Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

பெண்களில் இன்சுலின் எதிர்ப்பு: தனித்துவமான சவால்கள்

இன்சுலின் எதிர்ப்பு என்பது உலகில் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. ஆனால் பெண்கள் மீது அதன் விளைவுகள் அதிக சிரமங்களை கொடுப்பதாக இருக்கிறது. அவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், குழந்தை பெற்றதால் ஏற்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற காரணங்களால் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பெண்கள் இன்சுலின் எதிர்ப்பு நிலைக்கு மிகவும் சுலபமாக பாதிக்கப்படுகின்றனர். நீண்ட கால வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் (metabolic health), இன்சுலின் எதிர்ப்பு நிலையை முன்கூட்டியே கண்டறிதலுக்கும், அதற்கேற்ற சரியான சிகிச்சைக்கும், உடலில் ஏற்படும் மாறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?

இன்சுலினுக்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உடலின் செல்கள் திறமையாக பதில் கொடுப்பதில்லை. இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆனால் சில நேரங்களில் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க அதிக இன்சுலின் தேவைப்படுகிறது. நீரிழிவு நோயை (முக்கியமாக ப்ரீடியாபெடிக்) ஏற்படுத்தாமல் வருடங்கள் செல்லச் செல்ல, இன்சுலின் அளவின் இந்த வரம்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்சுலின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் இந்த இரண்டு நிலைகளும் இன்சுலின் எதிர்ப்பு என குறிப்பிடப்படுகிறது. டைப் 2 சர்க்கரைநோய், ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் பிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகள் காலப்போக்கில் இதனால் ஏற்படலாம். பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு நிலையை இது படிப்படியாக உருவாக்கலாம். பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் இந்த நிலை மறைக்கப்படுகிறது. சில சமயங்களில் அதிக வயதாகிவிட்டதுக்கும், மன அழுத்தத்துடனும் தவறாக இணைக்கப்பட்டு இந்த நிலை கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிறது.

பெண்கள் ஏன் தனிப்பட்ட அபாயங்களை எதிர்கொள்கிறார்கள்

உடலில் இன்சுலின் எப்படி செயல்படுகிறது என்பதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகள் இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம். இது வாழ்க்கையின் சில கட்டங்களில் இன்சுலின் எதிர்ப்பைப் பெறுவதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பை தருகிறது. பெண்களில் இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும் சில காரணிகள் இதோ:

இந்த காரணிகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கலாம். இது ஆபத்தை அதிகரித்து,  நோயறிதலை மிகவும் சிக்கலாக்கும் திறன் கொண்டது.

தவறவிடப்படும் / புறக்கணிக்கப்படும் அறிகுறிகள்

பெண்களில் இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறிகள் பெரும்பாலான நேரங்களில் வெளிப்படையாக தெரிவதில்லை. இது வயிற்றுப்பகுதியில் எடை அதிகரிப்பு, நாள்பட்ட சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் அல்லது வாழ்க்கைமுறை மாற்றங்கள் இருந்தபோதிலும் எடை குறைவதில் சுணக்கம் என்று எப்படி வேண்டுமானாலும் வெளிப்படும். கைகளின் கீழ் அல்லது கழுத்தைச் சுற்றி தோலில் ஒரு வித கருமையான நிறத்தில் மாற்றம் ஏற்படுதல் இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் சில ஆகும்.

உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் நீண்ட கால தாக்கங்கள்

இன்சுலின் எதிர்ப்பு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். சர்க்கரைநோய் மட்டுமின்றி, பெண்களுக்கு இதய நோய், கர்பம் தரிக்காமல் போதல், கர்ப்பக் காலத்தில் சிக்கல்கள் போன்றவற்றின் ஆபத்தை அதிகரிக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் ஏற்ற இறக்கம் இருக்கும்போது மனநிலை மாற்றங்கள் மற்றும் பதட்டம் அதிகரிப்பதால் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

இன்சுலின் எதிர்ப்பை திறம்பட நிர்வகித்தல்

ஆரம்பகால மருத்துவ தலையீட்டின் மூலம் இன்சுலின் எதிர்ப்பை திறமையாக குறைக்க முடியும். ஹார்மோன் மற்றும் உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் இன்சுலின் எதிர்ப்பு நிலையை நிர்வகிக்கக்கூடிய சில வழிகளே ஒரு முழுமையான தீர்வை கொடுக்கக்கூடும் என்று சொல்லலாம். இதுவே மிகவும் பயனுள்ள வழிமுறையாக பார்க்கப்படுகிறது.

ஆரம்ப நிலையிலேயே இன்சுலின் எதிர்ப்பைக் கண்டறிவதில் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரம்பகால கண்டறிதல் சிக்கல்களைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். 

பெண்களில் இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு சிக்கலான கோளாறு தான். ஹார்மோன்கள், வாழ்க்கை முறை தேர்வுகள், வாழ்வின் நிலைகள் ஆகியவை இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும் சில காரணிகள் ஆகும். பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சிரமங்களை அறிந்துகொள்வது உடனடி நோயறிதல் மற்றும் தனிப்பட்ட சிகிச்சைக்கு முக்கியன விஷயம் ஆகும். இன்சுலின் எதிர்ப்பை சரியான வழிமுறையை கையாண்டு வெற்றிகரமாக அதற்கு சிகிச்சையளிக்க முடியும். இது பொது ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் பராமரிக்க உதவுகிறது.

Exit mobile version