18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

இரத்த சோகையை கண்டறியும் முறைகள்

இரத்த சோகை குறித்த எங்கள் முந்தைய வலைப்பதிவில், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதைக் கண்டோம். அதில் இரும்பு சத்தைத் தவிர வேறு பல காரணங்களும் இரத்த சோகை எப்படி ஏற்படுத்தும் என்பதையும் கண்டோம். பல்வேறு இரத்த சோகை காரணங்கள் பல்வேறு நோயறிதல் முறைகளைக் கொண்டுள்ளன. அதனால் கண்டறியும் முறைக்குச் செல்வதற்கு முன், இரத்த சோகையின் அறிகுறிகளைப் பார்ப்பது நல்லது.

இரத்த சோகையின் பொதுவான அறிகுறிகள்

இரத்த சோகை பல அறிகுறிகளை ஏற்படுத்தலாம். மேலும் இரத்த சோகை முதன்முதலில் ஏற்பட்டதற்கான காரணத்துடன் அவை வேறுபடலாம். இதன் பொருள், இரத்த சோகைக்கான காரணம் அறிகுறிகளையும் தீர்மானிக்கிறது என்பதாகும். இரத்த சோகையின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் வெளிப்படாது. சில சமயங்களில் அவை மிகவும் லேசாக வெளிப்படும் என்பதையும் கவனிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில், நோயாளி பொதுவான அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிடுவார். ஆனால் இரத்த சோகையின் பொதுவான அறிகுறிகளாக கீழ்க்கண்டவை இருக்கும். இது இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் பொதுவான அறிகுறிகள் என்றே கொள்ளலாம்.

– சோர்வு மற்றும் பலவீனமான ஒரு உணர்வு

– மயக்கம் மற்றும் தலைவலி உணர்தல்

– சீரற்ற இதய துடிப்பு

– மூச்சு திணறல்

– வெளிரிய தோல் அல்லது சில நேரங்களில் மஞ்சள் தோல்

– கைகளும் கால்களும் சில்லிட்டுப் போதல்

– எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது

இரத்த சோகை கண்டறிதல்

எந்தவொரு நோயறிதலுக்கும் முதல் படி அனுபவம் வாய்ந்த மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளியுடன் பேசும் நோய் குறித்த அனுபவப்பேச்சு ஆகும். நோயாளி அனுபவித்த அறிகுறிகளைக் கண்டறிவதிலும், நோயாளிக்கு முன்பே இருக்கும் மருத்துவ குறைபாடுகள், மருத்துவ நிலைமைகளின் குடும்ப வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வதில் இந்த விவாதம் முக்கியமானது ஆகும். இதற்குப் பிறகு, மருத்துவர் உடல் பரிசோதனை செய்யத் தொடங்குகிறார். இது இரத்த சோகையின் அறிகுறிகளையும் இரத்த சோகை இருப்பதை சுட்டிக்காட்டக்கூடிய எந்தவொரு அறிகுறிகளையும் இருப்பதை உறுதி செய்கிறது.

இரத்த சோகையின் இருப்பையையும், வகையையும் உறுதிப்படுத்த மருத்துவர் உங்களிடம் குறிப்பிட்ட சோதனைகள் சிலவற்றை முதற் கட்டத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இந்த கலந்துரையாடல் மற்றும் உடல் பரிசோதனைக்குப் பின்னரும் கேட்டுக் கொள்வார்.

முதல் சோதனை சிபிசி என்று சொல்லப்படும் முழுமையான இரத்த எண்ணிக்கை (Complete Blood Count) சோதனை ஆகும். இதுவே மருத்துவர் உங்களிடம் கேட்கக்கூடிய முதல் நிலை இரத்த பரிசோதனை ஆகும்.

முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி)

இந்த சோதனை WBC, பிளேட்லெட்டுகள் போன்ற பிற இரத்த அணுக்களின் வகைகளுடன் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் பெற உதவுகிறது. RBC என்ற சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஹீமோக்ரிட் மதிப்பு (Hemocrit value) என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்த சோகை இருப்பதைக் குறிக்கலாம். சிவப்பணுக்களின் எண்ணிக்கை விவரங்களுடன், ஹீமோகுளோபின் அளவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. இது மருத்துவருக்கு கூடுதல் தகவல்களைத் தரவல்லது. சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோக்ரிட் மதிப்பு ஆண்களில் 40% முதல் 52% வரையிலும், பெண்களில் 35% முதல் 47% வரையிலும் இருந்தால், ரத்த சோகை இல்லை என்று கருதப்படுகின்றன. இதேபோல், ஹீமோகுளோபின் மதிப்பு ஆண்களுக்கு 14-18 கிராம் மற்றும் பெண்களுக்கு 12-16 கிராம் வரை இருந்தால், அவை ரத்த சோகை இல்லை என்பதை காட்டுகிறது. எனவே இரத்த சோகை கண்டறிய ஹீமோக்ரிட் மதிப்பு மற்றும் ஹீமோகுளோபின் மதிப்பில் உள்ள ஒழுங்கின்மையை சிபிசி அறிக்கை நமக்கு தருகிறது.

