குடலிறக்க அறுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?
இங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகை ஹெர்னியா விரைப்பையின் அருகே ஏற்படுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற அச்சம் பொதுவாக எல்லோருக்கும் எழும். இரண்டு விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு குறி விரைப்புத்தன்மையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா? செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா? அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா? வாருங்கள் பார்ப்போம்.