நீங்கள் ஹெர்னியாவுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன ஆகும்?
தசை அடுக்கில் ஒரு கீறல் இருப்பதால், உள் குடல் அல்லது கொழுப்பு திசுக்கள் அதன் வழி துருத்தும்போது குடலிறக்கம் ஏற்படுகிறது. இது தானாகவே குணமடைய முடியாத ஒரு நோய்நிலை ஆகும். பலரால் அறுவை சிகிச்சையை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட தாமதப்படுத்த முடிகிறது. மிகச்சிலருக்கு ஒரு சிறிய குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படுவதே இல்லை.
குடலிறக்கத்திற்கான சிறந்த சிகிச்சை முறை எந்த சந்தேகமும் இல்லாமல் அறுவை சிகிச்சை மட்டுமே. குடலிறக்க அறுவை சிகிச்சையின் உடனடித் தேவை வயது, குடலிறக்கத்திற்குள் இருக்கும் உறுப்புகள் தசைகளின் நிலை, உங்கள் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. ஆனால் உறுதியாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், அது என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்யும்போது குடலிறக்கத் துளை காலப்போக்கில் பெரிதாகிறது. அவை மிகவும் வலிமிகுந்தவையாகவும், சில சமயங்களில் உயிர் அபாயங்களையும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளன.