பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவுகளை மீண்டும் வயிற்றுக்கு அறிமுகப்படுத்துதல்
பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு அறுவை சிகிச்சையாகும். இது நீண்டகால வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியமாக்குகிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் உடல் நிறைய மாற்றத்துக்கு உள்ளாகிறது. உணவுடனான உங்கள் உறவும் நிறைய மாறுகிறது. உணவுகளை மீண்டும் உங்கள் வயிற்றுக்கு அறிமுகப்படுத்துவது என்பதும் உங்கள் புதிய செரிமான அமைப்பு எப்படி அதனை ஆதரிக்கும் என்பதும் அறுவை சிகிச்சைக்குப் பிறகான உங்கள் மறுவாழ்வின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பல நிலைகளைப் பற்றி இந்த கட்டுரை விவாதிக்கும் அதே வேளையில், நீண்டகால உடல் நலனை உறுதி செய்யும் உணவை எப்படி உங்களுக்கு வடிவமைத்துக்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கும்.