பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய ஊட்டச்சத்து விளைவுகள்
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அல்லது எடை இழப்பு அறுவை சிகிச்சையானது கடுமையான உடல் பருமனான நபரின் எடையை குறைக்க செய்யப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை பொதுவாக உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்லாமல், அவர்களின் உடல் பருமன் காரணமாக மோசமடைந்துள்ள நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் செய்யப்படுகிறது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அது ஏற்படுத்தும் ஊட்டச்சத்து விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. இந்த கட்டுரையின் வாயிலாக அது ஏற்படுத்தும் விளைவுகளை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.