18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

மூல நோய் மீண்டும் வராமல் தடுக்க 12 வாழ்க்கை முறை மாற்றங்கள்

மூல நோயின் வலியை உணர்ந்த நபர்களுக்கு, அது மீண்டும் வராமல் தடுப்பது ஒரு முக்கிய குறிக்கோளாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, பரவலாக நிகழும் இந்த சிக்கலைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சில உள்ளன. இந்த கட்டுரையில், மூல நோய் மீண்டும் வராமல் தடுக்க 12 நடைமுறை வழிகளைப் பார்ப்போம்.

1. அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுதல்

மூல நோயைத் தடுக்கும் போது, ஃபைபர் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுடைய ஒரு சிறந்த நண்பன். இது இலகுவான குடல் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. மலம் கழிக்கும் போது முக்கி முனகும் தேவையை குறைக்கிறது.

2. நீரேற்றத்துடன் இருங்கள்

போதுமான தண்ணீர் உங்கள் நார்ச்சத்துள்ள உணவுக்கு உதவுகிறது. மலத்தை மேலும் மென்மையாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

3. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

உடல் செயல்பாடு, குடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. அதோடு மட்டுமில்லாமல் அது உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. இது மூல நோய் தடுப்புக்கு உதவுகிறது.

4. நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்கவும்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மலக்குடல் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இடைவெளி விட்டு நாள் முழுவதும் நடக்க பழகுங்கள்.

5. குடல் இயக்கத்தை தாமதப்படுத்தாதீர்கள்

சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலைப் புறக்கணிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். இது மூல நோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும்.

6. நல்ல ஆசனவாய் சுகாதாரத்தை கடைபிடிக்கவும்

குடல் இயக்கங்களுக்குப் பிறகு, ஆசனவாய் பகுதியை மென்மையாக கழுவுதல் எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

7. எடையை சரியாக தூக்குங்கள்

முக்குவதை தவிர்க்க, உங்கள் தொழில்முறைக்கோ, வாழ்க்கை முறைக்கோ அதிக எடை தூக்குதல் தேவைப்பட்டால், சரியான தூக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தி எடைகளை தூக்குங்கள்.

8. உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிக்கவும்

அதிக உடல் எடையானது உங்கள் உடலின் கீழ் பாதியில், குறிப்பாக உங்கள் மலக்குடல் பகுதியில், கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது இந்த அழுத்தத்தை போக்க உதவும்.

9. முக்குவதைத் தவிர்க்கவும்

குடல் அசைவுகளின் போதும், கனமான பொருட்களை எடுத்துச் செல்லும் போதும், முக்குவது மூல நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

10. தளர்வான, சுவாசிக்கக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்

இறுக்கமான ஆடைகள் ஆசனவாய் பகுதியில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம். எனவே தளர்வான, சுவாசிக்கக்கூடிய துணிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

11. வயிற்றுப்போக்கை திறம்பட நிர்வகிக்கவும்

மூலநோய் இருக்கும்போது, வயிற்றுப்போக்கு கூட மலச்சிக்கலைப் போலவே தொந்தரவு தரும். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, இந்த நிலையை நீங்கள் சரியாகக் கையாளுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு வந்த வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டை மீறுவதாக நினைத்தாலோ, அல்லது உங்களுக்கு ஆதரவு தேவைப்படும்போதோ உங்கள் மருத்துவரை அணுகவும்.

12. ஓவர்-தி-கவுண்டர் மருந்துகளை சில சமயங்களில் பயன்படுத்தவும்

லோஷன்கள், வைப்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கும் மருந்துகள் நிவாரணம் அளிப்பதோடு, சில சமயங்களில் மூல நோய் வராமல் தடுக்கவும் செய்யும். ஆனால் நீங்கள் ஏதேனும் உள் மருந்துகளைப் பயன்படுத்தினால் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின்படி மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இது போல ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மூல நோய் மீண்டும் வராமல் தடுக்கலாம். இந்த வழிமுறைகள், உணவு மாற்றங்களிலிருந்து வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான ஆசனவாய் சுகாதாரம் வரை, மீண்டும் மூல நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் மூல நோயால் அவதிப்பட்டால், தனிப்பட்ட ஆலோசனைக்கும், சிகிச்சை தேர்வுகளுக்கும்,  உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதுமே நல்லது. இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நீண்டகால மலக்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதன்மூலம் நோயுடன் தொடர்புடைய அசௌகரியத்தை குறைக்கலாம்.

Call Now