18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

வயிற்று புற்றுநோயைப் பற்றி மேலும் தெரிந்த்துக் கொள்ளுங்கள்

வயிற்று புற்றுநோய் இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவான ஐந்து புற்றுநோய்களில், வயிற்று புற்றுநோயும் ஒன்றாகும். 15 மற்றும் 44 வயதிற்குட்பட்ட இந்தியர்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இது இரண்டாவது பொதுவான காரணமாகும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது வயிற்று புற்றுநோயின் பாதிப்பு மிகக் குறைவு என்றாலும், வயிற்று புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைப்பட வேண்டிய ஒரு காரணமாகும். இந்த கட்டுரை வயிற்று புற்றுநோயை சுருக்கமாக விளக்குவதையும் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலில் இரைப்பையைப் புரிந்துக் கொள்வோம்

வயிற்று புற்றுநோயை முழுமையாக புரிந்து கொள்ள, வயிறு, அதன் அடுக்குகள் மற்றும் பாகங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

மனித இரைப்பையில் உள்ள 5 பாகங்கள்

– உணவுக்குழாயுடன் இணையும் இரைப்பைப் பகுதி கார்டியா (cardia) என்று அழைக்கப்படுகிறது.

– வளைவு அதிகமாக இருக்கும் இரைப்பையின் மேல் பகுதி ஃபண்டஸ் (fundus) என்று அழைக்கப்படுகிறது.

– பலூன் போன்ற பகுதியை, அளவுக்கு அதிகமாக இருக்கும் அதன் உடல் பகுதி (body) என்று அழைக்கப்படுகிறது.

– இந்த 3 பகுதிகளுக்கும் “மேல் இரைப்பை” (proximal stomach) என அழைக்கப்படுகிறது.

– அடுத்த 2 கீழ் பாகங்கள் அன்ட்ரம் மற்றும் பைலோரஸ் (Antrum and Pylorus) ஆகும், அவை ஒன்றாக “தூர இரைப்பை” (distal stomach) என்று அழைக்கப்படுகின்றன.

– 4 வது பகுதி அல்லது அன்ட்ரம்(Antrum) என்பது இரைப்பை சாறு மற்றும் உட்கொள்ளும் உணவு நன்றாக கலக்கும் வயிற்றின் இடமாகும்.

– 5 வது இறுதி பகுதி அல்லது பைலோரஸ் (Pylorus) ஒரு வால்வு போல செயல்படுகிறது. அரை செரிமான உணவை சிறுகுடலின் டியோடெனம் பகுதிக்கு மேலும் தள்ள உதவு புரிகிறது.

மனித இரைப்பையில் உள்ள அடுக்குகள்

– வயிற்றின் உட்புற அடுக்கு மியூக்கோஸா (சளி போன்ற வழவழப்பான திரவம் இருப்பதால்) என அழைக்கப்படுகிறது. ஜீரண அமிலங்கள் தயாரிக்கப்பட்டு சுரக்கும் இடம் இது தான்.

– அடுத்த அடுக்கு சப்முகோசா என்று அழைக்கப்படுகிறது

– மூன்றாவது அடுக்கு தசைக்கூட்டு புரோப்ரியா (muscularis propria) எனப்படும் மிகவும் அடர்த்தியான தசை அடுக்கு ஆகும். இந்த அடுக்கு வயிற்றுக்குள் போடப்படும் உணவுகள் எல்லாவற்றையும் நகர்த்தவும், கலக்கவும், அரைப்பதற்கும் உதவுகிறது.

– அடுத்த அடுக்கு சப்ஸெரோசா ஆகும்.

– வெளிப்புற அடுக்கு செரோசா ஆகும். சப்ஸெரோசா மற்றும் செரோசா ஆகியவை ஒன்றாக சேர்ந்து வயிற்றின் வெளிப்புறத்தை நிர்மாணிக்கின்றன.

