18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கழிப்பறை பயிற்சி (Toilet Training) என்றால் என்ன?

கழிப்பறை பயிற்சி (Toilet Training) என்பது பெரும்பாலும் குழந்தைகளை கழிப்பறையைப் பயன்படுத்துவதற்காக ஆயத்தப்படுத்துவதற்கான பயிற்சியைக் குறிக்கிறது. இருப்பினும், வெவ்வேறு காரணங்களுக்காக பெரியவர்களுக்கும் கழிப்பறை பயிற்சி தேவை என்பது நாம் மறந்துபோய்விட்ட உண்மை.

குழந்தைகளுக்கான கழிப்பறை பயிற்சி

பொதுவாக இங்கு கழிப்பறை பயிற்சியானது, சிறு குழந்தை வைக்கப்பட்டுள்ள டயப்பரில் அல்லது துணி அல்லது பாயில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்குப் பதிலாக, கழிப்பறையைப் பயன்படுத்தி சிறுநீர் கழிக்க அல்லது மலம் கழிக்கும் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துவதை குறிக்கிறது. இங்கே கீழே சொல்லப்பட்டது நடக்கிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்.

  • குழந்தை தனது டயப்பரைப் பற்றிக்கொள்வது
  • குழந்தை தனது டயப்பர்கள் அல்லது உள்ளாடைகளைக் கீழே இழுப்பது
  • 2 மணிநேரம் அல்லது அதற்கும் மேலோ குழந்தை டயப்பரை உலர்ந்த நிலையில் வைத்திருத்தல்
  • குழந்தைகளுக்கான கழிப்பறை கலன்களை பயன்படுத்துவதைப் பற்றிய வார்த்தைகளைப் புரிந்துகொள்வது
  • அதை பயன்படுத்துவது தொடர்பான சொல்லாடல்களை புரிந்துக்கொள்ளுவது, அதனை பயன்படுத்துவது
  • சிறுநீர் கழித்தலுக்கும், மலம் கழித்தலுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கான கழிப்பறை கலன்களை பயன்படுத்துவவது

மேலே குறிப்பிடப்பட்ட இந்த அறிகுறிகள் அவர்கள் முறையான கழிப்பறை பயிற்சிக்கு தயாராக இருக்கிறார்களா என்பதை உணர்த்தும்.

பெரியவர்களுக்கும் ஏன் கழிப்பறை பயிற்சி தேவைப்படுகிறது?

பொதுவாக பெரியவர்களுக்கு இரண்டு மருத்துவ காரணங்களால் கழிப்பறை பயிற்சி தேவைப்படுகிறது. ஒன்று சிறுநீர் அடங்காமை (Urinary Incontinence), இன்னொன்று மலம் அடங்காமை (Fecal Incontinence). இது தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் கழிப்பறை பயிற்சி தேவைப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. மலக்குடலை சுத்தப்படுத்த ஒரு நாளில் ஒரு வழக்கமான நேரத்தை தமக்காக வைத்துக் கொண்டு உடலை அவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. எப்படி என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சிறுநீர் அடங்காமை (Urinary Incontinence)

சிறுநீர் அடங்காமைக்கான மூன்று முக்கிய காரணங்களாக அழுத்தம் (stress), சிறுநீர் கழிக்கும் உணர்வு (urge), நிரம்பி வழிதல் (overflow) ஆகியவற்றை சொல்லலாம்.

இருமலின் போது அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால், அதன் அழுத்தம் தாங்காமல் சிறுநீர் வெளியேறுவது அழுத்த சிறுநீர் அடங்காமை எனப்படுகிறது. சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, சிறுநீர் கழிக்கும் “உணர்வு” வகை அடங்காமை எனப்படுகிறது. நிரம்பி வழிதல் அடங்காமை என்பது சிறிய அளவிலான சிறுநீர் தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் வெளியேறுவதாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பையில் புற்றுநோய், ஆண்களுக்கு புரோஸ்டேட், தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீரிழிவு நோய், போன்ற நோய்நிலைகள் சிறுநீர் அடங்காமை ஏற்படுவதற்கான சில காரணங்கள் ஆகும்.

