உட்காரும் தோரணை உங்கள் மூலத்தை எப்படி பாதிக்கிறது?
மேசை வேலைகள் வழக்கமாகிவிட்ட ஒரு சகாப்தத்தில் நாம் இன்று வாழ்கிறோம். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. வேலையைச் செய்ய ஓடியாடும் வழக்கமும், அவ்வாறு ஓடியாடும் வேலைகளும் குறைந்துவிட்டன. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள குறைவான உடல் வேலைகளும், மனிதனின் பழக்கவழக்க மாற்றங்களும் அதனுடன் புதிய சிக்கல்களை கொண்டுவந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்புகளில் ஒன்றாக மூலம் உள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்த தோரணையில் வேலை செய்வது ஏற்கனவே இருக்கும் மூல நோயை பாதிக்கிறதா? வாருங்கள் அலசுவோம்.
நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தல் (மேசை வேலை)
நீங்கள் ஒரு நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்து, பல மணிநேரங்கள் நகரவோ அல்லது எழுந்திருக்கவோ இல்லையென்றால், ஆசனவாய்ப் பகுதியில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிகரித்த அழுத்தம் குதப் பகுதியைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களில் அதிக இரத்தத்தை குவிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலை, மேற்கத்திய கழிப்பறையில் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருக்கும் நிலைக்கு முற்றிலும் ஒத்ததாகும். அதனால்தான் ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் உங்கள் நாற்காலியில் இருந்து எழுந்து 4-5 நடைகள் நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது ஏற்படும் மற்றொரு விஷயம், வால் எலும்பு குதப் பகுதியை எரிச்சலூட்டத் தொடங்குவது ஆகும். மேலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஆசனவாய்ப் பகுதியில் வெப்பத்தையும், வியர்வையையும் உருவாக்குகிறது, இது ஏற்கனவே இருக்கும் மூலத்தை மோசமாக்குகிறது.
கழிவறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது (மேற்கத்திய கழிப்பறை)
முன்பு கூறியது போல, மேற்கத்திய கழிவறையில் உட்கார்ந்திருக்கும் தோரணை ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போன்றது. இதில் நீங்கள் மலம் கழித்தால் உங்கள் ஆசனவாய் மீது அதிக அழுத்தம் கொடுப்பீர்கள் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இந்திய கழிப்பறை, மேற்கத்திய கழிப்பறையை விட நல்லதே. ஏனென்றால் அவை உட்கார்ந்திருக்கும் தோரணைக்கு பதிலாக, குந்துதல் தோரணையை ஏற்படுத்துவதால் மலம் இலகுவாக வெளிக்கு தள்ளப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் மலக்குடலையும், ஆசனவாயையும் ஒரு நேரடி கோணத்தில் கொண்டுவருகிறது. முக்குவதோ, அழுத்தம் கொடுப்பதோ குறைவு. இந்த வழியில் நீங்கள் ஆசனவாய் அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நேர்த்தியாக மலம் கழிக்கக்கூடிய சிறந்த தோரணையை அடையலாம். குந்துதல் தோரணை சிறந்த தோரணை என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை ஆகும்.
பயணத்தின் போது நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது
இதுவும் நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைப் போன்றது தான். உங்கள் இருக்கையிலிருந்து அவ்வப்போது எழுந்து சில படிகள் எடுத்து வைத்து நடக்கவும். நிற்கும் நிலை எப்போதும் சிறந்தது, ஏனென்றால் ஆசனவாயில் குவிக்கப்பட்ட அழுத்தத்தை உடைக்க அது உதவுகிறது. பயணம் செய்யும்போது உங்களுடன் பைல்ஸ் குஷனை எடுத்துக்கொண்டு பயணம் செல்லுங்கள். அதன் மீது அமர்ந்துக் கொண்டே பயணம் செய்வது நல்லது.
குறைந்த நடைபயிற்சி – குறைவான பயிற்சிகள்
நம்மில் பெரும்பாலோர் உடல் ரீதியாக குறைவான பயிற்சியில் ஈடுபடுகிறோம். மேலும் இது மலச்சிக்கல் அதிகரிப்பதற்கும், அதன் விளைவாக வரும் மூலத்துக்கு முக்கிய காரணமாக அமையும். குறைவாக நடப்பது, முன்பே உள்ள மூலத்தை மோசமாக்கும். நடைபயிற்சி ஆசனவாயில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கிறது. எனவே நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ இல்லாத உங்கள் வாழ்க்கை போக்கை கைவிடுவது நல்லது. அதற்கு பதிலாக நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்து உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கத் தொடங்குங்கள்.
வளைந்த தோரணையில் அமர்வது
நீங்கள் நிமிர்ந்த நிலையில் அமராதபோது, ஆசனவாய்ப் பகுதிக்கு அழுத்தம் அதிகமாக போகும். நீங்கள் நிமிர்ந்த நிலையில் அமர்ந்திருக்கும்போது, ஆசனவாய்க்கான அழுத்தம் சற்று தளர்ந்திருப்பதை நீங்கள் உணரலாம். மணிக்கணக்கில் நிமிர்ந்த நிலையில் அமர முடியாது என்பதும் கூட உண்மை தான். அதனால்தான் நீங்கள் எழுந்து நின்று சில படிகள் நடந்து அழுத்தத்தை குறைக்க வேண்டும்.