18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

அதிக கொலஸ்ட்ரால் பித்தப்பை ஆரோக்கியத்தின் மேல் ஏற்படுத்தும் தாக்கம்

கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்பதன் விளைவுகளால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவற்றின் விளைவுகள் உண்மையில் இருதய ஆரொக்கியத்துக்கு மட்டும் குந்தகம் விளைவிப்பவை அல்ல. அதற்கு மேலேயும் உள்ளது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவுகள் பித்தப்பையையும் நேரடியாக பாதிக்கலாம். கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தநீரானது கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான ஒரு பொருள் ஆகும். அது பித்தப்பையில் சேமிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் பித்தப்பையின் இயற்கையான செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள், பிற பித்தப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் அதிக கொழுப்புக்கும், பித்தப்பை ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்வோம்.

பித்தப்பையின் செயல்பாடு

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழ் உள்ள ஒரு சிறிய உறுப்பு ஆகும். கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தை சேமிப்பதே பித்தப்பையின் செயல்பாடு ஆகும். நீங்கள் கொழுப்பு உணவுகளை உட்கொள்ளும்போது சிறுகுடலில் பித்தநீரை பித்தப்பை வெளியிடுகிறது. இது கொழுப்புகளை செரித்து அதில் இருந்து தெவையான ஊட்டத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. நீர், பித்த உப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் பிற கலவைகள் பித்தநீரில் உள்ள கூறுகள் ஆகும். பித்தப்பை சரியாக செயல்பட இந்த கூறுகளின் ஆரோக்கியமான சமநிலை தேவையாகும்.

ஆனால் பித்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சமநிலையை சீர்குலைக்கும். இது பித்தப்பையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து பித்தப்பை கற்கலையும், பிற பிரச்சனைகளையும் விளைவிக்கும்.

அதிக கொலஸ்ட்ரால் பித்தப்பையை எவ்வாறு பாதிக்கிறது

  1. பித்தப்பை கற்கள் உருவாக்கம்

கொலஸ்ட்ரால் வகை பித்தப்பைக் கற்கள் உருவாவது, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பித்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்கும்போது அதை உடைக்க போதுமான பித்த உப்புகள் இல்லாமல் போனால், ​​​​இந்த வகை பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பித்தப்பையில் உள்ள இந்த கூடுதல் கொலஸ்ட்ரால் படிகமாக மாறி, கடினப்பட்டு போகிறது. இது கொலஸ்ட்ரால் வகை பித்தப்பை கற்கலாக உருவாகிறது.

இந்த கொலஸ்ட்ரால் பித்தப்பைக் கற்களின் அளவும், எண்ணிக்கையும் மாறுபடலாம். சில பித்தப்பைக் கற்கள் எந்த அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும், சில பித்தநீர் குழாய்களைத் தடுக்கலாம். இதனால் வேதனையான வலி, வீக்கம் அல்லது தொற்று ஏற்படலாம்.

  1. பித்தப்பை செயலிழப்பு

அதிக கொலஸ்ட்ரால் பித்தத்தை காலியாக்கும் இயல்பான பித்தப்பை செயல்முறையையும் தடுக்கலாம். அதிகப்படியான கொலஸ்ட்ரால் பித்தத்தின் தன்மையை மேலும் கெட்டியாக்குகிறது. பித்தத்தை சிறுகுடலுக்குள் செலுத்தும் பித்தப்பையும் வேலையை கடினமாக்குகிறது. இது பித்தப்பை செயலிழப்பை ஏற்படுத்தலாம். பித்தப்பை சரியாகவும் முழுமையாகவும் காலியாகாதபோது வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு கோளாறே பித்தப்பை செயலிழப்பு ஆகும்.

