18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

இந்த 10 தவறுகள் உங்கள் மூலநோயை மோசமாக்கலாம்

உங்கள் குதப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களின் வீக்கம் தான் மூலநோய் எனப்படுகிறது. மூலம் வலி மிகுந்ததாக மாறக்கூடியவை. மலம் கழிக்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும்போதோ ஒரு வித அசவுகரியம், நமைச்சல் அல்லது இரத்தப்போக்கு இவை ஏற்படலாம். மூலநோய்க் கட்டிகளை வைத்திருப்பது ஏற்கனவே கடினமான ஒரு விஷயம்  என்பதால், உங்கள் மூலநோயை மோசமாக்கும் இந்த 10 பொதுவான தவறுகளை எப்போதும் செய்யவேண்டாம்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை புறக்கணித்தல்

மலச்சிக்கலைக் கொண்டிருப்பது மூல நோயை முக்கிய காரணி. மறுபுறம், வயிற்றுப்போக்கு உங்கள் மூல நோயை மோசமாக்கி அதன் அறிகுறிகளையும் மோசமாக்கும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் இருந்தால், உங்கள் உணவை மதிப்பீடு செய்து, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை அகற்றுவதை உறுதியாக மேற்க்கொள்ளுங்கள். இப்படி செய்தாலும், உங்கள் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இன்னும் நிலவுகிறது என்றால், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

சோம்பிய வாழ்க்கை முறை

அமர்ந்த இடத்தில் வேலை, உங்கள் ஓய்வு நேரத்தை டிவி பார்ப்பது அல்லது இணையத்தில் உலாவுவது போன்றவற்றை நீங்கள் மட்டுமே மேற்கொண்டு எந்த வித உடலுழைப்பும் இல்லை என்றால், அது நிச்சயமாக நாள்பட்ட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் மலம் கடந்து செல்வதை கடினமாக்குகிறது, அவ்வாறு கடினமாக ஆக்கும்போது மலத்தை முக்கி வெளியேற்ற உங்களை தூண்டுகிறது. கடினமான மேற்பரப்பில் உட்கார்ந்திருப்பது உங்கள் குதப் பகுதிக்கு வந்துசெல்லும் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதிக எடையுடன் இருப்பது உங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும். செயலற்ற தன்மையுடன் உடல் இருப்பதும், தொடர்ந்து அமர்ந்த படி இருப்பதும் குதப் பகுதியைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை எல்லாம் சேர்ந்து மூலநோயை ஏற்படுத்தும். மூலம் ஏற்கனவே இருந்தால் அதை மேலும் மோசமாக்கும்.

மோசமான சுகாதாரம்

இந்தியாவில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு மூல நோயாளிகளுக்கு நிறைய அசவுகரியங்களை ஏற்படுத்தும். இத்தகைய நிலைமைகளில், ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது, உங்கள் குத பகுதியை சுத்தமாக தேய்த்துக் குளித்து பின் துடைத்து வறண்டதாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். மோசமான சுகாதாரத்தை பராமரிப்பது உங்கள் குத மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அரிப்பு மற்றும் எரிச்சலை மோசமாக்கும்.

அதிக அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம்

அதிக அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம் மூலநோயை மேலும் அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த வேலை இருந்தாலோ, அல்லது உங்கள் வாழ்க்கையில் ஒரு மன அழுத்த காலத்தை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றாலோ, உங்களை நிதானப்படுத்தி, அமைதிப்படுத்தும் ஒரு செயலைக் கண்டறியவும். தேவை ஏற்பட்டால் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உங்கள் வேலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

மலமிளக்கியின் அதிகப்படியான பயன்பாடு

உங்களிடம் மலச்சிக்கலுடன் மூலநோய் இருந்தால், உங்கள் மலத்தை கடந்து செல்வதை எளிதாக்கும் மலமிளக்கி மருந்துகளையோ, மல மென்மையாக்கிகளையோ உங்கள் இரைப்பைக் குடல் நிபுணர் பரிந்துரைப்பார். இந்த மாத்திரை அல்லது சிரப்களை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் மூலநோய் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மலமிளக்கியை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். மலச்சிக்கல் இன்னும் தொடர்ந்தால் உங்கள் இரைப்பைக் குடலியல் நிபுணரை அணுகவும்.

