மூல நோய் என்பது மலக்குடலிலும், ஆசனவாய் பகுதிகளிலும் விரிவாக்கப்பட்ட நரம்புகளால் ஏற்படுத்தப்படும் ஒரு நோய்நிலை ஆகும். மது அருந்துதலும், புகைபிடித்தலும், அதனோடு வேறு பல காரணிகள் சேர்ந்து மூலநோய் வளர்ச்சியில் பங்கு வகித்து, நிலைமையை மேலும் மோசமாக்கலாம். மூலநோய் மீது மதுவும் புகைப்பழக்கமும் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளும், அவற்றைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் இந்தப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.
மூல நோயைப் புரிந்துகொள்வோம்
மூல நோய் ஆசனவாயைச் சுற்றி வெளிப்புறமாகவோ, அல்லது மலக்குடலுக்குள் உட்புறமாகவோ உருவாகலாம். அவை முறையே வெளிமூலம், உள்மூலம் என்று அழைக்கப்படுகின்றன. குடல் இயக்கத்தின் போது வலி, அரிப்பு, வீக்கம், இரத்தப்போக்கு ஆகியவை மூல நோயின் பொதுவான அறிகுறிகளாகும். நாள்பட்ட மலச்சிக்கல், குறைந்த நார்ச்சத்து உணவை சாப்பிடுவது, சோம்பிய வாழ்க்கை முறை, மிக முக்கியமாக, மது மற்றும் புகையிலை பயன்பாடு போன்ற பல காரணங்களால் இது ஏற்படலாம்.
மூல நோய் வர புகைப்பழக்கத்தின் பங்கு
-
நிகோடினும் இரத்த ஓட்டமும்
நிகோட்டின் என்பது ஒரு இரசாயனப் பொருளாகும். இது இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இந்த பொருள் சிகரெட், பீடி, சுருட்டு போன்ற அனைத்து புகையிலை பொருட்களிலும் உள்ளது. இதை புகைக்கும் போது அது உடலுக்குள் நுழைகிறது. ஆசனவாய்ப்பகுதிக்கு இரத்த விநியோகம் தடைபடும் போது, இரத்த ஓட்டம் குறைவதால், நரம்பு அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மூல நோய் மோசமாகி, எடிமா என்று சொல்லப்படும் ஒரு வித வீக்கம் ஏற்படலாம்.
-
புகைபிடித்தலும் செரிமான ஆரோக்கியமும்
- அதிகரித்த மலச்சிக்கல்: மலச்சிக்கல் என்பது செரிமான அமைப்பில் ஏற்படும் ஒரு விளைவு ஆகும். இது புகைப்பிடிப்பதால் ஏற்படலாம். இது மூலநோய்க்கான குறிப்பிடத்தக்க ஒரு ஆபத்து காரணியாகும். மலச்சிக்கலின் விளைவாக முக்கி சிரமப்படுவது மலக்குடல் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மூல நோயின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் மூல நோயை இது மோசமாக்கலாம்.
- திசு சேதம்: சிகரெட்டில் உள்ள நச்சு கலவைகள் காரணமாக ஆசனவாய் பகுதியில் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் பலவீனமடையக்கூடும். இது மூல நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனை குணப்படுத்தும் செயல்முறையையும் சிக்கலாக்குகிறது.
-
தாமதமாக குணமாதல்:
மெதுவாக குணமாதல்: புகைபிடித்தல் உடலின் குணப்படுத்தும் திறனை பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நச்சுகள், மூல நோய் அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சைக்குப் பிறகு உடலில் ஏற்படும் குணமாதல் செயல்முறையை மெதுவாக்குகிறது. இது அசௌகரியத்தை நீடிக்கலாம். மேலும் சிக்கல்களின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
மூல நோய் வர மதுவின் பங்கு
-
நீரிழப்பும் மலச்சிக்கலும்:
ஆல்கஹால் ஒரு டையூரிடிக் ஆகும். எனவே சிறுநீரின் வெளியீட்டை அதிகரிப்பதன் மூலம் உடலில் அதிகமான நீரிழப்பு ஏற்படலாம். மலச்சிக்கல் மூல நோயின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இது உடலில் ஏற்படும் நீரிழப்பு மூலம் ஏற்படலாம், அல்லது இருக்கின்ற மூலநோயை மோசமாக்கலாம். குடல் இயக்கத்தின் போது உடலில் போதுமான நீர் இல்லாதபோது உடல் அதிக அழுத்தத்தை அனுபவிக்கிறது. இது மலம் கடப்பதை கடினமாக்குகிறது. இறுதியில் மூல நோய் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.
