18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கல்லீரலிலும் கற்கள் ஏற்படுமா?

ஆம் பித்தப்பை போன்றே கல்லீரலிலும் கற்கள் உருவாகலாம். பித்தநீர் கல்லீரலில் தான் சுரக்கிறது. அந்த பித்தநீர் கெட்டியானால் கற்கள் போன்று ஆகிவிடும். பித்தநீரின் இந்த நிலை மாற்றம் கல்லீரலிலேயே நடக்கும் பட்சத்தில் கல்லீரலில் கற்கள் உருவாகும். அப்படி உருவாகும் கற்களை பற்றியும், அதற்கு உண்டான சிகிச்சை முறைகளையும் இந்த கட்டுரையில் அலசுவோம்.

கல்லீரல் கற்களும், பித்தப்பை கற்களும் ஒன்றா?

மருத்துவ உலகை பொறுத்தவரை இரண்டு கற்களும் ஏறக்குறைய ஒன்றே தான். இரண்டிலும் அதே போல இரண்டு வகைகளான கொழுப்பு கற்களோ (cholesterol stone), நிறமி கற்களோ (pigment stone), அல்லது இரண்டும் சேர்ந்த கலவையோ தான் காணப்படுகிறது. ஒரே வேறுபாடு என்னவென்றால், முன்னது கல்லீரலிலேயே காணப்படுவது, பின்னது பித்தப்பையில் காணப்படுவது ஆகும்.

கல்லீரலில் கற்கள் எப்படி உருவாகின்றன?

முன்பு சொன்னது போல, பித்தப்பையில் எப்படி கற்கள் உருவாகின்றனவோ, அதே போல தான் கல்லீரலிலும் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கட்டியாகும் பட்சத்திலேயே இந்த கற்கள் உருவாகின்றன. கல்லீரலில் காணப்படும் குழாய்களில் இந்த கற்கள் ஏற்பட்டு அடைப்பை உருவாக்குகின்றன. ஆனால் கல்லீரலில் பித்தநீரானது அடர்த்தி குறைந்து சுரந்த நிலையிலேயே இருக்கும். ஆகையால் தான் கல்லீரலில் கற்கள் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வு.

ஆயினும் சில பேருக்கு அப்படி நிகழத்தான் செய்கிறது. கல்லீரலில் பித்தநீர் கற்கள் உருவாகி அவை பித்தப்பைக்குள் இறங்குகின்றன என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். உண்மை என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வியப்பான உண்மை என்னவென்றால், கிழக்காசிய நாடுகளான, சீனா, தைவான், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழ்வோருக்கு தான் இந்த கல்லீரலில் கற்கள் அதிகப்படியாக நிகழ்கிறது என்று தரவுகள் கூறுகின்றன.

பித்தப்பை கற்களை காட்டிலும் கல்லீரல் கற்கள் ஏன் ஆபத்தானவை?

  • கல்லீரலில் உருவாகும் கற்கள் அதில் காணப்படும் சிக்கலான நாளங்களில் மாட்டிக்கொண்டு அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அடைப்பு பித்தநீரை கல்லீரலிலேயே தேக்குகிறது. இந்த அடைப்பு ஒரு வித அழுத்தத்தை கல்லீரலுக்குள் உருவாக்குகிறது.
  • ஒரேயொரு கல் கூட கல்லீரலில் மாட்டிக்கொள்ளுமானால், கல்லீரலை வீக்கநிலைக்கு (inflamation) கொண்டுபோய்விடும்.
  • இது மேலும் மோசமாகி, கல்லீரலில் சீழ்கட்டியை (abscess) உருவாக்கலாம். இந்த நிலை மேலும் மோசமடையும் பட்சத்தில், கல்லீரலானது செயலிழக்கும் நிலைக்கும் போகலாம்.

கல்லீரல் கற்களுக்கான சிகிச்சை

இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்றுவது தான். MRI ஸ்கேன் ரிப்போர்ட் வைத்து கற்கள் எங்கே இருக்கின்றன என்று கவனித்து அறுவை சிகிச்சை நிபுணர் அவைகளை கல்லீரலில் இருந்து அகற்றுவார். ஒரு வேலை கல்லீரலின் ஒரு பகுதியையே நிறைய கற்கள் பாதித்து இருந்தால், அந்த பகுதியை அறுவை சிகிச்சை நிபுணர் வெட்டி அகற்றிவிடுவார். நம் மனித உடலில் கல்லீரல் மட்டுமே திரும்ப வளரக்கூடிய ஒரு உறுப்பு என்ற வகையில் ஒரு பாதிப்பும் இதனால் ஏற்படாது.

சென்னையின் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் மாறன் அவர்கள் கல்லீரலில் கற்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். கல்லீரல் மிகவும் மென்மையான ஒரு உறுப்பு என்பதால், அதில் கற்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவைகளை அகற்ற மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும் என்று கூறுகிறார்.

Call Now