பெரிஃபெரல் ஸ்மியர் சோதனை (Peripheral Smear Test)

பெரிஃபெரல் ஸ்மியர் சோதனையானது இரத்த அணுக்களின் அளவு, வடிவம், எண்ணிக்கை போன்ற காரணிகளையும், இரத்த அணுக்களின் உருவ அமைப்பை, இரத்த அணுக்களில் ஏதேனும் தொற்று ஆகியவை இருக்கிறதா என்று  கண்டறியவும் உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் பி 12 குறைபாடு, தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை அல்லது புற்றுநோயால் ஏற்படும் இரத்த சோகை ஆகியவற்றை கண்டறிய இந்த சோதனை உதவி புரியும். சுருக்கமாக சொன்னால், இந்த சோதனை சிவப்பணுக்களின் உருவவியல் பற்றிய விரிவான தகவல்களை தருகிறது. மேலும் இது இரத்த சோகையின் வகை அல்லது காரணத்தை உறுதிப்படுத்தவும், வேறு குறிப்பிட்ட எந்த வகை சோதனைகளை எடுக்க வேண்டும் என்பதற்கான திசையை மருத்துவர்களுக்கு தருகிறது.

மோஷன் டெஸ்ட் (மலப்பரிசோதனை)

– புழுக்கள் இருந்தாலும் கூட இரத்த சோகை ஏற்படலாம். மலத்தில் புழுக்களின் முட்டைகள் இருந்தால் இந்த பரிசோதனை அதைக் கண்டறியும். ரவுண்ட் வார்ம்ஸ் என்னும் நாக்கு பூச்சிகள், போன்ற சில புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சி இரத்த சோகையை ஏற்படுத்தும்.

– மலத்தில் ஏதேனும் சிவப்பு ரத்த அணுக்கள் இருப்பது தென்பட்டால் மூலம் அல்லது இரைப்பை குடல் புற்றுநோய் காரணமாக இரத்த சோகை ஏற்பட்டதை இந்த பரிசோதனை கோடிட்டு காட்டலாம்.

எண்டோஸ்கோபி – மேல் வயிறு மற்றும் குடல் எண்டோஸ்கோபி

– வேறு எந்த காரணங்களும் இல்லை என்றால், இரும்பு, வைட்டமின்கள் பி 12, பி 6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை உறிஞ்சுவதில் உள்ள சிக்கல் ரத்த சோகை ஏற்பட ஒரு சாத்தியமாக இருக்கலாம். இந்த வகை ரத்த சோகையை எண்டோஸ்கோபியில் காணலாம்.

– மேல் ஜி.ஐ புற்றுநோய் (உணவுக் குழாய், வயிறு) கூட இரத்த சோகையை ஏற்படுத்தும். இது எண்டோஸ்கோபியைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டறியலாம்.

இரத்த சோகையைக் கண்டறிவதற்கான குறிப்பிட்ட சில சோதனைகள்

– இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறதா என்பதை அறிய இரத்தத்தில் உள்ள இரும்பு அளவை சரிபார்க்க மருத்துவர் கேட்கலாம். சீரம் ஃபெரிடின் அளவு (serum ferritin level) போன்ற அறிக்கைகள் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இரத்த சோகை குறித்த துல்லியமான விவரங்களைத் தரும்.

– வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் குறைபாட்டால் கூட இரத்த சோகை ஏற்படுகிறது. வைட்டமின் பி 12, ஃபோலேட் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்று பெரிஃபெரல் ஸ்மியர் பரிசோதனையிலிருந்து மருத்துவர் ஊகித்தால், வைட்டமின் பி 12, பி 6 மற்றும் ஃபோலேட் அளவைக் கொடுக்கக்கூடிய ஒரு பரிசோதனையை கேட்கலாம். இந்த வழியில், வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கண்டறிய முடியும்.

– வைட்டமின் பி 12 இன் குறைபாட்டால் பல நேரங்களில் சிவப்பு ரத்த அணுக்கள் வழக்கத்திற்கு மாறாக விரிவடையும். மெகாலோபிளாஸ்டிக் அனீமியா இருப்பதற்கான காரணத்தை பெரிஃபெரல் ஸ்மியர் சோதனையால் கண்டறியலாம். இதே முறையால், அரிவாள்-செல் இரத்த சோகையையும் (sickle cell anemia) கண்டறிய முடியும். இந்த ஹீமோலிடிக் அனீமியா வகை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானது. எனவே இந்த நோயறிதல் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்தில் செய்யப்பட்டால் உயிர் காக்கும்.

– அரிதாக, இரத்த அணுக்கள், நோயெதிர்ப்பு குறைபாடு காரணமாக சிவப்பணுக்களின் மீதான நோயெதிர்ப்பு தாக்குதல் காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். இவை சில சிறப்பு இரத்த பரிசோதனைகளைப் பயன்படுத்தி கண்டறியப்படலாம்.

– மிகவும் அரிதாக, எலும்பு மஜ்ஜை நோய்கள் இரத்த சோகையை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், எலும்பு மஜ்ஜை பரிசோதனையை செய்துக் கொள்ள மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்.

Call Now