அதிக கொலஸ்ட்ரால் பித்தப்பை ஆரோக்கியத்தின் மேல் ஏற்படுத்தும் தாக்கம்
கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்பதன் விளைவுகளால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவற்றின் விளைவுகள் உண்மையில் இருதய ஆரொக்கியத்துக்கு மட்டும் குந்தகம் விளைவிப்பவை அல்ல. அதற்கு மேலேயும் உள்ளது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவுகள் பித்தப்பையையும் நேரடியாக பாதிக்கலாம். கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தநீரானது கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான ஒரு பொருள் ஆகும். அது பித்தப்பையில் சேமிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் பித்தப்பையின் இயற்கையான செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள், பிற பித்தப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் அதிக கொழுப்புக்கும், பித்தப்பை ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்வோம்.