மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு
மூலநோய் கட்டிகள் இரத்தப்போக்கு நிலையை எட்டும்போது, அது இரத்த இழப்புக்கு வழிவகுக்கிறது. இதை கண்டுக்கொள்ளவில்லை என்றால் இரத்த சோகை ஏற்படலாம். மூலநோய் கட்டிகளிலிருந்து வரும் இரத்தப்போக்கு எந்த நிலையில் உள்ள மூலத்தினாலும் நிகழலாம். அது தினசரி அடிப்படையில் நிகழும்போது, இறுதியில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது மூலநோய்க்கும் இரத்த சோகைக்கும் உள்ள தொடர்பு என்று சுருக்கமாகக் கூறலாம்.
இரத்தப்போக்கு நிலைகள்
அல்சர், பாலிப்ஸ் (மருக்கள்), மூலநோய் ஆகியவை புற்றுநோயல்லாத சில நோய்களாகும். அவை கீழ் பகுதியில் இரத்தப்போக்கு ஏற்படுத்தும் நோய்களாகும். மோசமான நிலை காரணமாக இரத்த சோகையை ஏற்படுத்தும் மூலநோயின் நிகழ்வு அரிதாக இருந்தாலும் அது இன்னும் நிகழவே செய்கிறது. மூலநோயினால் ஏற்படும் இரத்தப்போக்கின் விளைவாகவும், மலக்குடல் பகுதியிலிருந்து பெரிய அளவிலான இரத்தத்தை இழக்கும்போதும், அது இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மலத்தில் இரத்தத்தைப் பார்த்த சில நபர்கள் போதுமான அளவு சாப்பிடுவதையும் நிறுத்திவிடலாம். அல்லது ரத்தத்தை கண்டு பயந்துபோய் உணவை குறைத்துக் கொள்வதுண்டு. சிலர் ஒரே மாதிரியான உணவை எடுத்துக்கொள்வார். இந்த வழியில் அவர்கள் எடை இழப்புக்கு ஆளாவதோடு மட்டுமில்லாமல் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் இரத்த சோகைக்கு ஆளாகலாம்.
உங்களுக்கு மூலநோய் இருப்பதால் ஏற்படும் இரத்த சோகையின் பொதுவான அறிகுறிகள் யாவை?
(அ) இரத்த இழப்பு காரணமாக ஏற்படும் சோர்வு.
(ஆ) பொதுவாக பலவீனமாக இருப்பதால் தினசரி வேலைகளைச் செய்வது கடினமாக உணர்தல்
(இ) அடிவயிற்றில் வலி அல்லது தசைப்பிடிப்பு
(ஈ) மலம் கழிக்கும்போது சிரமப்படுகையில், கடுமையான மூலநோயினைக் கொண்டவர்கள் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ எளிதாக இரத்தப்போக்கு ஏற்படுதல்.
(உ) உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ, மலம் கழித்துவிட்டு வந்தவுடனோ, படுத்து எழுந்திருக்கும்போதோ, ஒரு வித தலைசுற்றல் ஏற்படுதல்.
இரத்த சோகைக்கான சிகிச்சை இதற்கு உதவியாக இருக்குமா?
இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், சரியான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதும் கூட இரத்த சோகை நிலையை மேம்படுத்தாது. இரும்பு மாத்திரைகள் சில நேரங்களில் மலச்சிக்கல், மலத்தின் நிறத்தில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. அதனால் சிலருக்கு தொடர்ந்து இந்த மாத்திரைகளை உட்கொள்வதில் சம்மதம் இருக்காது. அவர்களுக்கு ஏற்கனவே இரத்த சோகை இருந்தால், அவை இரத்த சோகையை அதிகரிக்கச் செய்யலாம். எனவே இரத்த சோகை சிகிச்சையை உள்ளடக்கிய ஒரு சிகிச்சை நெறிமுறை மட்டுமே போதுமானதாக இருக்காது.
எனவே, இரத்த சோகைக்கான சிகிச்சையுடன் மூலநோய்க்கான சிகிச்சையையும் அளிப்பதே சரியான அணுகுமுறை ஆகும். இது மூல காரணத்தை நிவர்த்தி செய்வது போன்றது. இங்கே இரத்த சோகைக்கு மூல காரணம் மூலநோய். இரத்தப்போக்கை மொத்தமாக நிறுத்த முனையும் சிகிச்சையே சரியான சிகிச்சையாக இருக்க முடியும்.
சரியான ஊட்டச்சத்தும், இரும்பு சப்ளிமெண்ட்சும்
இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இரத்தபொரியல், முட்டை, கல்லீரல், சிவப்பு இறைச்சி போன்றவை இரும்பு சத்து நிறைந்த அசைவ உணவுகள் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். நீங்கள் சைவ உணவு உண்பவர்கள் எனில், அடர்ந்த நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், சமைத்த பீன்ஸ், மாதுளை, பேரீச்சை, திராட்சை, பூசணி விதை போன்றவை இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும்.
ஒருவருக்கு இரத்த சோகை இருக்கும்போது, இரத்த சோகை நிலையை குணப்படுத்த இரும்புச்சத்து நிறைந்த உணவு மட்டுமே போதுமானதாக இருக்காது. எனவே இரத்த சோகையிலிருந்து விரைவாக குணமடைய உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி நீங்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை தவறாமல் எடுக்க வேண்டும். உங்கள் இரத்த சோகை உங்கள் மருத்துவரால் மோசமான நிலை எனக் கூறப்பட்டால், இரத்தத்தில் உங்கள் இரும்புச் சத்து இயல்பாக வரும்வரை நீங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை மறக்கக் கூடாது. எனவே இரும்புச்சத்து நிறைந்த அனைத்து உணவுகளையும் கட்டாயமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடல் வழக்கமான இரும்புச்சத்து பெற பழக்கமாகி இருக்கும்.
உங்கள் மூலநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு இணையான நடவடிக்கையாக, மூலநோய் நிபுணரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அவரிடம் கலந்து பேசும்போது இரத்தப்போக்கை எப்படி நிறுத்துவது என்று தீர்மானியுங்கள். உங்களுக்கு இருக்கும் மூலநோய்க்கு அறுவை சிகிச்சை தேவை என்று மூலநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கருதினால், அதற்கு சம்மதியுங்கள். மாறாக, நார்ச்சத்து நிறைந்த சரியான உணவு, நீர்ச்சத்துடன் உடலை வைத்துக்கொள்வது, சிட்ஸ் குளியல் எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்து உங்கள் மூலநோயை அறுவை சிகிச்சை இல்லாமல் கவனித்துக் கொள்ள முடியும் என்று அறுவை சிகிச்சை நிபுணர் சொன்னால், அதன்படி நடந்துக்க கொள்ளுங்கள். சுருக்கமாக, மூலநோய் மற்றும் இரத்த சோகை ஆகிய இரண்டிற்கும் சிகிச்சையளிக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழமுடியும்.