அதிக கொழுப்புள்ள உணவுகளும், கணைய ஆரோக்கியத்தில் அவற்றின் பங்கும்
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் உற்பத்தி செய்வதன் மூலமும், செரிமானத்தை எளிதாக்க செரிமான நொதிகளை (Digestive Enzymes) சுரப்பதன் மூலமும் நமது கணையம் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அத்தியாவசிய உறுப்பின் நிலை நாம் உண்ணும் உணவுகளால் பெரிதும் பாதிக்கப்படலாம். பொது அழற்சி முதல் கணைய அழற்சி, கணைய புற்றுநோய் போன்ற கணைய நோய்களின் அதிக ஆபத்து வரை பல கணையப் பிரச்சினைகள் அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் தொடர்புடையவை ஆகும். அதிக கொழுப்புள்ள உணவு கணைய ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இந்த ஆபத்துகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் பற்றி இந்த வலைப்பதிவில் விவாதிப்போம்.
கணையத்தின் பங்கைப் புரிந்துகொள்வது
கணையம் என்பது பல வேலைகளை செய்யும் ஒரு உறுப்பு ஆகும். இது எக்ஸோக்ரைன், எண்டோகிரைன் ஆகிய இரண்டு பணிகளையும் செய்கிறது:
- எண்டோகிரைன் (நாளமில்லா சுரப்பி) செயல்பாடுகள்: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின், குளுகோகன் (glucagon) ஆகிய ஹார்மோன்கள் கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- எக்ஸோக்ரைன் செயல்பாடுகள்: இது லிபேஸ் மற்றும் அமிலேஸ் (lipase and amylase) உள்ளிட்ட புரதங்கள், லிப்பிடுகள் மற்றும் மாவுச்சத்து செரிமானத்துக்கு உதவும் செரிமான நொதிகளை வெளியிடுகிறது.
அதனால்தான் அதிக கொழுப்பு நிறைந்த உணவு, கணையத்தை அதிக சுமைக்கு ஆளாக்கி, அதன் செயல்பாட்டைப் பாதித்து, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
அதிக கொழுப்புள்ள உணவுகள் கணையத்தை எப்படி பாதிக்கின்றன
-
கணைய அழற்சியின் அதிகரித்த ஆபத்து
கணைய அழற்சி என்பது கணையத்தில் ஏற்ப்டும் நாள்பட்ட அழற்சி ஆகும். அதிக கொழுப்புள்ள உணவு மூலம் இந்த நிலை ஏற்படலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணவு கொழுப்புகளை அதிகமாக உட்கொள்வது கணையத்தை அதிக செரிமான நொதிகளை சுரக்க கட்டாயப்படுத்துவதன் மூலம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கணையத்தில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், அது இறுதியில் கடுமையான, நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கும். இது வலி, செரிமான பிரச்சினைகள், பிற சிக்கல்கள், இவற்றை ஏற்படுத்தும்.
-
உடல் பருமனுக்கும் இன்சுலின் எதிர்ப்புக்கும் பங்களிப்பு
உடல் பருமன் கணைய செயலிழப்புக்கு ஒரு அறியப்பட்ட ஆபத்து காரணி ஆகும். அதிக கொழுப்புள்ள உணவுகள் பொதுவாக கலோரிகளில் அதிகமாக இருக்கும் என்பது கூட அறியப்பட்ட ஒரு உண்மை ஆகும். இன்சுலின் எதிர்ப்பு என்பது அதிகப்படியான உடல் கொழுப்புக்கு, அதிலும் மிக முக்கியமாக வயிற்றுப் பகுதியில் காணப்படும் உள்ளுறுப்பு கொழுப்புடன் (visceral fat) தொடர்புடையது. இன்சுலின் எதிர்ப்பு, type 2 நீரிழிவு நோயின் வாய்ப்பை அதிகரிக்கிறது. கணையம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை மிகவும் கடினமாக்குவதன் மூலம் கணைய செயல்பாட்டை இது மேலும் பாதிக்கிறது.
-
கணைய புற்றுநோய்க்கான சாத்தியமான தொடர்பு
நீண்ட காலமாக அதிக கொழுப்புள்ள உணவு உட்கொள்வது கணையப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிகப்படியான உணவு கொழுப்பு சில ஹார்மோன்கள் மற்றும் அழற்சி markers-ன் உற்பத்தியைத் தூண்டும். அவை கணையக் கட்டிகள் உருவாகுவதை ஊக்குவிக்கும். இந்த தொடர்பு கணைய ஆரோக்கியத்திற்கு சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இருப்பினும், இதை நிறுவ கூடுதல் ஆராய்ச்சி தேவை.
கணையத்திற்கு ஏற்பட்ட அழுத்தத்தின் அறிகுறிகள்
கணையப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் மேலும் சிரமங்களைத் தவிர்க்கலாம். கணைய அழுத்தத்துடன் தொடர்புடைய சில அறிகுறிகள் இதோ கீழே:
- அதிக கொழுப்புள்ள உணவுக்குப் பிறகு வயிற்று வலி அல்லது வீக்கம்
- குமட்டல் அல்லது வாந்தி
- திடீர் உடல் எடை இழப்பு
- கொழுப்பு உணவுகளை ஜீரணிப்பதில் சிரமம் (எ.கா., கொழுப்பு நிறைந்த மலம்)
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.
கணைய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான வழிகள்
சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகள் கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அதிக கொழுப்புள்ள உணவுடன் தொடர்புடைய உடல்நல ஆபத்துகளைக் கூட குறைக்கும்.
-
உணவுமுறை மாற்றங்களைச் செய்யுங்கள்
- நல்ல புரதங்கள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட, வறுத்த உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளையும் (சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்களில் காணப்படும்) saturated கொழுப்புகளையும் கட்டுப்படுத்துங்கள்.
- அவகேடோ, கொட்டைகள், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
-
நிறைய தண்ணீர் குடிக்கவும்
செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பையும் தண்ணீர் குறைக்கிறது. பித்தப்பை கற்கள் கணையத்தை அடைத்து வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.
-
தினமும் சீரான உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சியானது, இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவுவதன் மூலம் கணையச் செயல்பாட்டை ஆதரிக்கிறது. எனவே, உடற்பயிற்சி செய்வதில் தொடர்ந்து ஈடுபடுவது நீண்டகால ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
அதிகம் மது அருந்தாதீர்கள்
கணைய அழற்சிக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்று அதிகப்படியான மது அருந்துதல் ஆகும். மது அருந்துவதைக் குறைப்பதன் மூலமோ அல்லது நிரந்தரமாக மதுவை நிறுத்துவதன் மூலமோ உங்கள் கணையத்தின் மீதான அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் கணைய ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவை இன்சுலின் எதிர்ப்பு, அழற்சி, கணைய புற்றுநோய் இவற்றுக்கான அபாயத்தை கூட அதிகரிக்கும். எந்தவொரு உணவும் நல்ல கொழுப்புகளால் மட்டுமே நிறைவடைகிறது. ஆனால் அது அதிக அளவில்லாமலும், தரமாக இருப்பதையும் உறுதி செய்யவேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். சத்தான உணவுகள் நிறைந்த சமச்சீர் உணவுக்கு நாம் முன்னுரிமை கொடுத்தால், ஆரோக்கியமான கணையமும், நீண்டகால நல்வாழ்வும் உறுதிபடும். மிதமான உடற்பயிற்சி, நல்ல வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவை உணவைத் தவிர கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிற அளவுகள் ஆகும். தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கும், உங்கள் உணவு, கணைய ஆரோக்கியம் குறித்தும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.