உலகளவில் பருமனான பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிக எடை அல்லது பருமனான பிரிவின் கீழ் வரும் இந்தியர்களின் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது, அதிகரித்தும் வருகிறது. உலக சுகாதார நிறுவனமானது உடல் பருமனை ஒரு நோயாகவே அங்கீகரித்துள்ளது. அதை ஒரு Slow Pandemic என்று அழைப்பதில் தவறில்லை. உடல் பருமனாக இருப்பதன் ஆபத்துகளில் ஒன்று கர்ப்பம் ஆகாமல் இருக்கும் அதிக சாதித்தியக்கூறுகள் ஆகும். இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது என்றாலும் கூட, இந்த கட்டுரை பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனுக்கும் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்புகளை மட்டும் விவாதிக்கிறது. தொடர்ந்து படிக்கவும்.
பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனுக்கும் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்புகள்
- Polycystic ovary syndrome என்று சொல்லப்படும் PCOD பிரச்சனைகள் தான் உடல் பருமனான பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சம்பந்தப்பட்ட முதல் பிரச்சனை ஆகும்.
- உடல் பருமனாகி இருப்பதால், அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களுக்கு பொதுவாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வம் குறைவதும் ஒரு காரணமாக அறியப்படுகிறது.
- பருமனான பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் ஆணின் விந்தணுவானது பொதுவாக அந்த பெண்ணின் கருப்பையில் உருவாகும் கருமுட்டையின் அருகே செல்வதற்கே கூட பல சமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது. விந்தணு பெண்ணின் யோனிக்கு உள்ளே சென்று கருமுட்டையின் அருகே செல்வதற்கே பெரும்பாடாக இருப்பதால் பருமனான பெண்கள் கர்பம் ஆவதில் உள்ளபடியே சிக்கல் உள்ளது.
- மாதவிடாய் சுழற்சி என்று சொல்லப்படும் Menstrual cycle ஒரு நல்ல ஹார்மோன் சமநிலையால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் லெப்டின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே, அதிக உடல் எடையையும், பருமனையும் கொண்டுள்ள பெண்களுக்கு அதிக அளவிலான லெப்டின் சுரக்கிறது. லெப்டின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, மாதவிடாய் சுழற்சியின் சீரான தன்மையை பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாதபோது, கர்ப்பம் தரிக்காமல் போவதில் உள்ள வாய்ப்பு அதிகமாகிறது.
- அதிகப்படியான வயிற்று கொழுப்பு இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை இன்சுலின் மூலம் குறைக்க முடியாத போது இந்த நிலை ஏற்படுகிறது. பாலின ஹார்மோன்களின் அளவு குறைதல் (பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்) மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய இரண்டும் தொடர்புடையதாக அறியப்படுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பின் விளைவாக உருவாகும் நிலைமைகள் மருத்துவ ரீதியாக ஹைப்பர் ஈஸ்ட்ரோஜெனிசம் (hyperestrogenism) மற்றும் ஹைபராண்ட்ரோஜெனிசம் (hyperandrogenism) என்று அழைக்கிறார்கள். இந்த ஹைபராண்ட்ரோஜெனிசம் ஆண்களுக்கு ஏற்படும் நிலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலைமைகள் எல்லாவற்றையும், எந்த சந்தேகமும் இல்லாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியே ஏற்படுத்துகிறது.
- கொழுப்பு திசுவானது, கொழுப்பு அமிலங்கள் (FFA), சைட்டோகைன்கள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது. இவை லெப்டினுடன் சேர்ந்து கருப்பை மற்றும் எண்டோமெட்ரியம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கலாம்.
- மேலே உள்ள அனைத்து காரணிகளும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு பங்களிக்கின்றன. பல நாடுகளில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பை தெளிவாக நிறுவியுள்ளன. பருமனான பெண்கள் கருத்தடை முறைகளை நிறுத்திய பிறகு ஒரு வருடத்திற்குள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்பதையும் இந்த ஆய்வுகள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.
- Pcos
- ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பைகள் மூலம் முட்டை வெளியிடப்படாமல் இருக்கும் அனோவுலேஷன் (anovulation) என்ற நிலை ஏற்படுவதன் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, பிஎம்ஐ (BMI) அளவு 27க்கு மேல் இருக்கும் பெண்களில் இந்த non-ovulation என்று சொல்லப்படும் கருமுட்டை உருவாகாத நிலை குறிப்பாக அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
- பல பருமனான பெண்கள் கருமுட்டையை வெளியேற்றினாலும், அவர்கள் வெளியேற்றும் கருமுட்டைகளின் தரம் கணிசமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புள்ளிவிவரப்படி சொல்லவேண்டும் என்றால், BMI அளவு 35 உள்ள ஒரு பெண் கருத்தடை செய்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 26% குறைவு. அதேபோல, BMI அளவு 40 உள்ள ஒரு பெண், கருத்தடை செய்வதை நிறுத்திய ஒரு வருடத்திற்குள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் 43% குறைவு ஆகும்.
- IVF முறைகளைப் பயன்படுத்தி கருத்தரிக்க முயலும் பருமனான பெண்களுக்கு என்று வரும்போதும் இதுவே உண்மை ஆகும். அதிக எடை (overweight) கொண்ட பெண்களில் IVF செய்துக்கொண்டவர்களுக்கு குழந்தை பிறப்புக்கான வாய்ப்பு 9% குறைகிறது என்று தரவு கூறுகிறது. அதே பருமனான பெண்களில், இந்த வாய்ப்பு 20% ஆக மேலும் குறைகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எடை இழப்பு முறைகள் (Weight loss) அதிக எடை அல்லது பருமனான பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிக்க வாய்ப்பளிக்கிறது. அதிக எடை மற்றும் பருமனான பெண்கள் தாங்கள் செய்யும் உடற்பயிற்சிகளும், நல்ல உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பது உடல் எடை இழப்புக்கு உறுதியாக பங்களிக்கும். ஆனால் கடுமையான உடை பருமன் உள்ள, தாயாக விரும்பும் பெண்களுக்கு, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை இழப்பு என்பதே சிறந்த ஒரு தேர்வாக இருக்கும் என்று சொல்லவேண்டும்.