குடல்வால் அறுவை சிகிச்சை என்றால் என்ன?
அப்பெண்டிக்ஸ் என்று சொல்லப்படும் குடல்வால் பகுதியில் தொற்று ஏற்பட்டாலோ, அதில் வீக்கம் ஏற்பட்டாலோ (அழற்சி), குடல்வாலை முழுமையாக அகற்றிவிடுவதே குடல்வால் அகற்று அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை முறையை அப்பென்டக்டமி (Appendectomy) என்று மருத்துவத்தில் அழைக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சை முறையும், லேபரோஸ்கோபி முறையில் துளையிட்டே செய்துவிடுகிறார்கள். வயிற்றின் அடிப்பகுதியை கீறி திறந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.