18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

வயிற்று புற்றுநோய் பற்றிய மேலும் விவரங்கள்

வயிற்றின் உட்புறப் புறணியான சளி அடுக்கில் (muscos layer) புற்றுநோயை உருவாகும் போது, ​​அது அடினோகார்சினோமா என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை புற்றுநோயானது பல்வேறு வயிற்று புற்றுநோய் வகைகளில் முதன்மையானது ஆகும். வயிற்று புற்றுநோயின் விகிதத்தில் இது கிட்டத்தட்ட 90% -95% ஆகும். இந்த வகை வயிற்று புற்றுநோயை ஆராய்ந்து அதை சுருக்கமாக புரிந்துகொள்வோம்.

அடினோகார்சினோமா என்றால் என்ன?

நம் உடலில் சளி உற்பத்தி செய்யும் எந்தவொரு சுரப்பி உயிரணுக்களிலும் தொடங்கும் தன்மையுடைய புற்றுநோய் வகையை குறிக்கும். வயிற்றுப் புறணி மட்டுமே நம் உடலில் சளி உற்பத்தி செய்யும் சுரப்பி இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். மார்பகம் (பெண்களின் விஷயத்தில்), பெருங்குடல், நுரையீரல், கணையம், புரோஸ்டேட் (ஆண்களின் விஷயத்தில்) போன்ற உறுப்புகள் அனைத்தும் சளி (columnar cells) உற்பத்தி செய்கின்றன. எனவே அடினோகார்சினோமா என்ற புற்றுநோய் வகை இந்த உறுப்புகளில் தோன்றி பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆக, சளி உற்பத்தி செய்யும் வயிற்றுப் புறணி பகுதியில் தோன்றும் புற்றுநோயை வயிற்று அடினோகார்சினோமா என்று அழைக்கிறார்கள்.

வயிற்று அடினோகார்சினோமாவின் காரணங்கள் யாவை? அவை எவ்வாறு உருவாகின்றன?

புற்றுநோய் உண்டாக்கக்கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்வது, ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவை உட்கொள்வது, உடல் பருமன், புற்றுநோய் இருக்கும் குடும்ப வரலாறு, எச்.பைலோரி (பாக்டீரியா) தொற்று, புகைபிடித்தல் போன்ற பல காரணங்கள் வயிற்று அடினோகார்சினோமாவை ஏற்படுத்தலாம். அவை புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான ஆபத்து காரணிகளாக இருக்கலாம்.

அணுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அணுக்களில் உள்ள டி.என்.ஏ கொண்டுள்ளது. வயிற்று அணுக்களில் உள்ள மரபணுக்களில் (டி.என்.ஏ) மாற்றம் ஏற்படும்போது வயிற்றில் புற்றுநோய் தொடங்குகிறது. அவை புற்றுநோயாக மாறும் போது, ​​டி.என்.ஏவில் உள்ள சமிஞைகள் மாறி, ​​வயிற்றுப் புறணியின் ஆரோக்கியமான செல்கள் இறக்கவும், புற்றுநோய் செல்கள் விரைவாக வளரவும், தொடர்ந்து வாழவும் வழிமுறைகள் மாறுகின்றன. இந்த புற்றுநோய் செல்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பெருகி ஆக்கிரமித்து ஆரோக்கியமான வயிற்று உயிரணுக்களை அழிக்கத் தொடங்குகின்றன.

வயிற்றின் சளி அடுக்கு புறணியில் ஏற்படும் புற்றுநோய் மெதுவாகவே உருவாகிறது. இது உருவாக பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஆரம்பத்தில் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்களுக்கு சளி புறணி அணுக்கள் உட்படுகின்றன. அவ்வாறு உட்படும்போது ​​அவைகள் துரதிர்ஷ்டவசமாக எந்த அறிகுறிகளையும் கொடுப்பதில்லை. இந்த காரணத்திற்காக வயிற்று அடினோகார்சினோமா பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் போகலாம். அதனால்தான் இந்த வகை வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறிப்பாக அதிகமாக உள்ளது.

வயிற்று அடினோகார்சினோமாவை எவ்வாறு தடுப்பது?

– உங்களுக்கு வயிற்று புற்றுநோயின் குடும்ப வரலாறோ, வேறு ஏதேனும் வகை புற்றுநோய் இருந்ததற்கான குடும்ப வரலாறோ இருந்ததா என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் புற்றுநோய் இருந்திருக்குமேயானால், புற்றுநோயைப் பெறுவதற்கான ஆபத்து சதவீதம் உங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். நீங்கள் 40 வயதுக்கு மேல் இருந்தால், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்துக்கொள்ளுங்கள். இது புற்றுநோயைக் கண்டறியக்கூடிய தரமான ஒரு பரிசோதனை செயல்முறையாகும்.

– உங்கள் எடையை அடிக்கடி சரிபார்க்கவும். ஆரோக்கியமான பி.எம்.ஐ (BMI) யினை பராமரிக்கவும். உடல் பருமனாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடற்பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருந்தால், ஏரோபிக் பயிற்சிகளை தொடங்கலாம்.

– ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் உணவை சத்துள்ளதாகவும், நார்ச்சத்து உள்ளதாகவும் வைத்திருங்கள். தினசரி அடிப்படையில் உங்கள் உணவில் அதிக பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் சிறுதானியங்களை சேர்க்கவும். அவற்றில் நார்ச்சத்து மற்றும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

– குப்பை உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், புகைந்த (smoked) உணவுகள், இனிப்புப் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணையில் பொரித்த உணவுப் பொருட்கள், அதிலும் குறிப்பாக மீண்டும் மீண்டும் எண்ணையில் பொரித்து எடுத்த உணவுப்பொருட்கள், பார்பிக்யூ செய்யப்பட பொருட்கள் ஆகியவற்றைக் குறைத்தல் நலம். உண்மையில், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது கூட நல்லது தான்.

–           புகை பிடிப்பதை நிறுத்துங்கள். வயிற்று புற்றுநோயையும் உள்ளடக்கிய பல வகையான புற்றுநோய்களின் அபாயங்களை அதிகரிக்கும் ஒரு பழக்கம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Call Now