18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

நீங்கள் ஹெர்னியாவுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன ஆகும்?

தசை அடுக்கில் ஒரு கீறல் இருப்பதால், உள் குடல் அல்லது கொழுப்பு திசுக்கள் அதன் வழி துருத்தும்போது குடலிறக்கம் ஏற்படுகிறது. இது தானாகவே குணமடைய முடியாத ஒரு நோய்நிலை ஆகும். பலரால் அறுவை சிகிச்சையை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட தாமதப்படுத்த முடிகிறது. மிகச்சிலருக்கு ஒரு சிறிய குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படுவதே இல்லை.

குடலிறக்கத்திற்கான சிறந்த சிகிச்சை முறை எந்த சந்தேகமும் இல்லாமல் அறுவை சிகிச்சை மட்டுமே. குடலிறக்க அறுவை சிகிச்சையின் உடனடித் தேவை வயது, குடலிறக்கத்திற்குள் இருக்கும் உறுப்புகள் தசைகளின் நிலை, உங்கள் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. ஆனால் உறுதியாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், அது என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் செய்யும்போது குடலிறக்கத் துளை காலப்போக்கில் பெரிதாகிறது. அவை மிகவும் வலிமிகுந்தவையாகவும், சில சமயங்களில் உயிர் அபாயங்களையும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளன.

எல்லா ஹெர்னியாவிற்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதா?

அனைத்து குடலிறக்கங்களுக்கும் உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படாது. ஆனால் குடலிறக்கம் ஏற்பட்டால் அல்லது உங்களுக்கு ஏற்கனவே குடலிறக்கம் இருப்பதாக தெரிந்தால் அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம். குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை எல்லா நிகழ்வுகளிலும் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது தான். குடலிறக்கம் உள்ள பெரும்பாலானவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் அவர்கள் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதாக தரவுகள் சொல்கின்றன. குடலிறக்கம் பெரிதாகி தசைகள் பலவீனமடையும் வரை குடலிறக்க அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துவது என்பது, அறுவை சிகிச்சைக்கும், அதற்கு பிறகு ஏற்படவேண்டிய ஆரோக்கிய சீராக்கத்திற்கும் பெரும் சவாலானதாக அமையலாம்.

ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை அல்லாத அணுகுமுறைகள்

கோர்செட், பைண்டர் அல்லது டிரஸ் அணிவது போன்ற அறுவைசிகிச்சை அல்லாத அணுகுமுறைகள் குடலிறக்கத்தின் மீது மென்மையான அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அது குடலிறக்கத்தை அலுங்காமல் அப்படியே வைக்க உதவலாம். அறுவைசிகிச்சை அல்லாத முறைகள் ஆகியவை வலி அல்லது அசவுகரியத்தை குறைக்கலாம். நீங்கள் அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக இருந்தாலோ அல்லது நீங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தாலோ இந்த முறைகளை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான இங்குவினல் குடலிறக்கங்கள் மென்மையான மசாஜ் மற்றும் அழுத்தத்துடன் மீண்டும் வயிற்றுக்குள் தள்ளப்படலாம். ஆனால் இது ஒரு மருத்துவ நிபுணராலோ அல்லது அவரின் வழிகாட்டுதலின் கீழோ மட்டுமே செய்யப்பட வேண்டும். குடலிறக்கத்தை பின்னுக்குத் தள்ளும்போது ஏதாவது தவறு நிகழவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால்தான் குடலிறக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான இத்தகைய அறுவைசிகிச்சை அல்லாத அணுகுமுறை நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல வலியுறுத்தப்படுகிறது.

ஹெர்னியா அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தினால் என்ன ஆகும்?

தாமதங்கள் மயக்க மருந்துக்கு குறைவாக பொருந்துவது, வலியை அதிகரிப்பது, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடல் ஹெர்னியா மெஷ்ஷை ஏற்றுக்கொள்ளுவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஹெர்னியா இருப்பதால் அது ஏற்படுத்தும் அசவுகரியம், காணக்கூடிய வீக்கத்திற்கு அப்பால், உடல் உழைப்பு செய்யும்போது அது ஏற்படுத்தும் வலி, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி ஆகியவற்றை கணக்கில் எடுக்க வேண்டும்.

சில நேரங்களில் குடலிறக்கத்திற்குள் குடல் முறுக்கிக் கொள்வது அறுவை சிகிச்சை அவசரநிலைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால் இந்த மாதிரியான எமெர்ஜென்சிகள் தேவையற்றதாகவும், ஆபத்தாகவும் இருக்கலாம். எனவே உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையைப் பின்பற்றி உடனடியாக அதனை மேற்கொள்வது எப்போதும் விவேகமானது ஆகும்.

குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அது ஏற்படுத்தும் சிக்கல்களும் பெரியதாக இருக்கலாம்

குடல் துருத்தியிருக்கும் துளைப்பகுதியில் உள்ள தசைச்சுவர் மூடப்பட்டால், அது நெரிக்கப்பட்ட குடலிறக்கத்தை (strangulated hernia) ஏற்படுத்தும். இந்த நிலை குடலுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. குடலிறக்கத்தை கவனிக்காமல் விடுவது அல்லது அறுவை சிகிச்சை பெறாமல் இருப்பது குடல் அடைப்பு (intestinal blockage), குடலிறக்க அடைப்பு (hernia incarceration) அல்லது நெரிக்கப்பட்ட குடலிறக்கம் (strangulated hernia) போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

குடலிறக்க குடல் அடைப்பு ஏற்படும்போது, குடலிறக்கம் சாதாரண கழிவுப்பொருட்களை வெளியேற்ற முடியாத அளவுக்கு பிணைக்கப்படுகிறது. பொதுவாக இந்த சூழ்நிலையில் குடலிறக்கம் நெரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அதாவது அது துளைக்குள் சிக்கிக்கொண்டது என்று பொருள்படும். இது ஒரு மருத்துவ எமெர்ஜென்சியை உருவாக்குகிறது. இதைத் தாண்டி, குடல் நெரிபடும் போது இரத்த ஓட்டம் இந்த மாட்டிக்கொண்ட திசுக்களில் இருந்து துண்டிக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாமல், இந்த திசுக்கள் இறந்துவிடும்.  இதற்கு கண்டிப்பாக அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும்.

உடனடி சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நெக்ரோடைசிங் என்டோரோகோலிடிஸ் என்று சொல்லப்படும் necrotizing enterocolitis (குடலின் கடுமையான வீக்கம்) மற்றும் செப்சிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு  நெரிக்கப்பட்ட குடலிறக்கம் வழிவகுக்கும்.

எனவே இப்படியான சிக்கல்கள் காரணமாக இதுபோன்ற மருத்துவ அவசரநிலைகள் ஏற்படுவதற்கு முன்பே உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சையை செய்து கொள்வது விவேகமானது. மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த அவசரகால சூழ்நிலைகள் திடீரென்று உங்களுக்கு எங்கே வேண்டுமானாலும் வரக்கூடும். எனவே உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சையை மென்மேலும் தாமதப்படுத்தாமல் குடலிறக்க அறுவை சிகிச்சையை உடனே செய்து கொள்ளுங்கள்.

Call Now