18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

குழந்தைகளுக்கு ஏற்படும் ஹெர்னியா – கண்டுபிடிப்பதும், குணப்படுத்துவதும்

ஹெர்னியா என்றால் வயிற்று பகுதியில் உள்ள திசு படலத்தில் கிழிசல் ஏற்பட்டு உள்ளிருக்கும் உறுப்புகளும், ஏனைய திசுக்களும் வெளியே துருத்தப்படுவது ஆகும். அவ்வாறு துருத்திய பகுதியில் வீங்கியது போல தோற்றம் தரும். சிறுவர்களுக்கும், சிறுமியருக்கும் ஹெர்னியா ஏற்படலாம் என்பது வியப்பான விஷயம் இல்லை. அது நடக்கக் கூடியது தான். சில சமயங்களில் குழந்தைகளும் ஹெர்னியாவோடு பிறக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய வயதில் ஏற்படும் ஹெர்னியாக்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் முதலில் இதற்கான சரியான அறிகுறிகளை கண்டறிவதே மிக முக்கியம் ஆகும். சிறார்களுக்கும், குழந்தைகளுக்கும் இங்குவினால் ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும், தொப்புளில் ஏற்படும் அம்பலிக்கல் ஹெர்னியாவும் இரண்டு வித ஹெர்னியாக்கள் ஆகும்.

குழந்தைகளுக்கு எப்படி இங்குவினால் ஹெர்னியா ஏற்படுகிறது?

கருவாக இருக்கும்போதே, இங்குவினால் கால்வாய் என்று சொல்லப்படும் “தொடை அடிவயிறு இணைப்புக் கால்வாய்” பகுதி இருக்கும். இந்த கால்வாயானது வயிற்றுப பகுதியில் இருந்து பிறப்புறுப்பு வரை செல்லும். ஆண் குழந்தைகளுக்கு இந்த குழாய் வழியாகத் தான் விரைகள் விரைப்பைக்குள் இறங்குகின்றன. வழக்கமாக, குழந்தையின் இங்குவினால் கால்வாய் பிறப்பிற்குப் பிறகு இயல்பாக மூடிக்கொள்ளும். ஆனால் சில சமயங்களில் அவ்வாறு நடப்பதில்லை. இப்படி மூடாமல் இருக்கும் இங்குவினால் கால்வாய் வழியாக குடல் போன்ற உள்ளுறுப்புகள் துருத்திக் கொண்டு வருவதுண்டு. இதை தான் இங்குவினால் ஹெர்னியா என்று சொல்வார்கள். இது ஆண் குழந்தைகளுக்கே பெரும்பாலும் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு எப்படி அம்பலிக்கல் ஹெர்னியா ஏற்படுகிறது?

கரு நிலையில் குழந்தை இருக்கும்போது அதற்கான ஊட்டம் தொப்புள்கொடி வழியாக செல்கிறது. குழந்தை பிறந்தவுடன், இந்த தொப்புள்கொடி வெட்டப்பட்டு சிறிது விட்டு கிளிப் செய்யப்படுகிறது. விடுபட்ட தொப்புள்கொடி பொதுவாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். தொப்புளுக்குள் இருக்கும் ஓட்டையும் மூடிக்கொள்ளும். சில குழந்தைகளுக்கு இப்படி மூடுவதில்லை. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், தொப்புள்கொடியில் தொற்று ஏற்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும் இது பெரும்பாலும் நிகழ்கிறது. இந்த சிறிய ஓட்டை வழியாக குடல் போன்ற உள்ளுறுப்புகள் துருத்திக் கொண்டு வருவதுண்டு. இப்படி தான் குழந்தைகளுக்கு அம்பலிக்கல் ஹெர்னியா ஏற்படுகிறது.

இங்குவினால் அல்லது அம்பலிக்கல் ஹெர்னியா இருப்பது எப்படி கண்டுபிடிக்கப் படுகிறது?

குழந்தையை பெற்ற தாய் தான் முதலில் தனது குழந்தைக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்சனையையும் கவனிப்பார். தொப்புள்கொடியில் ஹெர்னியா என்றால் தொப்புளில் அதிகமாக வீக்கம் இருப்பதை தாய் தான் முதலில் கண்டறிவார். குழந்தை வெளிக்கு செல்லும்போதோ,சிறுநீர் கழிக்கும்போதோ அந்த வீக்கம் பல்கிப்பெருகுவதையும், குழந்தை அழுவதையும் தாய் கண்டிப்பாக கவனிப்பார். இங்குவினால் ஹெர்னியாவை பொறுத்தவரை வெளிக்கு செல்லும்போதோ, சிறுநீர் கழிக்கும்போதோ, குழந்தை முக்குவதை கவனிப்பார். அதே நேரம் ஆண் குழந்தைகளின் குறி பெருகி பிறகே சிறுநீர் கழிப்பதையும் கவனிப்பார்.

