கட்டுடல், ஆரோக்கியம் – இரண்டும் வேறுபட்டதா?
ஜிம்மிற்கு செல்லும் இளைஞர்கள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. WHO-ன் படி நோய் இல்லாததால் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. உடல், மனம், சமூக நல்வாழ்வு (Physical, Mental and Social mental being) ஆகிய மூன்றையும் அமையப்பெற்ற ஒருவரே ஆரோக்கியமானவர் என்று அழைக்கப்படுகிறார். மறுபுறம், உடற்தகுதி என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமே ஆகும். எனவே உடல் தகுதி உள்ள ஒருவர் அடிப்படையில் ஆரோக்கியமாக இல்லாமல் கூட இருக்கலாம். அதேபோல், ஆரோக்கியமாக இருப்பவர் கட்டுடல் இல்லாமலும் இருக்கலாம். கட்டுடலுடன் இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் தெளிவாக இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஆகும். மேலும் அலசுவோம்.