18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

Coping with Food Addiction After Bariatric Surgery

Bariatric surgery is a procedure that can change an obese person’s life. It helps in bringing drastic weight loss for those who suffer from obesity. It reduces physical hunger by changing the size of the stomach. But bariatric surgery does not address the psychological and emotional aspects of eating. Food addiction is a problem for some patients even after undergoing bariatric surgery. But there are ways to cope. Maintaining long-term success and general well-being requires learning those coping mechanisms.

Read More

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை எப்படி கண்டறிவது

பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer), கொலோரெக்டல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகில் மிகவும் பரவலாக உள்ள புற்றுநோய்களில் ஒன்றாகும். இது அமைதியாக வளருகிறது. அப்படி வளர்ந்த பின்னர் மட்டுமே அறிகுறிகளையும் உணர்வுகளையும் காட்டுகிறது. ஆனால் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை அடையாளம் காணும்போது, உயிர் காக்கும் சிறந்த முடிவுகளை நம்மால் எடுக்க முடியும். வயது (50 வயதுக்கு மேல்), பெருங்குடல் புற்றுநோய் அல்லது வேறு எந்த வகை புற்றுநோயின் குடும்ப வரலாறு, உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறை போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு இது நேரலாம். இந்த நுட்பமான அறிகுறிகளைப் பற்றி விழிப்புணர்வு இருப்பது உயிர்களைக் காப்பாற்ற உதவும்.

Read More

7 Major Complications of Chronic Pancreatitis

Chronic pancreatitis is a persistent inflammation of the pancreas that causes irreparable harm over a period of time. In contrast to acute pancreatitis, chronic pancreatitis gradually reduces the pancreas’ capacity to function and can lead to a number of dangerous side effects. It may be understood that Acute Pancreatitis gets cured most of the time with proper treatment while Chronic Pancreatitis cannot be cured fully but can only be managed. It is needed to properly understand the issues that come along with Chronic pancreatitis because prompt treatment and management can enhance quality of life and stop further decline.

Read More

பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு: பித்தப்பை இல்லாமல் நம் உணவுமுறை

கோலிசிஸ்டெக்டமி, பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது, இது பித்தப்பை கற்கள் மற்றும் சில பித்தப்பை நோய்களுக்கு பொதுவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறை வலிமிகுந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்குப்பிறகு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது உணவு விஷயத்தில் உண்மையாகும். பித்தப்பை, பித்தநீரை சேமித்து வெளியிடுவதில் பங்கு வகிக்கிறது. பித்தநீர் என்பது ஒரு செரிமான திரவமாகும். இது கொழுப்புகளை கரைத்து ஜீரணிக்க உதவுகிறது. பித்தப்பை இல்லை என்றால், பித்தநீர் கல்லீரலிலிருந்து நேரடியாக சிறுகுடலுக்கு ஒரு தொடர்ச்சியான, கட்டுப்பாடற்ற ஓட்டத்தில் செல்கிறது. இது வெளிப்படையாக செரிமானத்தை பாதிக்கலாம்.

Read More

How to Spot Early Signs of Colon Cancer

Colon cancer is also called Colorectal cancer. It is one of the most prevalent malignancies in the world. It progresses silently and it shows signs and symptoms only later. Prompt diagnosis and better results however can be achieved when early indicators of colon cancer are identified. It is true for those with risk factors like age (50 plus), having a family history of colon cancer or any type of cancer for that matter, being obese, leading a sedentary lifestyle, etc. Being aware of these subtle symptoms can indeed save lives.

Read More

இளமைப் பருவத்தில் ஃபோலேட்டின் முக்கியத்துவம்

ஃபோலேட், வைட்டமின் பி9 என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது டிஎன்ஏ தொகுப்பு, செல்லுலார் வளர்ச்சி, நரம்பு மண்டல வளர்ச்சி (nerve system development), இரத்த சிவப்பணு உருவாக்கம் ஆகியவற்றுக்கு மிகவும் தேவைப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இது முக்கியமானதாக இருந்தாலும், இளம் பருவத்தில் ஃபோலேட் மிகவும் முக்கியமானதாகிறது. இந்த இளம் பருவ காலம் விரைவான உடல், அறிவாற்றல் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது.