  1. அழற்சியும் தொற்றும் அதிகரிக்கும் ஆபத்து

“கோலிசிஸ்டிடிஸ்” எனப்படும் நோய், பித்தநீர் குழாய்கள் பித்தப்பைக் கற்களால் அல்லது தடிமனான பித்தத்தால் அடைக்கப்பட்டு, அழற்சியை ஏற்படுத்தும். தீவிர நிலைகளில், இது பித்தப்பை சிதைவு அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு நிலைக்கும் அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக பித்தப்பை பிரச்சினைகளுக்கான ஆபத்து காரணிகள்

அதிக கொழுப்பு தொடர்பான பித்தப்பை பிரச்சினைகளை அதிகரிக்க பல காரணிகள் இருக்கலாம்:

  • மோசமான உணவுமுறை: Saturated வகை கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளும், நார்ச்சத்து குறைபாடு உள்ள உணவுகளும், கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை அதிகரிக்கிறது.
  • உடல் பருமன்: அதிக எடை அல்லது பருமனாக மாறுவது கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. பித்தப்பையில் கற்கள் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிக்கிறது.
  • Genetics: Certain people may have a hereditary predisposition to gallbladder problems as well as high cholesterol.
  • சோம்பிய வாழ்க்கை முறை: பித்தப்பை செயலிழப்பு, உயர்ந்த கொலஸ்ட்ரால் கொழுப்பி அளவு, ஆகியவை உட்கார்ந்த வாழ்க்கை முறையால் ஏற்படலாம்.
  • மரபியல்: சிலருக்கு பித்தப்பை பிரச்சனைகளும், அதிக கொலஸ்ட்ரால்  பிரச்சனைகளும் பரம்பரை பரம்பரையாக உண்டாகலாம்.

கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதன் மூலம் பித்தப்பை ஆரோக்கியத்தை பராமரித்தல்

  1. இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுங்கள்

  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கவும் உதவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள், red meat என்று சொல்லப்படும் சிவப்பு இறைச்சிகள், பால் பொருட்கள், saturated  வகை கொழுப்புகள், டிரான்ஸ் வகை கொழுப்புகளின் பாயன்பாடு ஆகியவற்றைக் குறைப்பதும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
  1. வழக்கமான உடற்பயிற்சிகள் 

வழக்கமான உடற்பயிற்சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், பித்தப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நம்முடைய உடல் இயங்கிக்கொண்டே இருப்பது முக்கியமானது. வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மிதமான செயல்களைச் செய்யுங்கள். 

  1. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்

ஆரோக்கியமான உடல் எடையை உணவு, உடற்பயிற்சி, ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அடையலாம். பராமரிக்கவும் செய்யலாம். இதைத் தக்கவைத்துக்கொள்வது உங்கள் பித்தப்பை பிரச்சினைகளையும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் அபாயத்தையும் குறைக்க உதவும். உடல் எடையை விரைவாகக் குறைக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். ஏனென்றால் இது பித்தப்பை கற்கள் உருவாவதன் அபாயத்தை அதிகரிக்கும்.

  1. உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசிக்கவும்

வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்து, உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம் ஆகும். உங்களுக்கு பித்தப்பை பிரச்சினைகளோ, அதிக கொலஸ்ட்ரால் வரலாறோ இருந்தால், அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, உங்கள் மருத்துவர் மருந்துகளையோ, பிற சிகிச்சைகளையோ பரிந்துரைக்கலாம்.

பித்தப்பையின் ஆரோக்கியம் அதிக கொலஸ்ட்ராலால் பெரிதும் பாதிக்கப்படலாம். இது பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கும், பித்தப்பை செயலிழப்பை ஏற்படுத்துவதற்கும், வீக்கத்தின் அபாயத்தை உயர்த்துவதற்கும் காரணமாக இருக்கலாம். சத்தான உணவு, அடிக்கடி உடற்பயிற்சி செய்தல், சிறந்த உடல் எடையை பராமரிப்பது, ஆகிய செயல்கள் மூலமும், உங்கள் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளின் வாய்ப்பைக் குறைக்கலாம். உங்களுக்கு அதிக கொழுப்பு அல்லது பித்தப்பை பிரச்சினைகள் இருந்தால், துல்லியமான நோயறிதலுக்கும், அதற்கேற்ற சிகிச்சைக்கும், உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுவது மிகவும் முக்கியம் ஆகும்.

Call Now