18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

ஹெர்னியா அறுவை சிகிச்சைக்கு, திறந்த முறை, லேப்ராஸ்கோபிக் முறை – இதில் எது சிறந்தது?

குடலிறக்க அறுவை சிகிச்சை என்பது அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில், பலவீனமான அல்லது கிழிந்த தசைகளை சரிசெய்ய செய்யப்படுகிறது. குடலிறக்கத்தை சரிசெய்ய திறந்த அறுவை சிகிச்சை முறை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறை, என்று இரண்டு முக்கிய நுட்பங்கள் உள்ளன. இரண்டு அணுகுமுறைகளிலும், நன்மைகள், குறைகள் உள்ளன. இந்த பதிவில், திறந்த முறையிலும், லேப்ராஸ்கோபிக் முறையிலும், குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதை ஒப்பீடு செய்வோம். இதன் மூலம் உங்கள் ஹெர்னியா அறுவை சிகிச்சை தேவையில் எந்த அணுகுமுறை சிறந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

திறந்த முறை ஹெர்னியா அறுவை சிகிச்சையைப் புரிந்துகொள்வோம்

  1. செயல்முறை – ஒரு கண்ணோட்டம்

குடலிறக்கம் பழுதுபார்ப்பு பழைய முறை என்று இந்த முறை அறியப்படுகிறது. இந்த செயல்முறையில் குடலிறக்கம் இருக்கும் இடத்தில் நேரடியாக ஒரு பெரிய கீறலை ஏற்படுத்தி திறக்கப்படுகிறது. தையல்களை பயன்படுத்தியோ, செயற்கை ஹெர்னியா மெஷ்ஷை பயன்படுத்தியோ பாதிக்கப்பட்ட பகுதியை வலுப்படுத்துவதற்கு, பிதுங்கி தொங்கும் திசுக்களை மீண்டும் அதன் நிலைக்குத் தள்ளுவார் அறுவைசிகிச்சை நிபுணர்..

  1. நிறைகள்

  • எளிமை: பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த அறுவை சிகிச்சை முறையில் விரிவான நிபுணத்துவம் பெற்றுள்ளனர். இது ஒரு எளிய அறுவை சிகிச்சை முறை ஆகும்.
  • அணுகல்தன்மை: சிக்கலான, பெரிய குடலிறக்கங்க வகைகளுக்கு இந்த திறந்த முறை பொருத்தமானது. ஏனென்றால் இது குடலிறக்க தளத்தை எளிதில் அணுகும்.
  • அறுவைசிகிச்சை செலவு: லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, ​​திறந்த குடலிறக்க அறுவை சிகிச்சை முறை பெரும்பாலும் குறைந்த செல்லவுள்ளதாக இருக்கும்.
  1. குறைகள்

  • வலி: அறுவைசிகிச்சை திறப்பு பெரியதாக இருப்பதால், அது நோயாளிக்கு அதிக வலியைக் கொடுக்கிறது, எனவே நோயாளிக்கு வலிநிவாரண மருந்துகள் நீண்ட நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். வலி மருந்துகள் நீண்ட காலத்திற்கு வழங்கப்படுவதால், வலி ​​மருந்துகளுடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயத்தை இது அதிகரிக்கிறது.
  • குணமாதல் அவகாசம்: பெரிய கீறல் காரணமாக, நோயாளிகளுக்கு நீண்ட மீட்பு அவகாசங்களும், அறுவை சிகிச்சைக்குப் பின் அதிக அசௌகரியமும் இருக்கும். இது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்கும். கூடுதலாக, நோயாளியின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும்.
  • வடுக்கள்: பெரிய கீறலில் இருந்து தெளிவான வடுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • நோய்த்தொற்று அபாயம்: கீறலின் அதிக அளவு காரணமாக, நோய்த்தொற்றுக்கான அதிக ஆபத்து அமையலாம்.
  • மருத்துவமனை செலவு: நீண்ட குணமாதல் நாட்கள் காரணமாக மருத்துவமனையில் கூடுதல் நாட்கள் தங்குவது என்பது நோயாளிக்கு அதிக செலவை ஏற்படுத்தும்.

லேப்ராஸ்கோபிக் ஹெர்னியா அறுவை சிகிச்சையைப் புரிந்துகொள்வோம்

  1. செயல்முறை – ஒரு கண்ணோட்டம்

லேப்ராஸ்கோபிக் குடலிறக்க அறுவை சிகிச்சையின் போது, ​​5 மிமீ முதல் 10 மிமீ வரை தடிமன் கொண்ட பல சிறிய ஓட்டைகளை வயிற்றுப்பகுதியில் ஏற்படுத்தி, ஒரு கேமரா மற்றும் சிறப்பு கருவிகள் அறுவை சிகிச்சை நிபுணரால் அதில் நுழைக்கப்படுகின்றன. இந்த செயல்முறையில் ஹெர்னியா மெஷ்ஷை குடலிறக்க பகுதியில் நிலையாக வைக்க லேப்ராஸ்கோபிக் உபகரணங்களையும், அதனோடு இருக்கும் கேமராவையும் பயன்படுத்தி, குடலிறக்கம் குணமாக்கப்படுகிறது.

