Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவுகளை மீண்டும் வயிற்றுக்கு அறிமுகப்படுத்துதல்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு அறுவை சிகிச்சையாகும். இது நீண்டகால வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியமாக்குகிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் உடல் நிறைய மாற்றத்துக்கு உள்ளாகிறது. உணவுடனான உங்கள் உறவும் நிறைய மாறுகிறது. உணவுகளை மீண்டும் உங்கள் வயிற்றுக்கு அறிமுகப்படுத்துவது என்பதும் உங்கள் புதிய செரிமான அமைப்பு எப்படி அதனை ஆதரிக்கும் என்பதும் அறுவை சிகிச்சைக்குப் பிறகான உங்கள் மறுவாழ்வின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பல நிலைகளைப் பற்றி இந்த கட்டுரை விவாதிக்கும் அதே வேளையில், நீண்டகால உடல் நலனை உறுதி செய்யும் உணவை எப்படி உங்களுக்கு வடிவமைத்துக்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய உணவுமுறைகளைப் புரிந்துகொள்வது

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உணவை உட்கொள்வது படிப்படியாக நடக்கிறது. இது திரவங்களுடன் முதலில் தொடங்கி பிறகு தான் திட உணவுக்கு மாறுகிறது. இந்த முறையால் உங்கள் உடல் மெதுவாக மீண்டு, பழகி, அதன் புதிய செரிமானத் திறனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது.

  1. நீர் திரவ உணவு நிலை

அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு நீங்கள் தெளிவான பானங்களை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த நிலை நீங்கள் மீண்டு வர ஊக்குவிக்கிறது. ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பையும் கூட குறைக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை குடிப்பதும் நீர்ச்சத்துடன் இருப்பதும் இந்த காலகட்டத்தில் மிக முக்கியம் ஆகும்.

தெளிவான திரவங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. முழு திரவ நிலை உணவு 

உங்கள் உடல் குணமடையும்போது நீங்கள் முற்றிலும் திரவ உணவுக்கு மாறுவீர்கள். இந்த திரவ உணவுகளில் சற்று அதிகமான பொருள் கொண்டவை இருக்கும். இந்த கட்டத்தில், தசை தொகுப்பை பராமரிக்கவும் மீட்சியை ஊக்குவிக்கவும் புரதம் அவசியம்.

முழு திரவங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

  1. ப்யூரே செய்யப்பட்ட உணவுகள் 

உங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, நீங்கள் ப்யூரே செய்யப்பட்ட உணவுகளுக்கு மாறுவீர்கள். அவை ஜீரணிக்க எளிதாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். தசை தொகுப்பு பராமரிப்பு மற்றும் குணமாதலை ஆதரிப்பதற்காக புரதம் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ப்யூரே செய்யப்பட்ட உணவுகளுக்கான உதாரணங்கள்

  1. மென்மையான உணவுகள் 

இந்த மென்மையான உணவுகள் கட்டத்தில் நீங்கள் அதிக திடமான, மென்மையான உணவுகளைச் சேர்க்கத் தொடங்கலாம். மெதுவாகச் சாப்பிடுவது, உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிடுவது, புரதம் அதிகம் உள்ள உணவுகளில் கவனம் செலுத்துவது, ஆகியவை இந்த கட்டத்தில் முக்கியம் ஆகும்.

மென்மையான உணவுகளுக்கான எடுத்துக்காட்டுகள

  1. திட உணவுகள் கட்டம்

சில வாரங்களுக்குப் பிறகு நீங்கள் சாதாரண திட உணவுகளை மீண்டும் சாப்பிடத் தொடங்குவீர்கள். உங்கள் எடை குறைப்புக்கும், பொது நல்வாழ்வை ஆதரிக்கவும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது இந்த கட்டத்தில் மிக முக்கியமானது ஆகும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சமச்சீர் உணவை எடுத்தல்

நீங்கள் திட உணவு கட்டத்திற்கு முன்னேறி வந்த பிறகு, ஊட்டச்சத்து மிக்க, சீரான உணவை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. புரதத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் வயிற்றின் திறன் மிகவும் குறைகிறது. எனவே ஒவ்வொரு உணவிலும் புரதம் இருப்பது அவசியம். புரதம் திருப்தியாக சாப்பிட்ட நிலையை ஊக்குவிக்கிறது. அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. தசை தொகுப்பை பராமரிக்கவும், உங்கள் மீட்சிக்கும் உதவுகிறது.

  1. சிறிய அளவுகளில் அடிக்கடி உணவுகளை உண்ணுங்கள்

உங்கள் வயிறு சிறியதாக இருப்பதால், நாள் முழுவதும் சிறிய வேளைகளில் உணவை அடிக்கடி உட்கொள்ள வேண்டியிருக்கலாம். உங்கள் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு வேளை சிறிய அளவுகளில் உணவுகளை சாப்பிட முயற்சிக்கவும். நாள் முழுவதும் இதுபோன்ற சிறிய அளவுள்ள உணவுகள் உங்கள் செரிமான அமைப்பு அதிக சுமையை ஏற்றுக்கொள்வதை தவிர்க்கும்.

  1. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் வாழ்நாள் முழுவதும் குறைந்த அளவுகளில் சாப்பிடுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் ஆகும். வறுத்த உணவுகள் மற்றும் வெற்று கலோரிகள் அதிகம் உள்ள சர்க்கரை சேர்க்கப்பட்ட, மாவுச்சத்து அதிகம் உள்ள சிற்றுண்டி உணவுகளைத் தவிர்க்கவும்.

  1. நீர்ச்சத்துடன் இருங்கள்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீரிழப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். வயிற்றின் அளவு சிறியதாக இருப்பதாலும், திரவங்களை உட்கொள்ளும் திறன் குறைவதாலும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. நாள் முழுவதும் தண்ணீர் குடியுங்கள். ஆனால் உணவுக்கு முன் திரவங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இது உங்கள் வயிற்றை மிக விரைவாக நிரம்பச் செய்து, உங்கள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கும்.

  1. ஆரோக்கியமான நல்ல கொழுப்புகளைச் சேர்க்கவும்

ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும், பொது ஆரோக்கியத்திற்கும் நல்ல கொழுப்புகளை மிதமாக உட்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். விதைகள், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமான நல்ல கொழுப்புகளுக்கான ஆதாரங்கள் ஆகும்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதும், சீரான உணவை உருவாக்குவதும் பொறுமையாகவும், மெல்லமாகவும் நடக்கும் செயல்முறைகளாகும். இதற்கு தயாரிப்பு, பொறுமை மற்றும் கவனத்துடன் சாப்பிடுவது அவசியம். பரிந்துரைக்கப்பட்டதை  பின்பற்றுவதன் மூலமும், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் நீங்கள் நீண்டகால வெற்றியை உறுதி செய்யலாம். பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பொது ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க நன்கு சமச்சீரான உணவை உட்கொள்வது முக்கியம். இது உடல் எடை குறைப்புக்கு மட்டுமல்ல, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தேவையானது ஆகும். உங்கள் உணவைத் தனிப்பட்ட முறையில் வடிவமைத்துக்கொடுக்க ஒரு ஊட்டச்சத்து நிபுணரிடமோ, உங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடமோ ஆலோசனை பெறுங்கள்.

Exit mobile version