18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

ஹெர்னியா என்பதே தசைச்சுவரில் ஏற்படும் ஓட்டையின் காரணமாக உள்ளே இருக்கும் உறுப்புகள் வெளியே துருத்தப் படுவதே ஆகும். ஆகையால் ஹெர்னியா ஓட்டை சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சட்டையில் ஏற்பட்ட கிழிசலை இதனோடு ஒப்பிட முடியும். எப்படி கிழிசல் ஏற்பட்ட சட்டையை தைக்க வேண்டுமோ அதே போன்று ஹெர்னியா ஏற்பட்ட பகுதியை அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்க இயலும்.

ஒருவரின் ஹெர்னியா சிறிதாக இருந்தால் அது மெல்ல மெல்ல பெரிதாக மாறும் சூழலே அதிகம்.  ஹெர்னியா ஓட்டை நடுத்தரமாக இருந்தால் உள்ளிருக்கும் உறுப்புகள் சிக்கிக்கொண்டு பிரச்சனை அதிகமாகலாம். அப்படி சிக்கும் உறுப்பு அனேகமாக சிறுகுடலாகத்தான் இருக்கும். ஹெர்னியா ஓட்டை பெரிதாக இருந்தால் உள் உறுப்புகள் வெளியே தள்ளப்படும் போது அதிகமான வலி ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரோடு கலந்து பேசுங்கள்

உங்களது நாளாந்த வேலைகளை செய்யமுடியாமல் உங்களுக்கு இருக்கும் ஹெர்னியா தடுக்கின்றது என்றால் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொள்வது புத்திசாலித்தனம். ஆனால் ஹெர்னியா இருந்தும் பெரிதாக உங்களுக்கு அது கஷ்டம் கொடுக்கவில்லை, அதே சமயம் எந்தவிதமான வலியையும் அது ஏற்படுத்தவில்லை என்றால் உங்களது அறுவை சிகிச்சை நிபுணர் காத்திருப்பதில் தவறு ஒன்றுமில்லை என்று கூறுவார். ஹெர்னியா பற்றிய புரிதலும், அது மோசமானால் விளையக்கூடிய சிக்கல்களைப் (Complications) பற்றிய புரிதலும் நன்றாகவே இருக்க வேண்டும்.

உள்ளுறுப்புகள் சிக்கிக் கொள்ளும் பட்சத்தில் காத்திருப்புக்கு இடமே இல்லை. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறுவை சிகிச்சை நிபுணர் கண்டிப்பாக உங்களிடம் சொல்லுவார். ஏனென்றால் சிக்கிக்கொண்ட உள்உறுப்புகள் மேலும் பல சிக்கல்களை வரவழைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட கொண்டுவிடலாம். அதனால்தான் உடனடியாக ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொள்ள உங்களை கேட்டுக்கொள்வார்.

உங்களிடம் மருத்துவ காப்பீடு இருக்கும்பட்சத்தில், ஹெர்னியாவினால் உறுப்புகள் சிக்கவில்லை, சிறிது காலம் அதனால் காத்திருக்கலாம் என்றாலும்கூட அது பெரிதாகும் வரை காத்திருக்காமல் உடனடியாக அறுவை சிகிச்சையை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஹெர்னியா இருக்கின்றது என்று தெரிந்த பின்னும் கூட மருத்துவக் காப்பீடு வாங்கலாம். ஆனால் அப்படி வாங்கும்போது உங்களுக்கு ஹெர்னியா இருக்கின்றது என்று மருத்துவக் காப்பீட்டு படிவத்தில் தெரியப்படுத்துங்கள். இப்படி தெரியப்படுத்தினால் சில ஆண்டுகாலம் காத்திருப்புக்குப் பின் ஹெர்னியா அறுவை சிகிச்சையை மருத்துவ காப்பீடு மூலமே செய்து கொள்ளலாம். ஆனால் சிக்கலான ஹெர்னியா இருக்குமானால் நீங்கள் காத்திருப்பு எல்லாம் கொடுக்க முடியாது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதே இதற்குத் தீர்வாகும். அதேபோல மருத்துவ காப்பீடு சொல்லும் காத்திருப்பு ஆண்டுகாலம் மிக அதிகம் என்று உங்களுக்குத் தோன்றினால் மருத்துவ காப்பீட்டை எல்லாம் பொருட்படுத்தாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறீர்கள் என்றாலும் அல்லது அங்கேயே தங்கி வேலை செய்ய போகிறீர்கள் என்றாலும் அந்த நாடுகளில் மருத்துவ முறைகள் பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை என்றாலும் இங்கேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டு பின் வெளிநாடு செல்லுங்கள்.

முடிவு

ஹெர்னியா தன்னால் குணமாகும் ஒரு நோய் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு நோயே இல்லை. இது உடல் தசையில் ஏற்படும் ஒரு கிழிசல் தான். அதனால் இந்த கிழிசலை சரிசெய்ய அறுவை சிகிச்சை ஒன்றே வழி. காரணங்கள் எதுவும் இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் ஹெர்னியா அறுவை சிகிச்சை நிபுணர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

Call Now