Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

உடல் எடை இழப்பு சில சமயம் அபாயத்தின் அறிகுறியாக இருக்கலாம்

உடல் எடை குறைவது பெரும்பாலும் ஒரு நேர்மறையான சாதனையாகப் பாராட்டப்படுகிறது. இது சிறந்த ஆரோக்கியம், சுயக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றம் ஆகியவற்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், உடல் எடை குறைவது தற்செயலாக நடந்தால், அது உண்மையில் ஒரு வெற்றியாகக் கருதக்கூடாது. திடீர் உடல் எடை இழப்பு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உணவுப் பழக்கத்திலோ அல்லது உடற்பயிற்சியிலோ எந்த மாற்றமும் இல்லாமல் எடை இழப்பு ஏற்பட்டால், அதை உடனே கவனிக்க வேண்டும். இது சில நேரங்களில் தீவிரமான அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளைக் கூட குறிக்கலாம். இதில் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், நாள்பட்ட தொற்றுகள், சில நேரங்களில் கணையப் புற்றுநோய் அல்லது பிற வகை புற்றுநோய்களும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். உடல் எடை இழப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை நாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டால், அது உயிர்களைக் காப்பாற்றக்கூடும்.

ஏன் ‘நல்ல’ எடை குறைப்பு சில நேரங்களில் ஆபத்தானதாக இருக்கலாம்

இயற்கையாகவே உடல் எடை குறைவது ஆரம்பத்தில் நன்றாகத் தோன்றினாலும், நமது உடல்கள் இயல்பான நிலையில் தானாகவே எடையைக் குறைத்துக்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு நோயின் காரணமாக ஏற்படும் உடல் எடை இழப்பு, உடலின் உள் உறுப்புகளில் உள்ள அழுத்தம் மற்றும் செயலிழப்பின் பிரதிபலிப்பாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், பெரும்பாலான நோயாளிகள் எந்த முயற்சியும் இல்லாமல் உடல் எடை குறைந்தால், அதன் உண்மைத்தன்மை அறியாமலேயே மகிழ்ச்சி அடைகிறார்கள். இது ஒரு தெளிவாக ஆபத்தில் முடியலாம். அறிகுறிகள் மோசமடையும் வரை அசாதாரணமான எதையும் சந்தேகிக்காததால், பெரும்பாலான நோயாளிகள் இந்த ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் என்பதே உண்மை ஆகும்.

கடுமையான நோய்கள் எப்படி உடல் எடை இழப்பை ஏற்படுத்துகின்றன

உடல் ஊட்டச்சத்துக்களைச் செரிமானம் செய்யச் சிரமப்படும்போதோ, அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு உள்ளாகும்போதோ, ​​எதிர்பாராத உடல் எடை இழப்பு ஏற்படலாம். இந்த எதிர்பாராத எடை இழப்பிற்குக் காரணமாக அமையக்கூடிய சில காரணங்கள் இதோ:

– நாள்பட்ட அழற்சி

– செரிமான மண்டலக் கோளாறுகள்

– ஹார்மோன் சமநிலையின்மை

– புற்றுநோய் தொடர்பான வளர்சிதை மாற்ற மாற்றங்கள்

கணையப் புற்றுநோயாக இருந்தால், எந்தவொரு அறியப்பட்ட காரணமும் இல்லாமல் ஏற்படும் இந்த திட்டமிடப்படாத உடல் எடை இழப்பு ஒரு முக்கியமான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது அதிகம் கவனிக்கப்படாத அறிகுறிகளில் ஒன்று என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமைதியாக இருக்கும் கணையப் புற்றுநோயின் ஆபத்து

கணையப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவையாக இருப்பதால், அவற்றை எளிதில் கவனிக்கத் தவறிவிடலாம். அதனால்தான் கணையப் புற்றுநோய் ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. திடீர் உடல் எடை இழப்பு, வயிற்று வலி, செரிமான மாற்றங்கள் போன்ற கணையப் புற்றுநோயின் பெரும்பாலான ஆரம்ப அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை. அவை நோயாளிக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாது. அவை பெரும்பாலும் உடலின் முதல் எச்சரிக்கை அறிகுறிகளாகும். பல நோயாளிகள் கடுமையான வலி அல்லது மஞ்சள் காமாலை ஏற்படும் வரை எந்த சிகிச்சையையும் நாடுவதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் புற்றுநோய் முற்றிய நிலையை அடைந்திருக்கலாம்.

உடல் எடை இழப்பைப் பற்றி எப்போது கவலைப்பட வேண்டும்?

மருத்துவ கவனிப்பு தேவைப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் இதோ:

மேற்கண்ட அறிகுறிகளுடன் உடல் எடை குறைவும் ஏற்பட்டால், ஒரு மருத்துவரை, குறிப்பாக ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுவது முக்கியம் ஆகும்.

உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்

ஒருவரின் ஆரோக்கியத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சில நேரங்களில், திடீர் உடல் எடை இழப்பு என்பது உடலின் ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் செய்யாமல் இயல்பாக ஏற்படும் உடல் எடை மாற்றங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், கூடிய விரைவில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது எப்போதும் புத்திசாலித்தனம். கணையப் புற்றுநோயைப் பொறுத்தவரை, ஆரம்பத்திலேயே கண்டறிவதே முக்கியம் ஆகும். ஆரம்ப கட்டங்களில் தொடங்கப்படும் சிகிச்சைகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே உண்மை.

Exit mobile version