மூலம் (Piles) என்றால் என்ன? மூலம் எப்படி ஏற்படுகிறது?
ஆசனவாய் பொதுவாகவே அதிக ரத்த நாளங்களை கொண்டு இருக்கும். அதோடு தசைகளும், நார்திசுக்கட்டிகளும் (fibrous tissues) சேர்ந்தே இருக்கும். இந்த மூன்றும் ஆசனவாய் பகுதிக்கு ஒரு மெத்தை போன்ற (cushion) இலகு தன்மையை கொடுக்கும். ஆங்கிலத்தில் இந்த பகுதியை Hemorrhoid (ஹெமராயிடு) என்று கூறுவார்கள். இந்த சிக்கலான ஹெமராயிடு திசுக்கள், அளவுக்கு அதிகமான விரிந்த ரத்த நாளங்கள் கொண்டு இருந்தால் அந்த நிலையை “மூலம்” என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் இதனை Piles அல்லது Hemorrhoid என்று அழைக்கிறார்கள்.