இரத்த சோகைக்கும் இதய செயலிழப்புக்கும் உள்ள தொடர்பு
இரத்த சோகைக்கும், இதய செயலிழப்புக்கும் இடையே வலுவான தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதய செயலிழப்பு என்பது உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இதயத்தால் போதுமான அளவு பம்ப் செய்ய முடியாதபோது ஏற்படும் ஒரு நிலை ஆகும். இந்த நிலை திடீரென்று ஏற்படாது. இது ஒரு மெல்ல மெல்ல ஏற்படும் ஒரு நோய்நிலை ஆகும். இதய செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், செயலிழப்பின் முன்னேற்றத்தை நாம் மெதுவாக்கலாம். இதய செயலிழப்பு பல காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், அதில் இரத்த சோகை என்பது கூடுதல் இதய செயலிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த இரண்டு நோய்நிலைகளும் எவ்வாறு வலுவாக தொடர்புடையன என்பதை இந்த கட்டுரையில் விவாதிப்போம்.
இரத்த சோகையை பற்றிய சுருக்கம்
இரத்த சோகை என்பது நமது இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ஏற்படும் ஒரு நோய்நிலை ஆகும். அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உடலில் இல்லாதபோது இரத்த சோகை ஏற்படுகிறது. இது நடக்க பல காரணங்கள் இருக்கலாம். உடல் போதுமான ஹீமோகுளோபின் அல்லது இரத்த சிவப்பணுக்களை உருவாக்காததால் (இரும்பு-குறைபாடு அனீமியா), உடல் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை விட மிக வேகமாக அழிப்பதால் (ஹீமோலிடிக் அனீமியா), அல்லது சில வகையான ஹீமோகுளோபின் குளறுபடிகள் நிகழும்போதும் இருக்கலாம்.
மருத்துவரீதியாக யாராவது இதய செயலிழப்புக்கான அறிகுறிகளையும் காட்டுகிறார்களா என்பதை எப்படி அறிவது?
இதயத்தை ஒரு பம்பாகவும் (Pump), சிறுநீரகத்தை ஒரு வடிகட்டியாகவும், இரத்தத்தை தண்ணீராகவும் கற்பனை செய்வோம். இந்த 3 கூறுகளும் ஒன்றுக்கொன்று சார்ந்தவையாகவும், அவற்றின் வேலையைச் சரியாகச் செய்வதற்கு போதுமானதாகவும் இருக்க வேண்டும். இரத்தத்தின் அளவு மற்றும் தடிமன் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் சமரசம் ஏற்பட்டாலும், திரவம் குவிந்து, உறுப்புகளில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை எடிமா என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் நுரையீரலில் திரவம் சிக்கி பெருகுகிறது. கால்களிலும் பாதங்களிலும் திரவம் குவிந்து வீக்கம் ஏற்படுகிறது. கணுக்கால் பகுதியில் குறிப்பாக வீக்கம் காணப்படலாம். இது எடிமா நிலையின் பொதுவான அறிகுறியாகும். இதயம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் அதன் உறுப்புகளுக்கும் போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது, உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
இதய செயலிழப்புக்கான இதயம் தொடர்பில்லாத கூடுதல் காரணங்கள்
இதய செயலிழப்புக்கான பல காரணங்களில், இதயம் மட்டுமே கூட இருக்கலாம் என்று நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். மற்ற காரணங்களை மட்டும் இங்கு தெளிவாகப் பேசப் போகிறோம்.
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனை காரணமாக
இந்த நிலையில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease – CKD). இந்த நிலை ஏற்படும் போது, சிறுநீரகத்தில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடைகின்றன. சிறுநீரகங்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாதபோது, அது இரத்தத்தை வடிகட்டுவதை கடினமாக்குகிறது. இரத்த வடிகட்டுதல் சரியாக நடக்காதபோது அது திரவ திரட்சிக்கு வழிவகுத்து இதய செயலிழப்புக்கு காரணமாக அமையலாம்.
