18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

ஹெர்னியா இருந்தால் எடுக்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

வயிற்றுப்பகுதியில் ஏற்படும் ஹெர்னியா என்பது நம் குடலோ, அல்லது கொழுப்பு தசைகளோ, நம் வயிற்றுப்பகுதி தசைகளில் உள்ள தளர்வாலோ, ஒட்டையாலோ, அதன் வழியில் பிதுங்கி வெளியே தள்ளிக்கொண்டு தெரிவது தான். ஆறு விதமான வயிற்றுப்பகுதி ஹெர்னியா ஏற்படுகிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஏதேனும் ஒரு வகை ஹெர்னியா உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை தற்காத்துக்கொள்ள நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • அதிக எடை தூக்கவே வேண்டாம்

அதிகமாக எடையை தூக்குவதால், ஏற்கனவே தளர்ந்து போயிருக்கும் வயிற்றுப்பகுதி தசைகள் மேலும் தளர்வடைந்து, ஹெர்னியாவை அதிகமாக்கலாம். இதனால் நம் குடலோ, அல்லது கொழுப்பு தசைகளோ மேலும் வெளியே பிதுங்கலாம். அதிக எடை தூக்குவது என்று நாம் சொல்லுவது ஜிம்முக்கு போய் தூக்கும் எடையை மட்டுமில்லை. தினந்தோறும் நாம் வீட்டில் செய்யும் வேலைகளான வாலி நிறைய தண்ணீரை தூக்குவது, அரிசி மூட்டையை தூக்குவது, எரிவாயு சிலிண்டரை தூக்குவது, சிறு குழந்தைகளைத் தூக்குவது போன்ற எடைகளை தூக்கும் செயல்களைக் கூட குறிக்கிறோம்.

எடையை தூக்க வேண்டும் என்றால் கூட, நாம் நமது உடலை முன்புறமாக வளைந்து குனிந்து எடையை தூக்குவது கூடவே கூடாது. மாறாக, சீராக கீழே மெதுவாக குனிந்து, எடையை கால்களுக்கு கொடுத்து தூக்கும் முறை தான் சரியானது. எடையின் பாரத்தை முதுகுக்கு கொடுக்கவே கூடாது.

  • வளைந்து குனிவதை தவிருங்கள்

வளைந்து குனிவது, எடை தூக்கி உட்கார்ந்து எழுந்திருக்கும் உடல் பயிற்சி (Squatting) முறைகள், தரையில் உட்காருவது போன்ற செயல்களை முழுவதும் தவிருங்கள். ஏனென்றால் வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு ஹெர்னியா அதிகமாகலாம் அல்லது சிக்கலாகலாம்.

  • ஆஸ்துமா, மூச்சிறைப்பு போன்றவற்றில் கவனம் தேவை

மூச்சிரைப்ப்பு பிரச்சனை உங்களுக்கு இருந்தால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்கு தூசியினால் ஒவ்வாமை (allergy) இருந்தால் தூசு அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம். மூச்சை வேகமாக உள்ளிழுத்து விடுவது, அதிகமாக தும்முவது, இருமுவது உங்கள் ஹெர்னியா ஓட்டையை அதிகமாக்கலாம்.

  • மலச்சிக்கல் வாய்ப்பை தவிருங்கள்

மலச்சிக்கலை கொடுக்கக்கூடிய உணவுகளை தவிருங்கள். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கழிப்பறை மேற்கத்திய பாணியில் இருந்தால், தரையில் உயரமான ஸ்டூல் போட்டு அதன் மீது கால்வைத்த படி மலம் கழிக்க முற்படுங்கள். இந்த முறையில் மலம் இலகுவாக வெளித்தள்ளப்படும். மலச்சிக்கல் இருந்தால் வெந்நீர் அருந்தியோ, மருத்துவர் கொடுத்த மலச்சிக்கலுக்கு உரிய மருந்துகளையோ பயன்படுத்தியோ மலம் கழிக்க முயற்சி செய்யுங்கள்.

  • சிறுநீர் வெளியேற்றம்

உங்களுக்கு ஃபிமோசிஸ் (Phimosis) அல்லது ப்ரோஸ்ட்ரேட் (Prostrate) போன்ற பிரச்சனைகள் இருந்தால் சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்பட வேண்டிவரும். இப்படி சிரமப்பட்டால் ஹெர்னியா அதிகமாகலாம். பொதுவாக ப்ரோஸ்ட்ரேட் (Prostrate) பிரச்சினையை முதலில் தீர்த்த பிறகு ஹெர்னியா பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.

  • உங்கள் உடல் எடை

அதிகமான உடல் எடை உங்கள் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. சுமாராக உடற்பயிற்சி செய்து உடல் எடை அதிகம் கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எடை தூக்குவது ஆகாது என்பதால், நடைபயிற்சி, நீச்சல், ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கூரிய ஸ்க்ரூ டிரைவர் போன்று செயல்பட்டு உங்கள் ஹெர்னியா பகுதியை மேலும் தளர்வாக்கலாம். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, அதிகமான கொழுப்பு, உள்ளே வைக்கப்படும் ஹெர்னியா மெஷ் (Hernia Mesh) நழுவிப்போவதற்கோ, தையல் பிரிந்து போவதற்கோ கூட காரணமாக சில சமையங்களில் அமைவதுண்டு.

  • புகை, மது இவற்றை தவிருங்கள்

புகை பிடித்தல் அதிகமான இருமலை சமையங்களில் வரவழைக்கலாம். இது வயிற்றுப்பகுதிக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கக்கூடியது. அதனால் புகைபிடிப்பதை முற்றிலும் தவிருங்கள். மது அருந்தினால் நாம் செய்வது நம் பிடிமானத்தில் இல்லாமல் போவதால் வயிற்றுப்பகுதிக்கு நம்மை அறியாமல் அதிகமாக அழுத்தத்தை கொடுக்க நேரலாம். அதனால் மது அருந்துவதையும் முற்றிலும் தவிருங்கள்.

Call Now