18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் ஹெர்னியாவுக்கான சிகிச்சை

சுகப்பிரசவ முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது சிறந்தது என்றாலும், குழந்தையின் முறையற்ற நிலை, கருவிற்கு ஏற்படும் துன்பம், உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் போன்ற சில மருத்துவ நிலைமைகள் பெண்களை சாதாரண பிரசவத்திற்கு அனுமதிக்காது. இத்தகைய சமரச சூழ்நிலைகளில், நீங்கள் சிசேரியன் செய்துக் கொள்ளுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். சிசேரியன் அல்லது சி-செக்ஷன் (C-Section) என்று அழைக்கப்படுவது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இது தாயின் வயிறு மற்றும் கருப்பையில் சிறிய கிழிசல் ஏற்படுத்தப்பட்டு அந்த அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வைப்பதாகும். மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பிரசவத்துடன் தொடர்புடைய சிக்கல்கள், தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறுவை சிகிச்சை முறை உதவி புரிந்துள்ளன என்றால் அது மிகை ஆகாது. சிசேரியன் செய்துக் கொண்டால் சிலருக்கு அரிதாக ஹெர்னியா ஏற்படலாம்.

ஹெர்னியா என்றால் என்ன?

வயிற்றுத் தசை சுவரில் பலவீனமான பகுதி வழியாக குடல் அல்லது வயிற்றில் உள்ள உறுப்புகளின் ஒரு பகுதி பிதுங்கி வெளியேறும்போது குடலிறக்கம் அல்லது ஹெர்னியா ஏற்படுகிறது. குடலிறக்கம் பொதுவாக தானாக சரியாவதில்லை. மருந்துகளால் கூட அதற்கு சிகிச்சையளிக்க முடியாது. குடலிறக்கங்களுக்கு சிகிச்சையளிக்க நிச்சயமாக அறுவை சிகிச்சை முறையே தேவைப்படும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் குடலிறக்கத்தை இன்சிஷனல் வகை குடலிறக்கம் என்று கூறுவார். எனவே சிசேரியன் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் எந்த குடலிறக்கமும் இன்சிஷனல் ஹெர்னியாவாக மட்டுமே இருக்க முடியும்.

சிசேரியனுக்குப் பிறகு இன்சிஷனல் ஹெர்னியா ஏற்பட காரணங்கள் யாவை?

  • சிசேரியனுக்குப் பிறகு சில சமயங்களில் அறுவைசிகிச்சைக்கு செய்த கீறல் குடலிறக்கம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். இது ஒரு சில பெண்களின் உடல் வாகுடன் சம்பந்தப்பட்டு இருக்கலாம்.
  • அறுவை சிகிச்சைக்கு கீறல் ஏற்படுத்தப்பட்ட இடத்தில் ஏற்படும் தொற்று
  • பளு தூக்குதல், தரையில் உட்காருதல், குந்திய நிலையில் மலம் கழித்தல் போன்ற கடுமையான உடல் செயல்பாடுகள் குறித்த மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றாமல் முறையற்ற முறையில் இந்த செயல்பாடுகளை செய்தல்.
  • பருமனான அல்லது அதிக எடை கொண்ட பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கக்கூடும். இது பிரசவத்தின்போது மேலும் அதிகமாகிறது. அவர்களுக்கு சிசேரியன் செய்யும்போது அறுவை சிகிச்சையால் இடப்படும் கீறல் மூலம் புறணி தள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
  • பொதுவாக பலவீனமான வயிற்று திசுக்களைக் கொண்ட பெண்கள் சிசேரியன் அறுவைக்குப் பிறகு அவர்களது குடல்கள் தளர்ந்து துருத்த நேரிடலாம்.
  • அடிக்கடி கர்ப்பம் தரிப்பது, எடை அதிகமான பெரிய குழந்தைகள் அல்லது இரட்டையர்கள், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைத் தாங்குவது வயிற்று தசைகளை பலவீனப்படுத்தியிருக்கும். இவை ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் குடலிறக்க அபாயத்தை அதிகரிக்கும்.
  • கர்ப்ப காலத்தில் கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளுக்கு குடலிறக்கம் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும். இந்த ஆபத்துக்கு முதன்மை காரணம் தொற்று ஏற்படுவதால் ஆகும்.
  • சில சந்தர்ப்பங்களில், வெற்றிகரமான பிரசவத்தை செய்ய அறுவை சிகிச்சையின் போது கீறலின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். இது குடலிறக்கத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
  • குடலிறக்கம் இருந்ததற்கான காரணமே இன்சிஷனல் ஹெர்னியா மீண்டும் வரும் அல்லது திரும்பி வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சிசேரியனுக்குப் பிறகு ஏற்படும் இன்சிஷனல் ஹெர்னியாவுக்கான சிகிச்சை

வழக்கமாக, இன்சிஷனல் ஹெர்னியாவிற்கு கிடைக்கக்கூடிய ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சை மட்டுமே ஆகும். முன்னர் குறிப்பிட்டபடி, எந்த வகையான குடலிறக்கத்திற்கும் சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை, அவை அறுவை சிகிச்சை இல்லாமல் தானாகவே போவதுமில்லை.

பொதுவாக, சிசேரியன் செய்துக் கொண்ட பிறகு ஏற்படும் இந்த வகை ஹெர்னியா பிரசவத்திற்குப் பிறகு பல மாதங்கள் கழித்தே கண்டறியப்படுகிறது. எனவே, இன்சிஷனல் வகை குடலிறக்கம் இருப்பதை நோயறிதல் மூலம் உறுதிப்படுத்தினால், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹெர்னியா சிக்கலலான நிலையை அடையும் வாய்ப்பு இந்த வகை குடலிறக்கத்திற்கு அதிகம் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

அறுவைசிகிச்சை ஒரு முழுமையான திறந்த அறுவை சிகிச்சை அணுகுமுறையிலோ அல்லது லேபராஸ்கோபிக் அணுகுமுறையிலோ செய்யப்படுகிறது. எந்த வகையில் செய்தால் நன்மை என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.

Call Now