மலம் அடங்காமை (Fecal Incontinence)

மலம் அடங்காமை பொதுவாக பெண்கள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. இது மூப்பினால் (Ageing) ஏற்படும் ஒரு நோய்நிலை. ஆசனவாயின் குதப்பகுதியில் உள்ள ஸ்பிங்க்டரில் ஏற்படும் தசைச்சேதம், மலக்குடலில் தசைச்சேதம், நரம்பு சேதம், மலக்குடல் புற்றுநோய் போன்ற பல காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம். சில சமயங்களில் வெளிப்புற மூலக்கட்டிகள் அதிகமாக வளர்ந்தால் மலம் அடங்காமை ஏற்படலாம். இது குதப்பகுதியில் உள்ள ஸ்பிங்க்டரை முழுமையாக மூட அனுமதிக்காததால் ஏற்படுகிறது.

சிறுநீர் மற்றும் மலம் அடங்காமைக்கு இடையிலான பொதுவான காரணம் டிமென்ஷியா, ,அல்சைமர் ஆகிய நோய்கள் ஆகும். இந்த நிலைகளில் ஏதேனும் ஒன்று ஒரு நோயாளிக்கு இருக்கும்போது, அவை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மோசமடைந்தால், அவர் தனது குழந்தைப் பருவத்தில் பெற்ற கழிப்பறை பயிற்சியை ஆழ்மனதில் “மறக்க” முடிகிறது. இதன் விளைவாக, சிறுநீர் அல்லது மலம் அடங்காமை ஏற்படலாம்.

சிறுநீர் அடங்காமைக்கு, சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை எதிர்க்க நோயாளிக்கு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு சிறுநீர்ப்பை பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையால், கழிப்பறைக்கு செல்லுவதற்கான  திட்டமிடப்பட்ட நேர அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. எனவே இங்கு பொதுவாக கழிப்பறை பயிற்சி என்பது, இந்த மாதிரியான பயிற்சிகள் மூலம் ஸ்பிங்க்டர் தசைகளின் வலிமையை அதிகரித்து, அதன் மூலம் சிறுநீர் அடங்காமையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மல அடங்காமை பிரச்னைக்கு, பெரியவர்களுக்கு அளிக்கப்படும் கழிப்பறை பயிற்சி சிறிது சவாலானது ஆகும். ஏனெனில் இந்த பிரச்சனை ஏற்படுவதே பல்வேறு மலக்குடல் தசைகளுக்கு ஏற்படும் சேதத்தால் தான். கழிவறை பயிற்சியை ஊக்குவிக்க கெகல் (Kegel) பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. கழிவறைக்குச் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது மலம் அடங்காமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். இருப்பினும், கடுமையான தசை சேதத்தால் ஏற்படும் மலம் அடங்காமைக்கு, கழிப்பறை பயிற்சி உதவியாக இருக்காது என்பதையும், அந்த நிலைமையை சரிசெய்ய அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குழந்தைகளுக்கும் பொதுவான கழிப்பறை பயிற்சி

மலம் கழிப்பது என்பது பொதுவாக காலையில் வழக்கமான ஒன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் குடலை சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நமது பாரம்பரிய அறிவு கூறுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறையோ, ஒரு வாரத்திற்கு மூன்று முறையோ மலம் கழிப்பது என்பது, எப்படி இருந்தாலும் இயல்பானது தான். கண்டிப்பாக தினமும் மலம் கழிக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறையும், அந்த நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மலம் கழிக்கிறார்கள். இதை வழமையாக ஆக்கிக்கொள்வது முக்கியம் ஆகும். எந்நேரமும் விளையாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தைகளும், பிஸியான ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கொண்ட பெரியவர்களும், தாங்கள் வழமையான நேரத்தில் மலம் கழிக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இது கண்டிப்பாக நிறைய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால்தான், ஒழுங்கற்ற குடல் இயக்கங்களைக் கொண்ட பெரியவர்கள் மற்றும் வயதான குழந்தைகளுக்கு விடாமுயற்சியுடன் கழிப்பறை பயிற்சி அவசியம் ஆகிறது. வேண்டுமென்றே கழிப்பறையில் உட்கார்ந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்க முயல்வது என்பது நமது குடலுக்குப் படிப்படியாக பயிற்சி அளிக்க எதுவாக இருக்கும். எனவே இந்த தாமதமான கழிப்பறை பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Call Now