  1. நிறைகள்

  • குறைந்தபட்ச காயம்: விரைவான குணமாதலும், சிறிய கீறல்களால் குறைவான திசு சேதமும் இந்த முறையில் ஏற்படுகிறது.
  • குறைவான வலி: அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பெரும்பாலான நோயாளிகள் வலியும், அசௌகரியமும் குறைவதாக கூறுகின்றனர்.
  • இயல்பான வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்புதல்: இந்த செயல்முறையில் குறைவான காயம் காரணமாக, அன்றாட நடவடிக்கைகளும், வேலைக்கு சீக்கிரம் திரும்புவதும் விரைவாக நிகழலாம்.
  • நோய்த்தொற்றின் குறைந்த ஆபத்து: சிறிய கீறல்கள் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இதில் குறைவாகவே உள்ளது.
  1. குறைகள்

  • மயக்க மருந்து: லேப்ராஸ்கோபிக் அமைப்பில் செயல்படும் போது பொது மயக்க மருந்து மட்டுமே கொடுக்க முடியும். எனவே மயக்க மருந்து ஆயத்த நிலை பெரும் பங்காற்றுகிறது. நோயாளி பொது மயக்க மருந்துக்கு தகுதியற்றவராக இருந்தால், லேப்ராஸ்கோபி மூலம் செய்யப்படும் எந்த அறுவை சிகிச்சையும் செய்ய அவர் தகுதியற்றவர் ஆவார்.
  • அவசரநிலைகள்: குடல் அடைப்பு, பிற பொதுவான ஹெர்னியா அவசரநிலை, பல பிற அவசர மருத்துவ சூழ்நிலைகள் ஆகிய மருத்துவ அவசர நிலைகளுக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.
  • சிக்கலானது: அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் லேப்ராஸ்கோபிக் சிறப்பு பயிற்சியும், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை அணுகவும் இயலாத காரியம் ஆகும். 
  • விலை: இதற்கு அதிக அதிநவீன தொழில்நுட்பமும், பயிச்சியும் தேவைப்படுவதால், இந்த அணுகுமுறை அதிக விலை கொண்டதாக இருக்கும்.
  • எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தாது: பெரிய அல்லது அதிக சிக்கலான குடலிறக்கங்களுக்கு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறை ஒரு விருப்பமாக பொதுவாகவே இருக்காது.

திறந்த மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைக்கு இடையே எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள்

  1. ஹெர்னியா வகையும் அளவும்

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை அணுகுமுறை குடலிறக்கத்தின் இடம், அளவு மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுது அமையும். சிறிய, குறைவான சிக்கல் வாய்ந்த குடலிறக்கங்களுக்கு, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் பெரிய, மிகவும் கடுமையான ஹெர்னியாக்களுக்கு திறந்த அறுவை சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.

  1. நோயாளியின் உடல்நல வரலாறு

நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலம், மருத்துவப் பின்னணி, முந்தைய அறுவை சிகிச்சை வரலாறு ஆகியவற்றால் அறுவை சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த காலத்தில் விரிவான அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நோயாளிகள், லேப்ராஸ்கோபிக் முறைக்கு பொருத்தமானவர்களாக இருக்க மாட்டார்கள்.

  1. அறுவை சிகிச்சை நிபுணத்துவம்

அறுவை சிகிச்சை நிபுணரின் பயிற்சி மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் அதிக நிபுணத்துவம் ஒரு அணுகுமுறையை விட மற்றொரு அணுகுமுறையில் இருந்தால் அறுவை சிகிச்சை முடிவு தீர்மானிக்கப்படலாம்.

குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான பயனுள்ள முறைகள், திறந்த மற்றும் லேபராஸ்கோபிக், ஆகிய இரண்டு செயல்முறைகளாலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் நிறைகளும், குறைகளும் உள்ளன. குடலிறக்கத்தின் விவரங்கள், நோயாளியின் மருத்துவ நிலை, அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவ நிலை உள்ளிட்ட பல காரணிகளுக்கு ஏற்ப உகந்த முறை தீர்மானிக்கப்படுகிறது. உங்களுடைய குறிப்பிட்ட ஹெர்னியா பிரச்னைக்கு எந்த முறை சிறப்பாக இருக்கும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசனையைப் பெறுவது முக்கியம். நோயாளிகள் இந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்வதன் மூலம் இது குறித்து மேலும் புரிதல் ஏற்படும்.

Call Now