அதன் பிறகு மருத்துவர் குழந்தைக்கு உடல் சோதனை செய்யும்போது ஏதாவது ஹெர்னியா இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுவார். வழக்கமாகவே மருத்துவர் பரிசோதனை செய்யும்போது இரண்டு வகை ஹெர்னியாக்களும் இருக்கின்றனவா என்று பார்ப்பார். சில சமயங்களில் தொப்புளுக்கு அருகாமையிலும் வீக்கம் இருக்கக்கூடும். அதே போல இங்குவினால் ஹெர்னியா ஏற்பட்டு இருந்தால் கவட்டை பகுதி என்று சொல்லப்படும் பிறப்புறுப்பிற்கு சற்றே மேலே காணப்படும் பகுதியில் வீக்கம் இருப்பதை தாய் கவனிக்கலாம்.

சில சமயங்களில் ஹெர்னியா மிக சன்னமாக இருந்தால் மருத்துவரே உள்ளிருப்பவற்றை மெல்ல அழுத்தி உள்ளே தள்ளிவிடுவார். அப்படி நேரும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கான தேவை இருக்காது. இந்த உள்ளழுத்தத்தை ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தான் செய்யவேண்டும். கண்டிப்பாக வேறு யாரும் செய்யக் கூடாது. ஒருக்கால் ஹெர்னியாவை உள்ளழுத்த முடியவில்லை என்றால், ஹெர்னியா நிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள மருத்துவர் குழந்தையின் வயிற்றுப பகுதி எக்ஸ்ரே அல்லது அல்டரா சவுண்ட் அறிக்கைகளை கேட்பார். இந்த ரிபோர்டுகளில் ஹெர்னியா ஓட்டைக்குள் என்ன மாதிரியான உள்ளுறுப்புகள், எந்தெந்த கோணங்களில் சிக்கி இருக்கின்றன என்று துல்லியமாக பார்க்க மிகவும் உதவுகின்றன.

குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஹெர்னியாவை எப்படி குணப்படுத்துவது?

ஒருக்கால் உள்ளழுத்தம் செய்தும் ஹெர்னியா போகவில்லை என்றால், வேறு சில ஆப்ஷன்கள் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார். ஏற்பட்டு இருக்கும் ஹெர்னியா தொப்புள்கொடி வகை என்றால் உள்ளே ஏதாவது உள்ளுறுப்புகள் சிக்கிக் கொண்டு இருக்கிறதா என்று அறுவை சிகிச்சை நிபுணர் பார்ப்பார். அப்படி இருந்தால் அது எமெர்ஜென்சியாக கருதப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். அவ்வாறு சிக்கல் ஒன்றும் இல்லை என்னும் பட்சத்தில் மூன்றாண்டு காலம் வரை காத்திருக்கலாம் என்று கூறுவார். சில சமயங்களில் ஆறு மாதத்தில் இருந்து, ஒரு ஆண்டுக்குள் இந்த ஹெர்னியா தானாக தீர்ந்து விடுவதுண்டு. அப்படி இல்லாமல் குழந்தையின் மூன்று வயது வரை இருக்கிறது என்றால் அதற்கு பின்னர் கண்டிப்பாக அறுவது சிகிச்சை மூலமாக தீர்வு காண வேண்டிவரும்.

அதேபோல ஏற்பட்டு இருக்கும் ஹெர்னியா இங்குவினால் வகை என்றால் உள்ளே ஏதாவது உள்ளுறுப்புகள் சிக்கிக் கொண்டு இருக்கிறதா என்று அறுவை சிகிச்சை நிபுணர் பார்ப்பார். அதோடு சேர்த்து விரைப்பைக்குள் விரைக் கொட்டைஇல்லாமை (undescended testis), ஃபிமோஸிஸ் என்று சொல்லப்படும் ஆண்குறி தோல் இறுக்கம் இருக்கிறதா என்றும் அறுவை சிகிச்சை நிபுணர் பார்ப்பார். ஆண்குறி  தோல் இறுக்கம் இருந்தால் குறிக்கு மேல் இருக்கும் மேல்தோலை கீழே இறக்க முடியாது. இங்குவினால் ஹெர்னியா இருப்பது உறுதியானால் ஹெர்னியோடோமி (herniotomy) அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் விரைப்பைக்குள் விரை இறங்குவது முதலில் உறுதி செய்யப்படுகிறது. அதன் பிறகே ஹெர்னியோடோமி செய்யப்படுகிறது. பெரியவர்களுக்குசெய்யப்படு herniorrhaphy அல்லது hernioplasty வகை அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு செய்யப்படுவதில்லை. ஒருவேளை குழந்தைக்கு ஃபிமோஸிஸ் இருந்தால், சுன்னத் என்று சொல்லக்கூடிய சுற்றிவெட்டல் அறுவை சிகிச்சையும் சேர்த்தே செய்யப்படுகிறது.

Call Now