18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையா?

உடல் பருமனை குறைக்க பல வழிமுறைகள் இருந்தாலும், பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையும் அதில் ஒன்று. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சாதாரண உடல் பருமனை விடவும், நோய்வயப்பட்ட (morbidly obese) உடல் பருமனுக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அப்படியென்றால் எல்லா வித உடல் பருமனுக்கும் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை தீரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். விரிவாக அலசுவோம்.

உடல் பருமனில் வகைகள்

உடல் பருமனை, BMI என்று சொல்லக்கூடிய அளவினை பொறுத்து பல வகைகளாக பிரிப்பார்கள். அது என்ன BMI? கிலோகிராமில் அளவிடப்பட்ட உடல் எடையை சம்பந்தப்பட்டவரின் உடல் உயரத்தை மீட்டர் கணக்கில் இரண்டு மடங்காக பெருக்கி வரும் மதிப்பை கொண்டு வகுத்தால் வரும் மதிப்பு BMI என்று கூறப்படுகிறது. கீழே உள்ள சமப்பாடு (equation) அதனை விளக்கும்.

BMI = Kg/m2

உடல் எடை(கிலோகிராமில்) / (உடல் உயரம்) 2

இந்த சமன்பாட்டில் ஒருவரின் BMI-ஐ கணக்கெடுத்து வரும் மதிப்பீட்டை பொருத்து ஒருவரின் உடல் பருமன் வகைப்படுத்தப்படும். அந்த வகைப்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BMI மதிப்பு உடல் பருமன் வகை
25-லிருந்து 30 வரை அதிக எடை
30-லிருந்து 35 வரை சுமாரான உடல் பருமன்
35-லிருந்து 40 வரை மோசமான உடல் பருமன்
40-க்கும் மேல் மிக மோசமான உடல் பருமன்

 

BMI குறித்து மேலும் விரிவாக வாசிக்க வேண்டும் என்றால் இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.

http://www.springfieldwellnesscentre.com/body-mass-index-bmi/

எந்தெந்த உடல் பருமன் வகையினருக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை கைகொடுக்கும்?

  • மோசமான உடல் பருமன் உடையவருக்கு (BMI 35-லிருந்து 40 வரை உள்ளவர்களுக்கு) உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, இதய சம்பந்தப்பட்ட பலவீனங்கள், போன்றவை இருந்தால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப் படுகிறது.
  • ஆனால் ஒருவரின் BMI 40-க்கும் மேல் இருக்கும்போது அவருக்கு உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, போன்றவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப் படுகிறது.

சுருங்க சொல்லவேண்டும் என்றால் மோசமான உடல் பருமனையும், மிக மோசமான உடல் பருமனையும் உடையவர்களுக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையின் நன்மைகள்

  • மோசமான உடல் பருமனையும், மிக மோசமான உடல் பருமனையும் உடையவர்கள் உடல் பயிற்சி செய்ய முடியாத நிலையை அடைந்து இருப்பார்கள். அதனால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.
  • பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை, co-morbid conditions என்று சொல்லக்கூடிய உடல் பருமனால் ஏற்படும் நோய்களான நீரிழிவு நோய் (diabetes), உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, போன்ற நோய்களிருந்து விடுதலையை தருகிறது.
  • பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையால் ஏற்படும் உடல் எடை குறைப்பு, உடல் பயிற்சிகளால் ஏற்படும் உடல் எடை குறைப்பை விட வேகமாக நடைபெறும்.
  • அதே போல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையால் ஏற்படும் உடல் எடை குறைப்பு, அதிக ஆண்டுகள் நீடிக்கும் தன்மை உடையது. ஆனால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு, அறுவை சிகிச்சை நிபுணர் கூறும் உணவுக் கட்டுப்பாட்டுடன், மிதமான உடல் பயிற்சிகளும் செய்தால் மட்டுமே இந்த நல்ல நிலையை தக்க வைக்க முடியும். அதேபோல மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை அறவே விட்டுவிடவும் வேண்டும். அப்போது தான் உங்கள் எடை குறைப்பு நிலையாக இருக்கும்.

முடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.

Call Now