-
ஆல்கஹாலும், கல்லீரல் ஆரோக்கியமும்:
- கல்லீரலில் தாக்கம்: நீண்ட காலத்திற்கு மது குடித்தால் கல்லீரலுக்கு தீங்கு ஏற்படும். சிரோசிஸ் போன்ற நோய்களை கூட அது ஏற்படுத்தும். இது மலக்குடளிலும், ஆசனவாயிலும் (போர்டல் உயர் இரத்த அழுத்தம் எனப்படும் ஒரு நிலை) உள்ள நரம்புகளில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நரம்புகளில் இந்த அதிகரித்த அழுத்தம் மூல நோய் ஏற்பட வழிவகுக்கலாம் அல்லது இருக்கின்ற மூலநோயை மோசமாக்கலாம்.
- பலவீனமான இரத்த நாளங்கள்: நீண்ட காலத்திற்கு மது குடித்தால் மலக்குடல் பகுதியில் உள்ள இரத்த நாளங்களை அது பலவீனப்படுத்தலாம். இது இரத்தப்போக்கு, எடிமா ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
-
மோசமான உணவுகளை தேர்ந்தெடுப்பது:
ஊட்டச்சத்து குறைபாடு: மது அருந்துவது, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவை உட்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற உணவு முறைகளுடன் தொடர்புப் படுத்தப்படுகிறது. இத்தகைய குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவை நீண்டகாலமாக உட்கொள்வதன் விளைவாக மலச்சிக்கல் ஏற்பட்டு அதன் விளைவாக மூல நோய் ஏற்படலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மூல நோயைத் தடுக்கலாம்
-
புகைபிடிப்பதை கைவிடுதல்:
மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்: புகைபிடிப்பதைக் கைவிடுவதன் மூலம் உடலின் குணப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், மலச்சிக்கலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் முடியும். இது மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கலாம் அல்லது மூலநோய் இருந்தால் அது மோசமாவதை தடுக்கலாம்.
-
மது அருந்துவதைக் குறைத்தல்:
- சிறந்த நீர்ச்சத்து தேவைக்கு: ஆல்கஹால் உட்கொள்வதைக் குறைப்பது, உடலுக்கு சரியான நீர்ச்சத்தை பராமரிப்பது, ஆகியவை மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் மலம் மென்மையாகவும், எளிதாகவும் வெளியேறும். இவை அனைத்தும் குடல் இயக்கத்தின் போது ஏற்படும் முக்கலையும், பதட்டத்தையும் குறைக்கும்.
- ஆரோக்கியமான கல்லீரல்: மதுவைக் குறைப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது கல்லீரல் நோய்களால் வரக்கூடிய மூல நோய்க்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
புகைபிடித்தலும், மது அருந்துதலும் மூல நோயை மோசமாக்கும். அல்லது அதனை குணப்படுத்தும் உடல் வலிமையை மெதுவாக்கும் இரண்டுமே மிக முக்கிய மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகும். இந்தப் பழக்கங்கள் மூலநோய் வளர்ச்சியையும், அது குணமாவதையும் எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் அறிவார்ந்த முடிவுகளை எடுத்து இந்த நிலையைத் தடுக்கவும், திறமையாக நிர்வகிக்கவும் முடியும். மூல நோய் ஏற்படுவதைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, புகைபிடிப்பதை நிறுத்துதல், மதுவை அளவாகப் பயன்படுத்துதல் அல்லது மதுவை முற்றிலுமாக கைவிடுதல், சமச்சீரான உணவை உண்ணுதல், நன்கு நீர்ச்சத்துடன் உடலை வைப்பது ஆகியவை அவசியம் ஆகும்.