தினமும் கனமான பொருட்களை தூக்குதல்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான நடைமுறை ஆகும். இருப்பினும், உங்களுக்கு மூலநோய் இருந்தால் அதிக எடையை தூக்க பரிந்துரைக்கப்படுவது இல்லை. பளு தூக்குதல் செய்வதன் மூலம், உங்கள் மூலநோய்க்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது மூலநோய்க் கட்டிகளை மோசமாக்கும். உங்கள் அறிகுறிகள் குறையும் வரை மிதமான உடற்பயிற்சியை மட்டுமே தொடர்ந்து செய்வது நல்லது.

கழிவறையில் இருக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துதல்

கழிப்பறையில் இருக்கும்போது, அதாவது மலம் கழிக்கும் போது செய்தித்தாள்களைப் படிப்பதும், சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உலாவுவதும் பலரும் செய்யும் ஒரு செயல். அவ்வாறு செய்யும்போது, நீங்கள் நேரம் கடந்து செல்லும் உணர்வை இழக்கிறீர்கள். அதனால் மேலும் நீண்ட காலத்திற்கு கமாடில் (மேற்கத்திய கழிப்பறை) உட்கார முனைகிறீர்கள். இது உங்கள் குத மண்டலத்தில் உள்ள நரம்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, மூலநோயினால் ஏற்படும் வலி மற்றும் பிற அறிகுறிகளை மோசமாக்கும்.

அதிகமாக காபி குடிப்பது

ஆல்கஹால் போன்றே காபி, நீரிழப்பை உண்டாக்கும். உங்கள் வயிற்றுப் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். காபியில் காணப்படும் காஃபின் மலச்சிக்கலுக்கு பெரிய பங்களிப்பை வழங்குகிறது. எனவே காபியை எல்லாம் முற்றாக தவிர்ப்பது அல்லது உங்கள் காபி நுகர்வை கட்டுப்படுத்துவது என்றும் நல்லது.

உங்கள் குத பகுதியை சுத்தம் செய்ய ஈரமான துடைப்பான்கள் பயன்படுத்துதல்

இன்று கிடைக்கும் பெரும்பாலான ஈரமான துடைப்பான்கள் வாசனை, ஆல்கஹால் மற்றும் பல ரசாயனங்களைக் கொண்டிருக்கின்றன. மூலநோய் கட்டிகளுடன் அவை தொடர்பு கொள்ளும்போது ஆல்கஹால் குறிப்பாக எரிச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தும். உங்கள் குதப் பகுதியைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையாக இருப்பதால் அது உங்கள் குதப் பகுதியில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். சோப்பு கொண்டு குத பகுதியை அதிகமாக துடைப்பதால் அதுவே சிறந்தது. ஆக கடையில் விற்கும் ஈரமான துடைப்பான்களை தவிர்ப்பது நல்லதே.

மலம் கழிக்க உடனே செல்லாமல் இருப்பது

மலம் கழிப்பதற்கான உங்கள் வேட்கையை கட்டுப்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியம். கழிப்பறைக்குச் செல்ல உங்கள் நேரத்தை ஒத்திவைப்பதன் மூலம், உங்கள் குதப் பகுதியைச் சுற்றியுள்ள உங்கள் நரம்புகளுக்கு மட்டுமே அதிக அழுத்தம் கொடுப்பீர்கள். எனவே, இயற்கையின் அழைப்புக்கு உடனடியாக பதிலளிப்பது எப்போதும் முக்கியம்.

Call Now