பருமனுக்கும், நோய்வயப்பட்ட பருமனுக்கும் உள்ள வேறுபாடு
BMI 30க்கு அதிகமாக இருந்தாலே “பருமன்” என்று பொருள்படும். ஒரு நபரின் BMI 40க்கு அதிகமாக இருந்தால் அவர் “நோய்வயப்பட்ட பருமன்” என்ற வகையின் கீழ் வருவார். மருத்துவ ரீதியாக கூறவேண்டும் என்றால், நோய்வயப்பட்ட பருமன் என்பது மிக மோசமான பருமனான நிலையை குறிக்கும். மிக மோசமான பருமனுடன் ஒருவர் இருந்தால், அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் அத்தகைய நோய்வயப்பட்ட நிலைக்கு தள்ளிவிடும் என்பதே முக்கியமான காரணம் ஆகும்.