இரத்த சோகைக்கும் இதய செயலிழப்புக்கும் இடையேயான தொடர்பு
இரண்டு சிறுநீரகங்களும் எரித்ரோபொய்டின் (EPO) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கு பொறுப்பாகும். நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) வெளிப்படும் போது, சிறுநீரகங்கள் போதுமான EPO-ஐ உற்பத்தி செய்ய முடிவதில்லை. இது இரத்த சோகையை விளைவிக்கும் EPO அளவை படிப்படியாக குறைக்கிறது. சிறுநீரகங்களின் செயலிழப்பு இரத்த சோகைக்கு வழிவகுக்கும் இந்த நிலை, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள்
இரத்த சோகைக்கு தலைவலி, தோல் வெளிறிப்போதலும், அதற்கு தகுந்தார் போல தோலில் வறட்சியும், எளிதில் சிராய்ப்பு ஏற்படும் நிலையும் ஏற்படுதல், நாக்கில் புண், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தெரியும். இதய செயலிழப்புக்கு எடிமா (கணுக்கால்களில் வீக்கம்), வறட்டு இருமல், இரவிலோ ஓய்வெடுக்கும் போதோ அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டுதல், வயிற்று வலி, குமட்டல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இரண்டுக்கும் பொதுவான அறிகுறிகளாக மூச்சுத் திணறல், சோர்வு, அசதி, வேகமான இதயத் துடிப்பு, ஆகியவற்றை கூறலாம்.
இரண்டு நிலைகளுக்கும் நோயறிதல் (Diagnosis)
இரத்த சோகை பொதுவாக சிபிசி (முழு இரத்த எண்ணிக்கை) சோதனைகளைப் பயன்படுத்தி கண்டறியப்படுகிறது. இரத்த சோகையை ஏற்படுத்தும் உட்புற இரத்தப்போக்கு போன்ற பிற காரணங்கள் எண்டோஸ்கோபி அல்லது கொலோனோஸ்கோபி நடைமுறைகளால் கண்டறியப்படுகின்றன. ஒரு எளிய எக்கோ கார்டியோகிராம் சோதனை ஒரு நோயாளிக்கு இதய செயலிழப்பு இருப்பதைக் காட்டும்.
இரண்டு நிலைகளுக்குமான சிகிச்சை
இரண்டு நிலைகளுக்கும் தனித்தனியாகவே சிகிச்சையளிக்கப்படுகின்றன. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கும் போது இரத்த சோகையின் வகை மற்றும் தீவிரத்தன்மை கருத்தில் கொள்ளப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை லேசாக இருக்கும்பட்சத்தில், இரும்புச் சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரும்பு மிகவும் குறைவாக இருந்தால், IV மூலம் இரும்புச்சத்து உட்செலுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது. CDK தான் காரணம் என்றால், EPO உடலுக்குள் உட்செலுத்துதல் செய்யப்படும். இரத்த சோகையை ஏற்படுத்தும் உள் இரத்தப்போக்கு போன்ற பிற காரணங்களுக்கு, அறுவை சிகிச்சை நெறிமுறைகளையோ அல்லது இரத்தப்போக்கு நிறுத்த தேவையான சில நெறிமுறைகளையோ பின்பற்றி சிகிச்சையளிக்கிறார்கள்.
இதய செயலிழப்பு என்பது குணப்படுத்த முடியாத ஒரு நிலை ஆகும். இருப்பினும், அது மேலும் மோசமடைவதைத் தடுக்கலாம். இதற்கான சிகிச்சையானது பொதுவாக மருந்துகளை உள்ளடக்கியது ஆகும். அது இதய செயலிழப்பின் விகிதத்தை பொறுத்ததும் ஆகும். ஆனால் இதற்கு வலியுறுத்தப்படும் மிக முக்கியமான இரண்டு காரணிகள் என்னவென்றால், நாம் வாழ்க்கை முறை மாற்றத்தையும், இரத்த சோகைக்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சையும் மட்டுமே ஆகும்.