர்சிதை மாற்றத்தாலும் (metabolic) ஏற்படும் நோய்களுடன் கூட தொடர்புடையது என்பதும் கூட அறியப்பட்ட ஒரு உண்மை ஆகும். ஹைப்போ தைராய்டிசம் உடல் பருமனைத் தூண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, உடல் பருமனுக்கும் தைராய்டு நோய்க்கும் இடையிலான உறவு இரண்டு பக்கமானது. எளிமையாகச் சொன்னால், அதிக எடைக்கும், உடல் பருமனால் ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளுக்கும் இடையிலான உறவு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அதில் நிறைய உண்மை உள்ளது.

தைராய்டு பிரச்சனைகளுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஒரு தீர்வா?

இருக்கும் தைராய்டு பிரச்சனைகளுக்கு இதுவே முழு காரணமா என்ற கேள்விக்கு முழுமையான பதில் இல்லை. ஆனால் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை தைராய்டு பிரச்சனைகளை குறைத்துள்ளது என்பதை பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, T3, T4 மற்றும் TSH பரிசோதனைகள் உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு நடத்தப்பட்டன. தைராய்டு ஆரோக்கிய நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட மக்களின் ஹைப்போ தைராய்டு நிலையில் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் சாதகமான விளைவு நிச்சயம் உள்ளது. சாதகமான விளைவுகள் என்று சொன்னால் தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துதலும், தைராய்டு மருந்து அளவைக் குறைத்தலும் இதில் அடங்கும். எனவே பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையானது தைராய்டு நோய்களை முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும், அவற்றைத் திறம்படக் கட்டுப்படுத்தும் என்று பாதுகாப்பாகக் கருதலாம்.

Call Now