Read More

Post-Cholecystectomy: Diet Without a Gallbladder

Cholecystectomy, also called gallbladder removal surgery, is a common treatment for gallstones and certain other gallbladder diseases. The procedure brings relief from painful symptoms but it requires certain lifestyle adjustments. This is true when it comes to diet. The gallbladder plays a role in storing and releasing bile. Bile is a digestive fluid that helps break down fats. Without the gallbladder, bile flows directly from the liver into the small intestine in a continuous, unregulated stream. This can obviously impact digestion.

Read More

எருக்களிப்பு எனப்படும் GERD சுவாசப் பிரச்சினைகளை மோசமாக்குமா?

வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சில சமயம் சட்டென்று ஏறும்போதும், இன்னும் சில சமயங்களில் உணவுக்குழாயில் திரும்பி வரும்போதும் அது எதிர்வினையாற்றும். உணவுக்குழாயின் உட்புற சுவரை எரிச்சலூட்டும்போது ஏற்படும் நிலையை எருக்களிப்பு அல்லது GERD என்று சொல்கிறோம். இதனை ஆங்கிலத்தில் பொதுவாக Acid Reflux என்று கூறுவார்கள். நெஞ்செரிச்சலும், எருக்களிப்பு வாந்தியும் GERD-ன் பொதுவான அறிகுறிகளாகும். சில நேரங்களில் சுவாச அமைப்பும் இதனால் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். உண்மையில், நீண்டகால சுவாசப் பிரச்சினைகள் உள்ள பலருக்கு எருக்களிப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது கூட தெரியாது.

Read More

Illustration of a teens playing with highlighted areas of folate-rich foods like leafy greens and legumes.

The Importance of Folate During Adolescence

Folate is also known as vitamin B9. It is a water-soluble vitamin that is much needed for DNA synthesis, cellular growth and red blood cell formation. Though it is important at every stage of life, folate becomes very crucial during the adolescent period. This adolescent period is characterized by rapid physical and cognitive development.

Read More

உடல் பருமனுக்கும், பெருங்குடல் புற்றுநோய்க்கும் இடையேயான தொடர்பு

பெருங்குடல் புற்றுநோய் என்பது மலக்குடல் அல்லது Colon என்று சொல்லப்படும் பெருங்குடலின் கடைசிப்பகுதியில் தொடங்குகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் மிகவும் பரவலான புற்றுநோய் வகைகளில் இதுவும் ஒன்றாகும். பெருங்குடல் புற்றுநோயின் எந்தவொரு வெற்றிகரமான சிகிச்சையும் ஆரம்பகால கண்டறிதலைப் பொறுத்தது. ஆபத்து காரணிகளைப் பற்றிய புரிதல் பெருங்குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவும். உடல் பருமன் முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும், இந்த காரணி இப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை உடல் பருமன் எப்படி பாதிக்கிறது

பெருங்குடல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும் காரணியாக உடல் பருமனை தொடர்புபடுத்தும் பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

  • நாள்பட்ட அழற்சி: அதிகப்படியான உடல் கொழுப்பு இருப்பது தொடர்ந்து உடலில் அழற்சியை ஏற்படுத்தும். அழற்சி செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். புற்றுநோய் அபாயத்தை அது அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்பதையும் நாம் அறியவேண்டும்.
  • இன்சுலின் எதிர்ப்பு: உடல் பருமன் காலவரையின்றி இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது உடல் சுரக்கும் அளவை இன்சுலின் உயர்த்தக்கூடும். உயர்ந்த இன்சுலின் அளவுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், பெருக்கத்தையும் ஊக்குவிக்கும் என்று அறியப்படுகிறது.
  • ஹார்மோன் சமநிலையின்மை: இன்சுலின் அளவு அதிகரிப்பு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் பெருங்குடலில் கட்டி உருவாவதை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
  • மாற்றப்பட்ட குடல் நுண்ணுயிரி: உடல் பருமன் குடல் பாக்டீரியா சமநிலையை சீர்குலைக்கும். இது அதிகரித்த அழற்சிக்கும், புற்றுநோய் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

உடல் பருமன் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை ஏன் அதிகரிக்கிறது?

