குழந்தைகளுக்கு ஏற்படும் ஹெர்னியா – கண்டுபிடிப்பதும், குணப்படுத்துவதும்
ஹெர்னியா என்றால் வயிற்று பகுதியில் உள்ள திசு படலத்தில் கிழிசல் ஏற்பட்டு உள்ளிருக்கும் உறுப்புகளும், ஏனைய திசுக்களும் வெளியே துருத்தப்படுவது ஆகும். அவ்வாறு துருத்திய பகுதியில் வீங்கியது போல தோற்றம் தரும். சிறுவர்களுக்கும், சிறுமியருக்கும் ஹெர்னியா ஏற்படலாம் என்பது வியப்பான விஷயம் இல்லை. அது நடக்கக் கூடியது தான். சில சமயங்களில் குழந்தைகளும் ஹெர்னியாவோடு பிறக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய வயதில் ஏற்படும் ஹெர்னியாக்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் முதலில் இதற்கான சரியான அறிகுறிகளை கண்டறிவதே மிக முக்கியம் ஆகும். சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் இங்குவினால் ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும், தொப்புளில் ஏற்படும் அம்பலிக்கல் ஹெர்னியாவும் இரண்டு வித ஹெர்னியாக்கள் ஆகும்.