பெரும்பாலான புற்றுநோய்கள் இரைப்பையின் கார்டியா பகுதியில் தான் உருவாகின்றன. அதுமிட்டுமில்லாமல் பெரும்பாலான புற்றுநோய்கள் வயிற்றின் உட்புற சளி அடுக்கில் தான் உருவாகின்றன.

வயிற்று புற்றுநோயில் உள்ள வகைகள்

– வயிற்றின் மிகவும் உட்புறப் அடுக்கான, மியூக்கோஸா அடுக்கில், புற்றுநோய் உருவாகும் போது, இது அடினோகார்சினோமா என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வயிற்று புற்றுநோய், பல்வேறு வயிற்று புற்றுநோய் வகைகளில் முதன்மையானது ஆகும். இந்த வகையே கிட்டத்தட்ட 90% -95% வரையில் இருக்கும்.

– வயிற்று புற்றுநோய்களின் பிற வகைகள் லிம்போமா, கார்சினாய்டு கட்டி போன்றவை ஆகும். வயிற்றில் காணப்படும் நோயெதிர்ப்பு மண்டல திசுக்களில் உள்ள புற்றுநோய்தான் லிம்போமா. கார்சினாய்டு கட்டி என்பது வயிற்றின் ஹார்மோன் உருவாக்கும் உயிரணுக்களில் உள்ள புற்றுநோயாகும்.

– வயிற்று புற்றுநோய் வகைகளான இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டி (GIST), ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, சிறிய செல் கார்சினோமா மற்றும் லியோமியோசர்கோமா போன்றவை குறைவாகவே ஏற்படுகின்றன. இந்த வகை வயிற்று புற்றுநோய்கள் மிகவும் அரிதானவை ஆகும்.

வயிற்று புற்றுநோய் எப்படி உருவாகிறது?

வயிற்று புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையான அடினோகார்சினோமாவைப் பொறுத்தவரை, வயிற்றின் சளி அடுக்கின் புறணியில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் மெதுவாகவே உருவாகிறது. இது புற்றுநோயாக உருவாக பல ஆண்டுகள் ஆகும். புற்றுநோய் கண்ட இந்த புறணியானது, புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களுக்கு முதலில் உட்படுகிறது. இந்த நிலையில் அவை எந்த அறிகுறிகளையும் கொடுப்பதில்லை. இந்த காரணத்திற்காக தான் பெரும்பாலான வயிற்று புற்றுநோய்கள் பல ஆண்டுகளாக கண்டறியப்படுவதில்லை. வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் பல்வேறு புற்றுநோய் வகைகளில் அதிகமாக இருப்பதற்கான ஒரே காரணமும் இதுதான்.

வயிற்று புற்றுநோய் பற்றிய சில உண்மைகள்

(1) வயிற்று புற்றுநோய் பெண்களை விட ஆண்களில் அதிகம் காணப்படுகிறது. ஆண்கள் பெண்களை விட இரண்டு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தரவுகள் சொல்லுகின்றன. விகிதவாரியாக  கிட்டத்தட்ட 2: 1 ஆகும்.

(2) வயதான ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

(3) எச். பைலோரி போன்ற சில பாக்டீரியாக்கள் மற்றும் எப்ஸ்டீன்-பார் வைரஸ் போன்ற சில வைரஸ்கள் வயிற்று புற்றுநோயுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

(4) மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயால் செய்யப்பட்ட வறுத்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது வயிற்று புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

(5) அடிக்கடி புகையிலை பயன்பாடு வயிற்று புற்றுநோயின் அதிகரிப்புடன் தொடர்புடையது.

(6) அதிகமாக மது குடிப்பதும் ஒரு காரணம்.

(7) உடல் பருமன் கூட வயிற்று புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகும்.

(8) ஏ மற்றும் ஏபி (A and AB blood group) போன்ற சில இரத்தவகைகளைக் கொண்டுள்ளவர்கள், ஓ (O blood group) இரத்தவகைகளைக் கொண்டுள்ளவர்களை விட வயிற்று புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Call Now