நாம் அனைவரும் கருதுவதை விட உடல் பருமனுக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. இது பல வழிமுறைகளை உள்ளடக்கியது, அவற்றில் சில இங்கே:

  • கொழுப்பு திசுக்களால் ஹார்மோன் உற்பத்தி: லெப்டின் மற்றும் அடிபோனெக்டின் போன்ற ஹார்மோன்கள் கொழுப்பு திசுக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக லெப்டின் அளவுகள் அழற்சியை அதிகரிக்கும். இதற்கு நேரெதிராக குறைந்த அடிபோனெக்டின் அளவுகள் புற்றுநோய்க்கட்டி வளர்ச்சிக்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்கும்.
  • பித்த அமிலங்கள்: உடல் பருமனுடன் பித்த அமிலங்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த செயல்முறை சீர்குலைந்தால், அது பெருங்குடலின் புறணிக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் புற்றுநோயின் அபாயத்தையும் அது அதிகரிக்கும்.
  • சோம்பிய வாழ்க்கை முறை: உடல் செயல்பாடு இல்லாதது உடல் பருமனில் கொண்டு வைக்கிறது. இந்த காரணி மட்டுமே பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து உள்ளது?

உடல் பருமனுக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பைப் பொறுத்தவரை யாரெல்லாம் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பது இதோ:

  • 30-க்கும் மேலே (BMI) குறியீடு உள்ளவர்கள்
  • குடும்பத்தில் பெருங்குடல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்
  • வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது வகை 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள்
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்பவர்கள்

தடுப்பு முறைகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். இது உடல் பருமன் உள்ளவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும்.

  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்: படிப்படியாக உடல் எடை இழப்பை நோக்கமாகக் கொள்ளுங்கள். நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எடை இழப்பை அடையுங்கள்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்: நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை ஆதரிக்கின்றன. மேலும் அவை பெருங்குடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றன.
  • உடல் செயல்பாடு: உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு நல்லது. இது அழற்சியைக் குறைக்கவும் உதவும்.
  • பரிசோதனை: வழக்கமான கொலோனோஸ்கோபி பரிசோதனைகள் மற்றும் பிற பரிசோதனை நுட்பங்கள் பெருங்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும். பெருங்குடலில் ஏதேனும் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களை அடையாளம் காணவும் அது உதவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும். இது புற்றுநோயின் அபாயத்தை பெருமளவில் குறைக்கும்.

பருமனான நோயாளிகளுக்கு ஏற்படும் சிகிச்சை சவால்கள்

பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும்போது பருமனான மக்கள் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளலாம்:

  • அறுவை சிகிச்சை சிக்கல்கள்: எந்தவொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பருமனானவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.
  • கீமோதெரபி அளவு: கீமோதெரப்பி அளவு என்பது பெரும்பாலும் உடல் எடை நிமித்தம் அளவிடப்படுகிறது.
  • திரும்ப நிகழும் ஆபத்து: சாதாரண எடை கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு மீண்டும் மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும், மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், இவற்றின் மூலம் விளைவுகளை நேர்மறையாக மேம்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

உடல் பருமனுக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அது அப்படி தான் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளவும் கூடாது. உடல் பருமன் அதிகரித்து வருவதால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிற வகையான புற்றுநோய்களிலிருந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம் ஆகும். சமச்சீரான உணவைப் பின்பற்றுங்கள், மேலும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தோற்கடிக்க உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். உடல் பருமனின் தீய விளைவுகள் குறித்து மக்கள் அதிகளவில் அறிந்திருந்தால் தான், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அறிவுள்ள வாழ்க்கை முறை முடிவுகளை அவர்கள் எடுக்க முடியும்.

Call Now