Dr Maran – Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai

மூல நோய் கட்டிகள் வெடிக்குமா? அவை வெடித்தால் என்ன ஆகும்?

மூல நோய் என்பது உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாய், மற்றும் அதைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்குவதால் ஏற்படுவது ஆகும். உங்கள் குத மண்டலத்தில் இருக்கும் நரம்புகள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்போது மூல நோய் ஏற்படுகிறது. மூலம் இருக்கும் சிலர் எந்த அறிகுறிகளையும் உணருவதில்லை. மற்றவர்களுக்கோ உட்கார்ந்திருக்கும்போது அரிப்பு, எரிச்சல், இரத்தப்போக்கு மற்றும் அசவுகரியத்தை  உணருவார்கள். உள்மூலம் மற்றும் வெளிமூலம் ஆகியவை மூலநோயில் உள்ள இரண்டு வெவ்வேறு வகை மூலநோய் ஆகும். உள்மூலம்  மலக்குடலுக்குள் உருவாகும். வெளிமூலம் குத வாயிலைச் சுற்றி உருவாகின்றன. மூல நோய் கட்டிகள் வெடிக்குமா என்று பார்ப்போம்.

மூல நோய் கட்டிகள் வெடிக்குமா?

எந்த வகை மூலமாக இருந்தாலும் த்ரோம்போஸ் (ரத்தக்கட்டு) நிலையை அடையலாம். த்ரோம்போஸ் ஆன மூலக்கட்டிகளில் விரிவாக்கப்பட்ட இரத்த நாளங்களில் இரத்த உறைவு உண்டாகிறது. த்ரோம்போஸ் ஆன மூல நோய் ஆபத்தானது அல்ல என்றாலும், அவை நிச்சயமாக கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகை மூலக்கட்டிகளில் அதிக அளவு ரத்தம் வந்து அடையும்போது அது வெடிக்கலாம்.

மூல நோய்க்கட்டி வெடிக்கும்போது என்ன நடக்கும்?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, அதிக இரத்தத்தால் மூலக்கட்டிகள் நிரம்பியிருந்தால் மட்டுமே த்ரோம்போஸ் நிலையில் உள்ள மூல நோய்க்கட்டி வெடிக்கும். த்ரோம்போஸ் ஆகிவிட்ட மூல நோய்க்கட்டி வெடித்தால், அந்த இடத்தில் குறுகிய காலத்திற்கு இரத்தப்போக்கு இருக்கும். வழக்கமாக, த்ரோம்போஸ் ஆன மூல நோய்க்கட்டி வெடிப்பதற்கு முன்பு வலி மிகுந்ததாக இருக்கும். அது வெடித்தவுடன், அதிகப்படியான இரத்தத்தை உருவாக்குவதன் காரணமாகவும், அதிகப்படியான அழுத்தத்தை வெளியிடுவதாழும், உடனடி நிவாரணம் கிடைக்கும். பெரும்பாலான மக்கள் கீழே இருந்து அதிகமாக இரத்தப்போக்கு இருப்பதைக் கண்டு வழக்கமாக பீதியடைகிறார்கள். கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இரத்தப்போக்கு பெரும்பாலும் ஆபத்தானது இல்லை என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.

மூல நோய்க்கட்டி வெடித்தால் இரத்தப்போக்கு எவ்வளவு காலம் நீடிக்கும்?

மூலநோய் கண்ட நபருக்கு, அவரது வெடித்த மூல நோயிலிருந்து வரும் இரத்தப்போக்கு சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும். வெடித்த ஆசனவாய் பகுதியிலிருந்து 10 நிமிடங்களுக்கு மேல் இரத்தம் வரக்கூடாது. நீங்கள் மலம் கழிக்கும்போது ஆசனவாய் பகுதியிலிருந்து எப்போதாவது இரத்தம் வரலாம். இருப்பினும், பாதுகாப்பாக இருக்க உடனடியாக ஒரு மூலநோய் நிபுணரை அணுகவும். இரத்தப்போக்கு தொடர்ந்தால் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள தொற்றுநோய்களைத் தவிர்க்கவே உடனே மூலநோய் நிபுணரை அணுக பரிந்துரைக்கப் படுகிறது.

உங்கள் மூல நோய்க்கட்டி வெடித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மூல நோய்க்கட்டி வெடித்தால் உங்களுக்கு சிறப்பு சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிட்ஸ் குளியல் மூலம் உலா ஆசனவாய் பகுதியை ஆற்றவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவும். சிட்ஸ் குளியல் அந்த ரணத்தை ஆற்றுவதை மட்டும் செய்யாமல் ஆசனவாய் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

Exit mobile version